சேவாக் விமர்சிக்கப்பட்ட ட்விட்டை ரீ-ட்விட் செய்த ரவீந்திர ஜடேஜா!

Updated: 08 October 2019 13:55 IST

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய வீரர்களை பாராட்டிய வீரேந்திர சேவாக், ட்விட்டரில் பதிவிட்டார்.

Ravindra Jadeja Retweets Fan Who Questioned Virender Sehwag For Not Praising Him
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஜடேஜா 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். © PTI

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய வீரர்களை பாராட்டிய வீரேந்திர சேவாக், ட்விட்டரில் பதிவிட்டார். ஆனால் அவர் தவறவிட்ட ஒரு பெயர் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரசிகர்கள் ஆல்ரவுண்டரை விலக்கியதை சுட்டிக் காட்டினர். பேட்டிங், பவுலிங் மற்றுல் ஃபீல்டிங்கில் ஜடேஜாவின் ஆட்டத்தை சேவாக் காணவில்லையா அல்லது அவர் மயக்கமடைந்தாரா என்று கேட்கப்பட்ட ஒரு ட்விட்டுக்கு, ஜடேஜா ரீட்விட் செய்தார்.

"@ImRo45 ரோஹித் ஷர்மாவுக்கு இது அருமையான டெஸ்ட் மேட்ச், டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்க நினைத்த கனவு பளித்துள்ளது. அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்," என்று இரட்டை சதம் குவித்த ரோஹித் ஷர்மாவை பாராட்டி போட்டி முடிந்த பின் சேவாக் பதிவிட்டார்.

"மாயங்க், ஷமி, அஸ்வின், புஜாரா ஆகியோரின் சில சிறந்த பங்களிப்புகளுடன் இது இந்தியாவுக்கு ஒரு சிறப்பான வெற்றியாகும்" என்று அவர் கூறினார்.

இந்திய முன்னாள் தொடக்க வீரரான சேவாக், ரவீந்திர ஜடேஜாவை ஏன் குறிப்பிடவில்லை என்று ரசிகர்கள் கேட்க தொடங்கினர். ​​அதி ஒருவர், ஜடேஜாவின் ஆட்டத்தின் போது சேவாக் மயக்க நிலையில் இருந்தாரா என்று கேட்டார்.

ரவீந்திர ஜடேஜா இந்த ட்விட்டை ரீ-ட்விட் செய்தார். இருப்பினும் ரசிகர்களுக்கு இது குழப்பத்தை ஏற்படுத்தியது.

சிலர் சர்ச்சையைத் தீர்ப்பதற்காக அவரை விமர்சித்தாலும், சேவாக் அவரது பெயரைக் குறிப்பிட மறந்துவிட்டார். மற்றவர்கள் அவரை ஆதரித்து விசாகப்பட்டினத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் அவரது செயல்திறனைப் பாராட்டினர்.

ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 30 மற்றும் ஒரு விரைவான 40 ரன்களை அடித்தார். அதே நேரத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார், முதல் இன்னிங்ஸில் அவர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், ஜடேஜா ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார். எய்டன் மார்க்ரமை அவுட்டாக்க ஒரு சிறப்பான ஒற்றை கை கேட்ச் பிடித்தார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
India vs Ban 1st Test Highlights - வங்கதேசத்தைத் தவிடுபொடியாக்கி இந்தியா வெற்றி!
India vs Ban 1st Test Highlights - வங்கதேசத்தைத் தவிடுபொடியாக்கி இந்தியா வெற்றி!
சஞ்சய் மஞ்ச்ரேகரின் "Being A Parent" ட்விட்டுக்கு எழுந்த விமர்சனம்!
சஞ்சய் மஞ்ச்ரேகரின் "Being A Parent" ட்விட்டுக்கு எழுந்த விமர்சனம்!
மூன்று டெஸ்ட் போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
மூன்று டெஸ்ட் போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
இந்தியா vs தென்னாப்பிரிக்கா: 3வது டெஸ்ட் மூன்றாவது நாள் #Scorecard
இந்தியா vs தென்னாப்பிரிக்கா: 3வது டெஸ்ட் மூன்றாவது நாள் #Scorecard
"இந்திய ஆடுகளங்கள் சலிப்பை ஏற்படுத்துகின்றன" - மைக்கேல் வாகன்
"இந்திய ஆடுகளங்கள் சலிப்பை ஏற்படுத்துகின்றன" - மைக்கேல் வாகன்
Advertisement