"தோனி ரன் அவுட் ட்விட்டை நீக்க இதுதான் காரணம்" - நியூசிலாந்து ஜிம்மி நீஷம் விளக்கம்!

Updated: 16 May 2019 15:04 IST

உலகிலேயே அதிகம் பார்க்கப்படும் டி20 போட்டி ஐபிஎல் மட்டும் தான். இந்த சர்ச்சையான முடிவுக்கு உலகம் முழுக்க பல விமர்சனங்கள் எழுந்தன.

MS Dhoni Run-Out Tweet Deleted By Jimmy Neesham After Fans Backlash
கடந்த ஞாயிற்றுகிழமை மும்பை இந்தியன்ஸ் அணியுடன் நடந்த இறுதிப் போட்டியில் தோனியின் ரன் அவுட் விவாத பொருளானது. © AFP

ஐபிஎல் தொடரில் தோனி மிக முக்கியமானவர். கடந்த ஞாயிற்றுகிழமை மும்பை இந்தியன்ஸ் அணியுடன் நடந்த இறுதிப் போட்டியில் தோனியின் ரன் அவுட் விவாத பொருளானது. சென்னை அணியின் வெற்றி பறிபோக அதுவும் ஒரு காரணமாக அமைந்தது. 37 வயதான தோனி, ரன் அவுட் ஆகவில்லை என்று ரசிகர்கள் கூறினார்கள். ஆனால், அவர் அவுட் என அறிவிக்கப்பட்டது. உலகிலேயே அதிகம் பார்க்கப்படும் டி20 போட்டி ஐபிஎல் மட்டும் தான். இந்த சர்ச்சையான முடிவுக்கு உலகம் முழுக்க பல விமர்சனங்கள் எழுந்தன. நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஜிம்மி நீஷம், தோனி ரன் அவுட் ஆன புகைப்படத்துடன் "கிரிக்கெட்டை ரசிகர்கள் எவ்வளவு விரும்புகிறார்கள் என்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், கீழே உள்ள ஃபோட்டோவை பார்த்தும், இது அவுட் இல்லை என்று கூறுவதைதான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என்று பதிவிட்டிருந்தார்.

இது பதிவிட்ட சில மணி நேரத்திலேயே அவரி ரசிகர்கள் "மோசமான கருத்துக்கள்" கொண்டு பதிலளித்து, அந்த புகைப்படத்தை நீக்கக் கோரினர்.

இந்தப் பதிவை நீக்கிய நீஷம், தனது ட்விட்டர் பக்கத்தில், "தோனியின் ரன் அவுட் புகைப்படத்தை நீக்கிவிட்டேன், என்னுடைய எண்ணம் மாறிவிட்டதாக அர்த்தம் இல்லை. 1. ஒரே மாதிரியான மோசமான கருத்துக்கள் ஒரு நாளைக்கு 200 முறை படிக்க வெறுப்பாக உள்ளது. 2. எனக்கு எது குறித்தும் கவலையில்லை. இது குறித்து மீண்டும் யாரும் ட்விட் செய்ய வேண்டாம். இன்றைய நாளை நன்றானதாக தொடங்குங்கள்" என்று பதிவிட்டார்.

சென்னைக்கு இலக்காக 150 ரன்கள் இருந்தது. இதை அடைய வேண்டிய கட்டாயத்தில் கேப்டனை இழந்தது சென்னை. பின்னர் அதிக ரன்கள் குவித்த வாட்சனையும் இழந்தது. தோனியின் ரன் அவுட் பல தரப்பட்ட சோதனைகளுக்கு பிறகே மூன்றாவது அம்பயர் அவுட் என அறிவித்தார். 

இலக்கை நோக்கி சென்ற சென்னைக்கு,  கடைசி பந்தில் தாக்கூரின் அவுட் பின்னடைவாக அமைந்தது. இதனால் சென்னை 1 ரன் வித்தியாசத்தில் மும்பையிடம் தோற்றது.

Comments
ஹைலைட்ஸ்
  • தோனி, ரன் அவுட் ஆகவில்லை என்று ரசிகர்கள் கூறினார்கள்
  • ஜிம்மி நீஷம் தோனியின் ரன் அவுட் குறித்து ட்விட் செய்தார்
  • அந்த ட்விட்டுக்கு ரசிகர்கள் "மோசமான கருத்துக்கள்" கொண்டு பதிலளித்தனர்
தொடர்புடைய கட்டுரைகள்
பழைய இந்தி பாடலைப் பாடிய எம்.எஸ்.தோனி! Viral Video
பழைய இந்தி பாடலைப் பாடிய எம்.எஸ்.தோனி! Viral Video
"மறக்க முடியாத பயணம்" - சாக்‌ஷி தோனிக்கு நன்றி தெரிவித்த பாடகி ஜாஸ்ஸி கில்
"மறக்க முடியாத பயணம்" - சாக்‌ஷி தோனிக்கு நன்றி தெரிவித்த பாடகி ஜாஸ்ஸி கில்
"டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து தோனியிடம் கேளுங்கள்" - சவுரவ் கங்குலி
"டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து தோனியிடம் கேளுங்கள்" - சவுரவ் கங்குலி
"ஜனவரி வரை என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம்" - எதிர்காலம் குறித்து தோனி!
"ஜனவரி வரை என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம்" - எதிர்காலம் குறித்து தோனி!
"தோனியும், கோலியும் என்னை மதிக்கிறார்கள்" - எம்.எஸ்.கே.பிரசாத்
"தோனியும், கோலியும் என்னை மதிக்கிறார்கள்" - எம்.எஸ்.கே.பிரசாத்
Advertisement