கம்-பேக் டெஸ்ட் போட்டியில் சாதனை படைத்த ஸ்மித்...!

Updated: 02 August 2019 12:42 IST

நேற்றைய போட்டியில் 144 ரன்கள் குவித்து பிராத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் ஸ்மித்

Steve Smith Overtakes Virat Kohli, Sachin Tendulkar With 24th Test Century
தனது 24வது சதத்தை கடந்தார் ஸ்மித் © AFP

சுமார் ஓர் ஆண்டு காலம் தடைக்கு பின்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஷஸ் தொடரில் களமிறங்கினார் ஆஸ்திரேலியாவின் ஸ்டிவ் ஸ்மித். தனது கம்-பேக் டெஸ்ட் போட்டியிலையே சதமடித்து அசத்தினார் ஸ்மித்.

122/8 என தடுமாறி கொண்டிருந்த ஆஸ்திரேலியா அணியை 284 ரன்கள் என்ற நிலைக்கு அழைத்து சென்றது ஸ்மித்தின் சதம். டெஸ்ட் போட்டிகளில் அவர் அடிக்கும் 24வது சதம் இதுவாகும். தனது 118வது இன்னிங்சில் தனது 24வது சதம் அடித்தது மூலம் மேலும் ஒரு சாதனை படைத்துள்ளார் ஸ்மித்.

குறைந்த டெஸ்ட் இன்னிங்சில் 24 சதங்கள் அடித்த இரண்டாவது அதிவேக வீரர் என்ற பெருமையை ஸ்மித் பெற்றார். முதல் இடத்தில் 66 இன்னிங்சில் 24 சதங்களை கடந்த கிரிக்கெட் உலகின் ஜாம்பவன் டான் பிராத்மேன் உள்ளார். மூன்றாம் இடத்தில் இந்தியா அணியின் கேப்டனான விராட் கோலி உள்ளார். கோலி 24 டெஸ்ட் சதங்கள் அடிக்க 123 இன்னிங்ஸ் எடுத்து கொண்டார். சச்சினுக்கு 125 இன்னிங்ஸ்கள் தேவைப்பட்டது.

ஆஷஸ் தொடரில் 42 இன்னிங்சில் 9 சதங்கள் அடித்துள்ள ஸ்மித், 60 சராசரி வைத்துள்ளார். கடைசி ஏழு ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 5 சதங்கள் அடித்து அமர்க்களப்படுத்தியுள்ளார் ஸ்மித்.

நேற்றைய ஆஷஸ் போட்டியில் இங்கிலாந்து ரசிகர்கள் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர் வந்த போது அவர்களுக்கு எதிராக கூச்சல் போட்டனர்.

‘கடந்த 15 மாதங்கள் தான் என் வாழ்நாளில் மிக கடினமான காலமாகும். மறுபடியும் கிரிக்கெட் விளையாடுவேனா என்ற கேள்வி எனக்குள்ளே எழும்பியது' என்றார் ஸ்மித்.

நேற்றைய போட்டியில் 144 ரன்கள் குவித்து பிராத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் ஸ்மித். பிராத் இந்த போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி தனது 100வது ஆஷஸ் விக்கெட்டையும் கைப்பற்றினார்.

Comments
ஹைலைட்ஸ்
  • பிராத் தனது 100வது ஆஷஸ் விக்கெட்டையும் கைப்பற்றினார்.
  • ஆஷஸ் தொடரில் 42 இன்னிங்சில் 9 சதங்கள் அடித்துள்ள ஸ்மித்
  • கோலி 24 டெஸ்ட் சதங்கள் அடிக்க 123 இன்னிங்ஸ் எடுத்து கொண்டார்.
தொடர்புடைய கட்டுரைகள்
India vs Australia 1st ODI: 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா!
India vs Australia 1st ODI: 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா!
"கோலி மற்றும் ஸ்மித் இடையே எந்த ஒப்பீடும் இல்லை" - கம்பீரின் உறுதியான பதில்!
"கோலி மற்றும் ஸ்மித் இடையே எந்த ஒப்பீடும் இல்லை" - கம்பீரின் உறுதியான பதில்!
India vs Australia, 1st ODI: நேரலையை எங்கு, எப்போது பார்க்கலாம்!
India vs Australia, 1st ODI: நேரலையை எங்கு, எப்போது பார்க்கலாம்!
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 3வது இடத்தில் பேட் செய்யவுள்ளார் ஸ்மித்!
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 3வது இடத்தில் பேட் செய்யவுள்ளார் ஸ்மித்!
விஸ்டன் அறிவித்த தசாப்த கிரிக்கெட் வீரர் பட்டியலில் இடம்பெற்ற விராட் கோலி!
விஸ்டன் அறிவித்த தசாப்த கிரிக்கெட் வீரர் பட்டியலில் இடம்பெற்ற விராட் கோலி!
Advertisement