இந்தியா vs ஆஸி. முதல் டி20 : காலை வாரிய கடைசி ஓவர்!! இந்தியா தோல்வி

Updated: 24 February 2019 23:29 IST

கடைசிப் பந்து வரை த்ரில்லாக அமைந்தது இந்த மேட்ச்

Live Cricket Score, Ind vs Aus 1st T20I, India vs Australia Live Match Updates: Australia Win Toss, Elect To Bowl
கடைசிப் பந்து வரை போராடியது இந்திய அணி © AFP

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கடைசிப் பந்து வரைக்கும் இந்த மேட்ச் த்ரில்லாக அமைந்தது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. ரோகித் சர்மா 5 ரன்களில் வெளியேற நிதானமாக ஆடிய கே.எல். ராகுல் அரைச்சதம் அடித்தார். அவருக்கு சிறிது நேரம் கம்பெனி கொடுத்த விராட் கோலி 24 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதிகம் கவனிக்கப்பட்ட ரிஷப் பண்ட் ரன் அவுட் ஆனது ஏமாற்றத்தை அளித்தது. முதல் 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்களை எடுத்த இந்திய அணி, அடுத்த 10 ஓவர்களில் 46 ரன்னை மட்டுமே எடுத்தது.

தல தோனி இன்று அதிரடி காட்டவில்லை. 37 பந்துகளை சந்தித்த அவர் 29 ரன்களை மட்டுமே எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 126 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கோல்டர் நைல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்களை இந்திய பவுலர்கள் அச்சுறுத்தினர். மேக்ஸ்வெல் மட்டும் இந்திய பவுலர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தார். 43 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 56 ரன்களை அவர் எடுத்தார். ஓப்பனர் ஷார்ட் 37 ரன்களை எடுத்து ஆஸ்திரேலியாவுக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினார்.

எளிதாக இலக்கை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய அணி தட்டுத் தடுமாறி ரன்களை சேகரித்தது. கடைசி 2 ஓவர்கள் மிகவும் த்ரில்லாக மாறின. 12 பந்துகளில் 16 ரன்கள் எடுக்க வேண்டும் என்றிருந்த நிலையில் 19-வது ஓவரை வீசிய பும்ரா ஹேண்ட்ஸ்கோம், கோல்டல் நைலை வெளியேற்றினார். இந்த ஓவரில் 2 ரன்கள் மட்டுமே கொடுக்கப்பட்டன.

கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவை என்ற நிலையில், 6 பந்துகளில் 1, 4, 2, 1, 4, 2 ரன்கள் அடித்து ஆஸி. பேட்ஸ்மேன்கள் வெற்றியை வசமாக்கினர்.  

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
முதல் டி20 சர்ச்சை: தோனிக்கு ஆதரவாக பேசிய ஆஸ்திரேலிய வீரர்!
முதல் டி20 சர்ச்சை: தோனிக்கு ஆதரவாக பேசிய ஆஸ்திரேலிய வீரர்!
''இரண்டு நிமிடம் அமைதியாக இருங்கள்'' கோலி கோரிக்கையை ஏற்ற இந்திய ரசிகர்கள்!
இந்தியா vs ஆஸி. முதல் டி20 : காலை வாரிய கடைசி ஓவர்!! இந்தியா தோல்வி
இந்தியா vs ஆஸி. முதல் டி20 : காலை வாரிய கடைசி ஓவர்!! இந்தியா தோல்வி
Advertisement