நியூசிலாந்து மண்ணில் 4-1 இந்த சாதனையை செய்யும் 3வது அணி இந்தியா

Updated: 03 February 2019 19:16 IST

ஏற்கனெவே நியூசிலாந்து மண்ணில் ஆஸ்திரேலியாவும், இலங்கையும் 4-1 என்ற கணக்கில் வென்றுள்ளன. ஆஸ்திரேலியா 1999லும், இலங்கை 2000லும் வென்றன

India Become 3rd Team To Achieve This ODI Feat In New Zealand
நியூசிலாந்துக்கு எதிரான தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்துள்ளது. © AFP

நியூசிலாந்தில் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி ஆடியது. இந்த தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்துள்ளது. இந்த சாதனையை செய்யும் மூன்றாவது அணி இந்தியாவாகும். ஏற்கனெவே நியூசிலாந்து மண்ணில் ஆஸ்திரேலியாவும், இலங்கையும் 4-1 என்ற கணக்கில் வென்றுள்ளன. ஆஸ்திரேலியா 1999லும், இலங்கை 2000லும் வென்றன.

இன்று நடந்த ஐந்தாவது ஒருநாள் போட்டியில் கடைசி விக்கெட்டாக போல்ட், புவனேஷ்வர் குமார்  பந்தில் ஷமியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். நியூசிலாந்து 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்தியா 35 ரன்கள் வித்தியாசத்தில் ஐந்தாவது ஒருநாள் போட்டியை வென்றது.

முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா, முதல் 18 ரன்களை சேர்ப்பதற்குள் டாப் ஆர்டரை இழந்தது. நடுவரிசை வீரர்களான பாண்ட்யா, விஜய் ஷங்கர், ராயுடுவின் பொறுப்பான ஆட்டத்தால் 250 ரன்களை கடந்தது. ராயுடு 90 ரன்னில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்.

ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக 5 சிக்ஸர்களுடன் 22 பந்தில் 45 ரன் குவித்தார். நியூசிலாந்து தரப்பில் ஹென்றி 4 விக்கெட்டுகளையும், போல்ட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் 253 ரன்கால் எடுத்தால் வெற்றி எந்ற இலக்குடன் ஆடத்துவஙகிய நியூசிலாந்து சரியான பார்ட்னர்ஷிப் இல்லாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. சாஹல் 3 விக்கெட்டுகளையும், பாண்ட்யா, ஷமி தலா 2 விக்கெட்டுகளையும், புவி, ஜாதவ் ஒரு விவிக்கெட்டையும் கைப்பற்றினர். நீஸம் மட்டும் கொஞ்சம் அதிரடியாக ஆடி 44 ரன்கள் சேர்த்தார். கேப்டன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் சரிவர ஆடாததும் அணியை தோல்விக்கு அழைத்து சென்றது.

இதன் மூலம் தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் வென்றது.

Comments
ஹைலைட்ஸ்
  • 5வது மற்றும் கடைசி போட்டியை 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது
  • 4-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா 1999லும், இலங்கை 2000லும் வென்றன
  • இந்தியா 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
கிரிக்கெட் வீரர் ஶ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து... காயமின்றி தப்பிய குடும்பத்தினர்!
கிரிக்கெட் வீரர் ஶ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து... காயமின்றி தப்பிய குடும்பத்தினர்!
"ஈகோவை கைவிடுங்கள்" - டெஸ்ட் போட்டியின் போது கோலி படிக்கும் புத்தகம்!
"ஈகோவை கைவிடுங்கள்" - டெஸ்ட் போட்டியின் போது கோலி படிக்கும் புத்தகம்!
கர்நாடகா ப்ரீமியர் லீக்: 8 விக்கெட்டுகள், 134 ரன்கள்... புது சாதனை படைத்த கிருஷ்ணப்பா கவுதம்
கர்நாடகா ப்ரீமியர் லீக்: 8 விக்கெட்டுகள், 134 ரன்கள்... புது சாதனை படைத்த கிருஷ்ணப்பா கவுதம்
டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் சாதனையை முறியடித்த பும்ரா!
டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் சாதனையை முறியடித்த பும்ரா!
"டெண்டுல்கரின் ஒரு சாதனையை கோலியாலும் முறியடிக்க முடியாது" - சேவாக்!
"டெண்டுல்கரின் ஒரு சாதனையை கோலியாலும் முறியடிக்க முடியாது" - சேவாக்!
Advertisement