Listen to the latest songs, only on JioSaavn.com
 

இறுதிப் போட்டியில் தோற்றும் போட்டி நாயகனான யஷஸ்வி ஜெய்ஸ்வால்!

Updated: 10 February 2020 13:43 IST

18 வயதான ஜெய்ஸ்வால், இறுதிப் போட்டியில் 88 ரன்களும், மொத்த தொடரில் 400 ரன்களும் பெற்று அதிக ரன்கள் குவித்த வீரர் ஆனார்.

IND vs BAN, U-19 World Cup Final: Man Of The Tournament Yashasvi Jaiswal Enjoyed "Playing In South Africa"
19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் போட்டியின் வீரராக தேர்வு செய்யப்பட்டார். © ICC

யு19 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி பங்களாதேஷ் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷ் வெற்றி பெற்றது. இந்திய அணி தோல்யுற்ற போதிலும், அதிரடியாக ஆடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் போட்டி நாயகன் விருதை பெற்றார். 18 வயதான இவர், இறுதிப் போட்டியில் 88 ரன்களும், மொத்த தொடரில் 400 ரன்களும் பெற்று அதிக ரன்கள் குவித்த வீரர் ஆனார். சீனியர் அணியுடனான போட்டிகள் வருவதால், அதில் சரியான இடத்தை தக்க வைத்துக்கொள்ள இதே போன்று விளையாடுவேன் என்று அவர் கூறியுள்ளார். ”இந்த போட்டி மிகவும் விரும்பினேன். விக்கெட்டுகள் நடுவில் எப்படி விளையாட வேண்டும் என்ற அனுபவத்தை பெற்றேன். நான் துள்ளியமாக விளையாட வேண்டும் என்று எனக்கு தெரியும்” என்று போட்டிக்கு பின் கூறினார் ஜெய்ஸ்வால்.

“அடுத்த என்ன போட்டியை விளையாடப் போகிறேன் என்பது குறித்து நான் யோசிக்கிறேன் மற்றும் இது ஒரு செயல்முறையை பற்றியது. நான் அதனோடு பயணிக்க விரும்புகிறேன்” என்றார்.

உத்திரபிரதேசத்தில் பிறந்த வீரருக்கு இது ரோலர் கோஸ்டர் விளையாட்டை போன்றது. அவருடைய தந்தை பெரிய நகரத்துக்கு சென்ற பிறகு, ஆரம்ப நாட்களில் அவர் பானி பூரிகளை விற்றுக்கொண்டிருந்தார்..

ஜெய்ஸ்வால், யு19 போட்டியில் அதிரடி கிளப்பினார். முக்கியமாக பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஆட்டமிழக்காமல் சதமடித்தார். இதனால், இந்தப் போட்டியில் இந்தியா 0 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், அதேபோன்ற ஆட்டத்தை இறுதிப் போட்டியிலும் வெளிப்படுத்த்தினார்.

உலகக் கோப்பையில் அவர் 4 அரைசதங்களும், 1 சதமும் அவர் பெயருக்கு கீழ் வைத்துள்ளார். அவர் விளையாடிய ஒன்றை தவிர மற்ற எல்லாப் போட்டிகளிலும் அரைசதம் குவித்துள்ளார். ஆனால், இது இந்தியாவுக்கு போதுமானதாக இல்லை. 177 ரன்களை துரத்திய பங்களாதேஷ் அணி கடைசியில் டக் வொர்த் லூயிஸ் முறையில் வெற்றி பெற்றது.

Comments
ஹைலைட்ஸ்
  • யஷஸ்வி ஜெய்ஸ்வால் போட்டியின் வீரராக தேர்வு செய்யப்பட்டார்
  • 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை போட்டியில் ஜெய்ஸ்வால் 400 ரன்கள் எடுத்தார்
  • இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது
தொடர்புடைய கட்டுரைகள்
யு19 இறுதிப் போட்டி போட்டி வீரர் விருது உடைந்ததாக தகவல்!
யு19 இறுதிப் போட்டி போட்டி வீரர் விருது உடைந்ததாக தகவல்!
Watch: இந்திய - வங்கதேச வீரர்கள் மோதல்... U-19 கிரிக்கெட் உலகக் கோப்பையில் பரபரப்பு!
Watch: இந்திய - வங்கதேச வீரர்கள் மோதல்... U-19 கிரிக்கெட் உலகக் கோப்பையில் பரபரப்பு!
இறுதிப் போட்டியில் தோற்றும் போட்டி நாயகனான யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
இறுதிப் போட்டியில் தோற்றும் போட்டி நாயகனான யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
‘கோப்பையை வெல்வீர்கள்!’ – இந்திய கிரிக்கெட் ஜூனியர் அணிக்கு நம்பிக்கையூட்டிய சச்சின்!!
‘கோப்பையை வெல்வீர்கள்!’ – இந்திய கிரிக்கெட் ஜூனியர் அணிக்கு நம்பிக்கையூட்டிய சச்சின்!!
யு19 உலகக் கோப்பை: 5வது முறையாக கோப்பையை வெல்லுமா இந்தியா?
யு19 உலகக் கோப்பை: 5வது முறையாக கோப்பையை வெல்லுமா இந்தியா?
Advertisement