சொந்த மண்ணில் இந்தியாதான் கில்லி : ஆஸி. கேப்டன் பின்ச்

Updated: 19 February 2019 11:11 IST

பிப்ரவரி 24ம் தேதி துவங்கும் இந்திய தொடருக்காக ப்ரத்யேக உத்திகள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச்

India vs Australia: Aaron Finch Cautious Ahead Of Limited-Over Series Against India
ஆஸ்திரேலிய கேப்டன் ஆஸ்திரேலியாவில் நடந்த தொடரில் மூன்று போட்டிகளிலும் சேர்த்து 26 ரன்கள் மட்டுமே குவித்தார். © AFP

பிப்ரவரி 24ம் தேதி துவங்கும் இந்திய தொடருக்காக ப்ரத்யேக உத்திகள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச். விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை ஆஸ்திரேலியா 2 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் சந்திக்கவுள்ளது. 

"எங்காவது சிறிய தவறு செய்தீர்கள் என்றால் வருத்தப்பட வேண்டியிருக்கும். இந்தியா சொந்த மண்ணில் ஒருநாள் போட்டிகளில் சிறந்த அணி. கோலி தலைமையில் அணியின் செயல்பாடு அபாரமாக உள்ளது" என்றார் பின்ச்.

மேலும், "அவர்களை சரியான திட்டம் மற்றும் நம்பிக்கையோடு அணுகினால் வீழ்த்த முடியும். இந்த முறை ஆஸ்திரேலியா அந்த மனநிலையில் தான் களமிறங்குகிறது" என்றார்.

முன்னதாக இந்த வருட ஆரம்பத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி சாதனை படைத்தது. டெஸ்ட் தொடரையும் 72 ஆண்டுகளில் முதல்முறையாக வென்றது.

ஆஸ்திரேலிய கேப்டன் ஆஸ்திரேலியாவில் நடந்த தொடரில் மூன்று போட்டிகளிலும் சேர்த்து 26 ரன்கள் மட்டுமே குவித்தார்.

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர் பிப்ரவரி 24ம் தேதியும், ஒருநாள் தொடர் மார்ச் 2ம் தேதியும் துவங்கவுள்ளது. 

ஒருநாள் தொடர் ஹைத்ராபாத், நாக்பூர், ராஞ்சி, மொஹாலி மற்றும் டெல்லியில் நடக்கிறது. டி20 தொடர் விசாகப்பட்டிணம் மற்றும் பெங்களூருவில் நடைபெறுகிறது. 

ஆஸ்திரேலிய அணி ஸ்மித், வார்னர், ஸ்டார்க் இல்லாமல் இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்திய அணியை பொறுத்தமட்டில் முழு பலத்தோடு களமிறங்கிறது. மேலும் நியூசிலாந்து தொடரில் 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஓய்வளிக்கப்பட்ட கேப்டன் கோலி அணிக்கு திரும்பியுள்ளார். 

Comments
ஹைலைட்ஸ்
  • இந்தியா, ஆஸ்திரேலியாவை ஒருநாள் போட்டியில் வென்றது
  • சரியான திட்டம் மற்றும் நம்பிக்கையோடு அணுகினால் இந்தியாவை வீழ்த்த முடியும்
  • கோலி தலைமையில் அணியின் செயல்பாடு அபாரமாக உள்ளது: ஆரோன் பின்ச்
தொடர்புடைய கட்டுரைகள்
உலகக் கோப்பை 2019: நியூசிலாந்து - ஆஸி பலப்பரீட்சை! #Preview
உலகக் கோப்பை 2019: நியூசிலாந்து - ஆஸி பலப்பரீட்சை! #Preview
இங்கிலாந்தை தவிடுபொடியாக்கி அரையிறுதிக்குள் நுழைந்த ஆஸ்திரேலியா! #Highlights
இங்கிலாந்தை தவிடுபொடியாக்கி அரையிறுதிக்குள் நுழைந்த ஆஸ்திரேலியா! #Highlights
“வங்க தேசத்தின் சேஸிங் அள்ளு கிளப்புச்சுங்க…”- ஆஸி., கேப்டன் ஓப்பன் டாக்
“வங்க தேசத்தின் சேஸிங் அள்ளு கிளப்புச்சுங்க…”- ஆஸி., கேப்டன் ஓப்பன் டாக்
"பால் ஸ்டெம்பில் பட்டும் அவுட் இல்லை என்பது ஆர்ச்சர்யமளிக்கிறது" - கோலி
"பால் ஸ்டெம்பில் பட்டும் அவுட் இல்லை என்பது ஆர்ச்சர்யமளிக்கிறது" - கோலி
ஆடம் ஸம்பா மீதான சர்ச்சைக்கு விளக்கமளித்த ஆரோன் பின்ச்
ஆடம் ஸம்பா மீதான சர்ச்சைக்கு விளக்கமளித்த ஆரோன் பின்ச்
Advertisement