Listen to the latest songs, only on JioSaavn.com
 

IND vs NZ: மீம் மெட்டீரியலாக மாறிய கோலி பதிவிட்ட புகைப்படம்!

Updated: 17 February 2020 15:00 IST

கோலி பதிவிட்டுள்ள புகைப்படம் வழக்கமான ஒன்றாக இல்லாமல், புகைப்படத்தில் இருக்கும் மூவரும் முகத்தை வேறு சைகைகள் மூலம் வெளிப்படுத்தினர்.

IND vs NZ: Virat Kohlis Latest Tweet Provides Fans With "Next Meme Material"
விராட் கோலியின் இடுகையில் முகமது ஷமி மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் வித்தியாசமான முக சைகைகள் செய்தனர் © Twitter

நியூசிலாந்தில் இருக்கும் விராட் கோலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், அணி வீரர்களான முகமது ஷமி மற்றும் தொடக்க வீரர் பிரித்வி ஷா ஆகியோருடன் ஒரு புகைப்படத்தை பதிவிட்டார். போட்டிகள் இல்லாத நேரத்தில் தன் ரசிகர்களுடன் புகைப்படங்களை பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார். கோலியின் ரசிகர்கள் எப்போதுமே அவரது சமூக ஊடக பக்கங்களை எந்தவொரு புதிய தகவல்களுக்காக தேடுவார்கள், மேலும் இந்திய கேப்டன் படங்களையும் வீடியோக்களையும் இணையத்தில் பதிவேற்றுவதன் மூலம் அவற்றை உறுதி செய்கிறார். ஆனால், இப்போது கோலி பதிவிட்டுள்ள புகைப்படம் வழக்கமான ஒன்றாக இல்லாமல், புகைப்படத்தில் இருக்கும் மூவரும் முகத்தை வேறு சைகைகள் மூலம் வெளிப்படுத்தினர். அந்தப் புகைப்படத்தை,  “புதிய  போஸ்ட் அழகாக உள்ளது” என்று கோலி பதிவிட்டார்.

அந்தப் புகைப்படம் பதிவிட்டவுடன் ரசிகர்கள் பல மீம்ஸ்களால் இடுகையை நிரப்பினர்.

இந்த பதிவுக்கு ரசிகர் ஒருவர் எழுதினார்: "அடுத்த மீம்கான ஃபோட்டோ ", மற்றொருவர் "மீம்: புகைப்படம் நன்றாக உள்ளது!" என்றார்.

அடுத்ததாக இந்தியா நியூசிலாந்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. முதல் டெஸ்ட் வெல்லிங்டனில் 21-24ம் தேதிகளில் நடைபெறும்.

இந்த டெஸ்ட் போட்டிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கணக்கிடப்படும். இதற்கு முன்பு விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வென்று இந்தியா 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. நியூசிலாந்து 60 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது.

தொடரை 5 டி20 போட்டிகள் வெற்றியுடன் தொடங்கிய இந்தியா, அடுத்த ஒருநாள் போட்டி தொடரில் அனைத்து போட்டிகளையும் இழந்தது. இப்போது அந்த தோல்வியில் இருந்து மீண்டு வந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் அட்டவனையில் முதலிடத்தை தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்யும்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
“நானும் விராட் கோலியும் நண்பர்களாக இருந்திருப்போம்” - சோயிப் அக்தர்!
“நானும் விராட் கோலியும் நண்பர்களாக இருந்திருப்போம்” - சோயிப் அக்தர்!
விராட் கோலியின் ‘டைனோசர் நடை’ இப்போது சமூக வலைதளத்தில் பிரபலமான மீம்ஸ்!
விராட் கோலியின் ‘டைனோசர் நடை’ இப்போது சமூக வலைதளத்தில் பிரபலமான மீம்ஸ்!
விராட் கோலியை டிக்டாக்கில் டூயட் செய்யும்படி அழைத்த டேவிட் வார்னர்!
விராட் கோலியை டிக்டாக்கில் டூயட் செய்யும்படி அழைத்த டேவிட் வார்னர்!
அக்‌ஷய் குமாரின் பாடலுக்கு நடனமாடிய வார்னர்... சிரிக்கும் எமோஜிகளைப் பதிவிட்ட கோலி!
அக்‌ஷய் குமாரின் பாடலுக்கு நடனமாடிய வார்னர்... சிரிக்கும் எமோஜிகளைப் பதிவிட்ட கோலி!
தாயையும் டிக்டாக்கில் பார்ட்னராக சேர்த்துக்கொண்ட டேவிட் வார்னர்!
தாயையும் டிக்டாக்கில் பார்ட்னராக சேர்த்துக்கொண்ட டேவிட் வார்னர்!
Advertisement