இமேஜின் பாடலுக்கு ஐசிசி கிளப்பிய ஆன்லைன் ட்ரெண்ட் "தல தோனி வெர்ஷன்"

Updated: 12 February 2019 10:51 IST

ஐசிசி, ஜான் லெனனின் இமேஜின் பாடல் வரிகளை கிரிக்கெட் வீரர்களுக்கு மாற்றி ட்விட் செய்தது. அதில் தோனி வெர்ஷல் அல்டிமேட் ஹிட் அடித்தது.

MS Dhoni Part Of ICCs Version Of John Lennons Classic
சமீபத்தில் ஐசிசியின் ட்விட்டர் பக்கத்தில் தோனியை பற்றிய ட்விட்களை அதிகம் பார்க்க முடிகிறது. © AFP

தோனி எப்போதுமே சர்வதேச கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத வீரர். அவரைப்பற்றிய எந்த விஷயம் பேசினாலும் அது சுவாரசியமான விஷயமாக மாறிவிடும். சமீபத்தில் ஐசிசியின் ட்விட்டர் பக்கத்தில் தோனியை பற்றிய ட்விட்களை அதிகம் பார்க்க முடிகிறது. இந்த வரிசையில் ஐசிசி, ஜான் லெனனின் இமேஜின் பாடல் வரிகளை கிரிக்கெட் வீரர்களுக்கு மாற்றி ட்விட் செய்தது. அதில் தோனி வெர்ஷல் அல்டிமேட் ஹிட் அடித்தது.

அந்த ட்விட்டில், "ஒருவேளை கற்பனை செய்து பாருங்கள் தோனி இல்லையென்றால்" என்று ட்விட் செய்யப்பட்டு பின்னர் அதற்கு பதிலாக யாருமே கேட்ச் செய்ய மாட்டார்கள், யாருமே ஸ்டெம்பிங் செய்ய மாட்டார்கள் என்றும், அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் 2 மற்றும் 3 ரன்கள் ஓடும் தைரியம் வந்துவிடும் என்றும் தோனியை பாராட்டி ட்விட் மழை பொழிந்தது ஐசிசி. இதில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன்னையும் புகழ்ந்திருந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற போது தோனி ஹாட்ரிக் அரைசதமடித்து ஆட்ட தொடர்நாயகன் விருது வென்றார். அப்போது ஐசிசி கவர் புகைப்படத்தில் தோனியை வைத்து கெளரவித்தது.

338 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள தோனி 183 ரன்கள் என்ற அதிகபட்ச தனிநபர் ஸ்கோருடன் சராசரி 50க்கும் மேலாக வைத்துள்ளார்.

கீப்பராக உலக அளவில் தோனியின் செயல்பாடு குறிப்பிடத்தக்கது. 311 கேட்ச்களையும், 119 ஸ்டெம்பிங்களையும் செய்துள்ளார்.

Comments
ஹைலைட்ஸ்
  • ஐசிசி ஜான் லெனனின் பாடல் வரிகளை கிரிக்கெட் வீரர்களுக்கு மாற்ற வருகிறது
  • தோனி, தவிர்க்க முடியாத கிரிக்கெட் வீரராக உள்ளார்
  • தோனியின் புகைப்படத்தை கவர் ஃபோட்டோவாக வைத்து அவரை கவுரவித்தது ஐசிசி
தொடர்புடைய கட்டுரைகள்
“பவுலர்களின் கேப்டன்” - தோனியின் கேப்டன்ஸியை பாராட்டிய பிரக்யான் ஓஜா
“பவுலர்களின் கேப்டன்” - தோனியின் கேப்டன்ஸியை பாராட்டிய பிரக்யான் ஓஜா
மார்ச் 2ம் தேதி முதல் ஐபிஎல் பயிற்சியை தொடங்கும் எம்.எஸ்.தோனி!
மார்ச் 2ம் தேதி முதல் ஐபிஎல் பயிற்சியை தொடங்கும் எம்.எஸ்.தோனி!
“ஒரு புலி இன்னொரு புலியை சந்தித்தால்...” - தோனி ரசிகரின் வைரல் கமெண்ட்!
“ஒரு புலி இன்னொரு புலியை சந்தித்தால்...” - தோனி ரசிகரின் வைரல் கமெண்ட்!
“இந்திய கேப்டன்களில் சிறந்தவர் தோனி” - சுரேஷ் ரெய்னா
“இந்திய கேப்டன்களில் சிறந்தவர் தோனி” - சுரேஷ் ரெய்னா
ஆர்.பி. சிங் மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோருக்கு பானி பூரி பரிமாறிய தோனி!
ஆர்.பி. சிங் மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோருக்கு பானி பூரி பரிமாறிய தோனி!
Advertisement