லடாக்கில் சுதந்திர தினத்தை கொண்டாடிய தோனி!

Updated: 15 August 2019 13:45 IST

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இப்போது ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். லடாக்கில் இருக்கும் அவர், இந்தியாவின் 73வது சுதந்திர தினத்தை ராணுவ படையினருடன் கொண்டாடினார்.

MS Dhoni Celebrates 73rd Independence Day In Ladakh: Reports
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இப்போது ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். © Twitter

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இப்போது ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். லடாக்கில் இருக்கும் அவர், இந்தியாவின் 73வது சுதந்திர தினத்தை ராணுவ படையினருடன் கொண்டாடினார். ஆகஸ்ட் 5ம் தேதி, மத்திய அரசு ஆர்ட்டிகல் 370 அறிவித்து, ஜம்மு & காஷ்மீரில் இருந்து லடாக்கை பிரித்தது. 

புதன்கிழமை தோனி லடாக் சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. ராணுவ வீரர்களுடன் அவர் உடையாடினார். 38 வயதான தோனி, ராணுவ மருத்துவமனைக்கு சென்று அங்கிருக்கும் நோயாளிகளிடம் பேசினார்.

ஆகஸ்ட் 15-ம் தேதி வரை காஷ்மீர் பகுதியில் தோனி இருக்கும் ராணுவ குழு ரோந்து பணியை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராணுவப்படையுடன் தங்கியிருந்து பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளிலும் தோனி ஈடுபட உள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் தோனி பாராசூட் ரெஜிமெட்டில் நேற்று  இணைந்தார். காஷ்மீரில் நடக்கும் பயிற்சியில், தோனி இடம்பெற்றுள்ளார். இந்தப் பயிற்சி ஜூலை 31ம் முதல் ஆகஸ்ட் 15ம் வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கலோனலாக உள்ள கிரிக்கெட் வீரர் தோனி வரும் 31-ம் தேதி முதல் ரோந்து செல்கிறார். ஆகஸ்ட் 15-ம் தேதி வரை காஷ்மீர் பகுதியில் தோனி இருக்கும் ராணுவ குழு ரோந்து பணியை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராணுவப்படையுடன் தங்கியிருந்து பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளிலும் தோனி ஈடுபட உள்ளார்.

2015ம் ஆண்டில், ஆக்ரா பயிற்சி முகாமில் இந்திய ராணுவத்தில் ஐந்து ஆண்டுகள் பயிற்சி முடித்த பின்னர் தோனி ஒரு தகுதிவாய்ந்த பார்ட்ரூப்பர் ஆனார்.

என்டிடிவிக்கு கிடைத்த தகவல் படி, தோனி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 போட்டிகளுக்கு அவர் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அடுத்த ஆண்டு ஐபிஎல்லில் அவர் இணைவார் என்றும் கூறப்படுகிறது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ராணுவ வீரர்கள் பற்றி டிவி தொடரை தயாரிக்கவுள்ளார் தோனி!
ராணுவ வீரர்கள் பற்றி டிவி தொடரை தயாரிக்கவுள்ளார் தோனி!
பழைய இந்தி பாடலைப் பாடிய எம்.எஸ்.தோனி! Viral Video
பழைய இந்தி பாடலைப் பாடிய எம்.எஸ்.தோனி! Viral Video
"மறக்க முடியாத பயணம்" - சாக்‌ஷி தோனிக்கு நன்றி தெரிவித்த பாடகி ஜாஸ்ஸி கில்
"மறக்க முடியாத பயணம்" - சாக்‌ஷி தோனிக்கு நன்றி தெரிவித்த பாடகி ஜாஸ்ஸி கில்
"டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து தோனியிடம் கேளுங்கள்" - சவுரவ் கங்குலி
"டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து தோனியிடம் கேளுங்கள்" - சவுரவ் கங்குலி
"ஜனவரி வரை என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம்" - எதிர்காலம் குறித்து தோனி!
"ஜனவரி வரை என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம்" - எதிர்காலம் குறித்து தோனி!
Advertisement