3வது டி20: தென் ஆப்ரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

Updated: 22 September 2019 22:06 IST

Live Score: பெங்களூரில் இந்த போட்டி நடைபெறுகிறது

Live Score, India Vs South Africa 3rd T20I, IND vs SA Live Match Updates: India Win Toss, Opt To Bat Against South Africa
Live Cricket Score, IND vs SA 3rd T20I: இந்தியா அணி 1-0 என முன்னிலை © BCCI

இந்தியா சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்கா அணி, இந்தியாவிற்கு எதிராக டி20, ஒடிஐ, டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டியானது மழையால் ரத்தானது. இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இன்று 3வது டி20 போட்டியாஅது பெங்களூரில் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. தென் ஆப்ரிக்கா அணியில் நார்ட்ஜிக்கு பதிலாக ஹெண்ட்டிக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். லைவ் ஸ்கோர்

லைவ் ஸ்கோர்கார்ட் தமிழில் 

முதலில் பேட்டிங் செய்த இந்தியாவிற்கு தவான் சிறப்பாக ஆடினார். ஆனால் மறுமுனையில் சீரான இடைவேளையில் விக்கெட்கள் சரிந்ததால் 20 ஓவர்களில் இந்தியா அணியால் 134 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.

135 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்கை சேஸ் செய்த தென் ஆப்ரிக்கா அணிக்கு அந்த அணியின் கேப்டனும் துவக்க வீரருமான டி காக் அதிரடி ஆட்டத்தை விளையாடினார். இறுதியில் தென் ஆப்ரிக்கா அணி 16.5 ஓவர்களில் 140 ரன்களை குவித்து 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி காக் அவுட் ஆகாமல் 79 ரன்கள் குவித்தார்.

இந்த வெற்றின் மூலம் டி20 தொடரானது 1-1 என சமனில் முடிந்தது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"4வது இடத்தில் யார் ஆட வேண்டும்?" - அமிதாப் பச்சனைப் போல் கேட்ட கவாஸ்கர்!
"4வது இடத்தில் யார் ஆட வேண்டும்?" - அமிதாப் பச்சனைப் போல் கேட்ட கவாஸ்கர்!
3வது டி20: தென் ஆப்ரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
3வது டி20: தென் ஆப்ரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
Advertisement