
தோனி எப்போதுமே சர்வதேச கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத வீரர். அவரைப்பற்றிய எந்த விஷயம் பேசினாலும் அது சுவாரசியமான விஷயமாக மாறிவிடும். சமீபத்தில் ஐசிசியின் ட்விட்டர் பக்கத்தில் தோனியை பற்றிய ட்விட்களை அதிகம் பார்க்க முடிகிறது. இந்த வரிசையில் ஐசிசி, ஜான் லெனனின் இமேஜின் பாடல் வரிகளை கிரிக்கெட் வீரர்களுக்கு மாற்றி ட்விட் செய்தது. அதில் தோனி வெர்ஷல் அல்டிமேட் ஹிட் அடித்தது.
அந்த ட்விட்டில், "ஒருவேளை கற்பனை செய்து பாருங்கள் தோனி இல்லையென்றால்" என்று ட்விட் செய்யப்பட்டு பின்னர் அதற்கு பதிலாக யாருமே கேட்ச் செய்ய மாட்டார்கள், யாருமே ஸ்டெம்பிங் செய்ய மாட்டார்கள் என்றும், அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் 2 மற்றும் 3 ரன்கள் ஓடும் தைரியம் வந்துவிடும் என்றும் தோனியை பாராட்டி ட்விட் மழை பொழிந்தது ஐசிசி. இதில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன்னையும் புகழ்ந்திருந்தது.
"Imagine there's no umpire
— ICC (@ICC) February 10, 2019
It's easy if you try.
"No one to signal boundary,
— ICC (@ICC) February 10, 2019
Or raise both hands into the sky
"Imagine all the bowlers
— ICC (@ICC) February 10, 2019
Running in all dayyyyy...
"Imagine there's no Dhoni
— ICC (@ICC) February 10, 2019
It's so very hard to do.
"No one to catch or stump you
— ICC (@ICC) February 10, 2019
And no banter, too
"Imagine all the batsmen
— ICC (@ICC) February 10, 2019
Running twos and threeeeees.
"I hope someday you'll edge behind
— ICC (@ICC) February 10, 2019
And the cordon will appeal as one!
"Imagine there's no winter
— ICC (@ICC) February 10, 2019
I wonder if you can?
"No need for nets or covers
— ICC (@ICC) February 10, 2019
Just working on that tan
"Imagine all the matches
— ICC (@ICC) February 10, 2019
Played all year rounddddd...
Ooooohhhh
— ICC (@ICC) February 10, 2019
[everyone now]
"You may say I'm a seamer
— ICC (@ICC) February 10, 2019
But I'm not James Anderson.
I hope someday you'll edge behind
And the cordon will appeal as one!"
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற போது தோனி ஹாட்ரிக் அரைசதமடித்து ஆட்ட தொடர்நாயகன் விருது வென்றார். அப்போது ஐசிசி கவர் புகைப்படத்தில் தோனியை வைத்து கெளரவித்தது.
338 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள தோனி 183 ரன்கள் என்ற அதிகபட்ச தனிநபர் ஸ்கோருடன் சராசரி 50க்கும் மேலாக வைத்துள்ளார்.
கீப்பராக உலக அளவில் தோனியின் செயல்பாடு குறிப்பிடத்தக்கது. 311 கேட்ச்களையும், 119 ஸ்டெம்பிங்களையும் செய்துள்ளார்.