"இந்தியாவுக்கு நம்பர் 4 பேட்ஸ்மேன் தேவையில்லை" - ஹர்பஜன் சிங் ட்விட்டுக்கு பதிலளித்த யுவராஜ் சிங்!

Updated: 07 September 2019 16:45 IST

இந்தியா ஏ-வில் தென்னாப்பிரிக்கா ஏ-க்கு எதிராக சாம்சன் 48 பந்துகளில் 91 ரன்கள் எடுத்தார். இதில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ஏ வென்றது.

"India Don
நான்காவது இடத்தில் பேட் செய்த யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் வெள்ளிக்கிழமை வெளியிட்ட ட்விட்டிற்கு பதிலளித்தார். © AFP

தனது சர்வதேச வாழ்க்கையின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதிக்காக நான்காவது இடத்தில் பேட் செய்த யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் வெள்ளிக்கிழமை வெளியிட்ட ட்விட்டிற்கு பதிலளித்தார். ஒருநாள் போட்டியில் நான்காவது இடத்தில் சஞ்சு சாம்சனை பரிந்துரை செய்துள்ளார் ஹர்பஜன் சிங். "ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் ஏன் ஆட கூடாது.. அவருக்கு நல்ல டெக்னிக் மற்றும் சிறந்த யோசனை உள்ளது.. அவர் தென்னாப்பிக்கா ஏ அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்டார்" என்று ஹர்பஜன் சிங் ட்விட் செய்தார். அவருடைய ட்விட்டுக்கு பதிலளித்த யுவராஜ் சிங்," டாப் ஆர்டர் சிறப்பாக உள்ளது, 4ம் இடத்தில் ஆட வீரர் தேவையில்லை." என்றார்.

இந்தியா ஏ-வில் தென்னாப்பிரிக்கா ஏ-க்கு எதிராக சாம்சன் 48 பந்துகளில் 91 ரன்கள் எடுத்தார். இதில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ஏ வென்றது.

உலகக் கோப்பைக்கு பிறகு, ஸ்ரேயாஸ் ஐயர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டு போட்டிகளில் 136 ரன்கள் குவித்தார். இந்த சிறப்பான போட்டி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் இருவரையும் மகிழ்ச்சியளித்துள்ளது.

கே எல் ராகுல் மற்றும் விஜய் சங்கர் இருவரும் உலகக் கோப்பையில் செயல்பட தவறினர்.

டெஸ்ட் போட்டிகளில் நான்காவது இடத்தில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், தொடக்க வீரர்களில் சிறிது காலம் பிரச்னை இருந்தது.

கே எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் இருவரும் டெஸ்ட் போட்டிகளில் டாப் ஆர்டரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதுகுறித்து பேசிய ராத்தோர், டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரர்களுக்கு இடையில் சாதாரணமாக போட்டியே உள்ளது என்றார்.

கரீபியன் தீவுகளில் நான்கு இன்னிங்ஸ்களில் ராகுல் 44, 38, 13 மற்றும் 6 ரன்கள் குவித்தார். டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், 50க்கும் அதிகமான ரன்கள் குவித்தார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
பன்ட்டை ஆதரித்த யுவராஜ் சிங்... அவருக்கு பதிலளித்த ஆஸி. வீரர் டீன் ஜோன்ஸ்
பன்ட்டை ஆதரித்த யுவராஜ் சிங்... அவருக்கு பதிலளித்த ஆஸி. வீரர் டீன் ஜோன்ஸ்
"ரிஷப் பன்ட் குறித்து மீடியாவில் கருத்து சொல்வதை நிறுத்துங்கள்" - யுவராஜ் சிங்!
"ரிஷப் பன்ட் குறித்து மீடியாவில் கருத்து சொல்வதை நிறுத்துங்கள்" - யுவராஜ் சிங்!
"ஸ்டூவர்ட் பந்தில் யுவராஜ் நிகழ்த்திய மேஜிக்" - நினைவுகூர்ந்த ரவி சாஸ்திரி!
"ஸ்டூவர்ட் பந்தில் யுவராஜ் நிகழ்த்திய மேஜிக்" - நினைவுகூர்ந்த ரவி சாஸ்திரி!
"6 பந்தில் 6 சிக்ஸ்": யுவராஜ் சிங்கின் டி20 சாதனை நிகழ்ந்த நாள் இன்று!

Advertisement