Listen to the latest songs, only on JioSaavn.com
 

“ஒருவேளை தலைக்கு தான் குறி வெச்சாரோ” - யு19 இறுதிப்போட்டியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! #Video

Updated: 10 February 2020 11:31 IST

சாக்சேனா பந்தை முன்னோக்கி அடித்தார், பந்துவீச்சாளர் அதை பிடித்து ஸ்டம்ப்களை நோக்கி வீசும் போது அது பேட்ஸ்மேனின் தலைக்கு நேராக சென்றது. பின்னர் இரு வீரர்களும் விவாதத்தில் ஈடுபட்டனர்.

IND vs BAN: Bangladesh Bowler Nearly Hits Divyansh Saxena On His Head In U-19 World Cup Final. Watch
19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது திவ்யான்ஷ் சக்சேனா தலையில் அடிபட்டது. © Facebook

இந்தியாவுன் யு19 அணி நேற்று இறுதிப்போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொண்டு 3 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியில் தோல்வியுற்றது. இறுதிப் போட்டியில் டாஸ்  வென்ற பங்களாதேஷ் கேப்டன் அக்பர் அலி பவுலிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்ற விளையாடியபோது, பங்களாதேஷ் அணி தங்களின் முதல் கோப்பைக்காக விளையாடியது. முதலில் பேட் செய்ய தொடங்கியது இந்திய அணி. அப்போது இரண்டாவது ஓவரின்போது களத்தில் இருந்த தன்ஸிம் ஹசன் சாகிப் வீசிய பந்து இந்திய வீரர் திவ்யான்ஷ் சக்சேனாவின் தலைக்கு நேராக சென்றது. சாக்சேனா பந்தை முன்னோக்கி அடித்தார், பந்துவீச்சாளர் அதை பிடித்து ஸ்டம்ப்களை நோக்கி வீசும் போது அது பேட்ஸ்மேனின் தலைக்கு நேராக சென்றது. பின்னர் இரு வீரர்களும் விவாதத்தில் ஈடுபட்டனர்.

களத்தில் இருந்த நடுவர் பிரச்னை ஏதும் ஆகாமல் இரு வீரர்களையும் சமாதனப்படுத்த முயற்சி செய்தார்.

இந்த போட்டியில், திவ்யான்ஷ் சக்சேனாவை இரண்டு ரன்களுக்கு வீழ்த்தியதால், தொடக்க கூட்டணியை முன்கூட்டியே உடைத்தது பங்களாதேஷ் அணி. ஏழு ஓவர்களுக்குப் பிறகு இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்திருந்தது.

அந்தச் சம்பவத்தின் வீடியோ இதோ:

யஷஸ்வி ஜெய்ஸ்வால் எப்போதும் போல சிறப்பான பேட்டிங்கை தொடர்ந்தார். இந்தப் தொடரில் நான்காவது 50க்கும் மேற்பட்ட ரன்களை குவித்தார்.

இரண்டாவது விக்கெட்டுக்கு திலக் வர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இணைந்து 94 ரன்கள் குவித்தனர். பின்னர், சாகிப் திலக் வர்மாவை 38 ரன்களுக்கு அவுட் ஆக்கினார்.

ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்த பிறகு இந்திய அணி ரன்கள் குவிக்க தவறியது. 16 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது.

பெரிய போராட்டத்துக்கு பிறகு இந்திய அணி 177 ரன்கள் குவித்து, பங்களாதேஷ் அணிக்கு 178 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது.

பங்களாதேஷ் அணிக்கு அவிஷேக் தாஸ் பவுலிங் பிரிவில் சிறப்பாக விளங்கினார். அவர் வீசிய 9 ஓவர்களில் 40 ரன்கள் மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Comments
ஹைலைட்ஸ்
  • இந்தியாவின் யு19 அணி 177 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
  • பங்களாதேஷ் அணியை பொறுத்தவரி அவிஷேக் சிறப்பாக பந்து வீசினார்
  • யஷஸ்வி ஜெய்வால் அதிரடியாக ஆடி 88 ரன்கள் குவித்தார்.
தொடர்புடைய கட்டுரைகள்
“ஒருவேளை தலைக்கு தான் குறி வெச்சாரோ” - யு19 இறுதிப்போட்டியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! #Video
“ஒருவேளை தலைக்கு தான் குறி வெச்சாரோ” - யு19 இறுதிப்போட்டியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! #Video
பாகிஸ்தானை வீழ்த்திய யு-19 இந்திய அணிக்கு குவியும் வாழ்த்துக்கள்!
பாகிஸ்தானை வீழ்த்திய யு-19 இந்திய அணிக்கு குவியும் வாழ்த்துக்கள்!
Advertisement