''பயஸ் ஆடும்போது என்னாலும் முடியும், அணிக்கு திரும்புவேன்'' ஸ்ரீஷாந்த் நம்பிக்கை

Updated: 16 March 2019 12:52 IST

2013 ஐபிஎல் தொடரில் மும்பை சுழற்பந்துவீச்சாளர் அன்கித் சவான், ஹரியானாவின் அஜித் சண்டிலா ஆகியோர் ஸ்ரீஷாந்துடன் இணைந்து மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டனர். 

S Sreesanth Compares Himself To Leander Paes After Supreme Court Verdict
சூதாட்ட புகாரில் சிக்கி பிசிசிஐ-யின் ஒழுங்கு நடவடிக்கை குழுவால் ஆயுள் தடை விதிக்கப்பட்ட ஸ்ரீஷாந்தின் தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது. © PTI

2013 ஐபிஎல் சூதாட்ட புகாரில் சிக்கி பிசிசிஐ-யின் ஒழுங்கு நடவடிக்கை குழுவால் ஆயுள் தடை விதிக்கப்பட்ட ஸ்ரீஷாந்தின் தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது. நீதிபதிகள் அஷோக் பூஷன் மற்றும் கே.எம். ஜேசப் தலைபையிலான அமர்வு பிசிசிஐ-யின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டிக்கு 3 மாதத்துக்குள் ஸ்ரீஷாந்தை மறுபடியும் அணிக்கு பரிசீலிக்கலாம் என்று கூறியுள்ளது. 

இதற்கு 36 வயதான ஸ்ரீஷாந்த், "லியாண்டர் பயஸ் 42 வயதில் க்ராண்ட்ஸ்லாம் வெல்லும் போது 36 வயதில் என்னாலும் கிரிக்கெட் ஆடமுடியும்" என்று நம்பிக்கையோடு தெரிவித்துள்ளார். 

2013 ஐபிஎல் தொடரில் மும்பை சுழற்பந்துவீச்சாளர் அன்கித் சவான், ஹரியானாவின் அஜித் சண்டிலா ஆகியோர் ஸ்ரீஷாந்துடன் இணைந்து மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டனர். 

"இது ஒரு மிகப்பெரிய போராட்டம், உச்சநீதிமன்றம் என் தடையை நீக்கியதை நினைத்து நான் முகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். கிரிக்கெட் தான் என் வாழ்க்கை என்றிருந்தேன். அதனை ஆறு ஆண்டுகள் ஆடாமல் இருந்தது வலி'' என்று ஐபிஎல் மேட்ச் பிக்சிங் மீதான தடை நீங்கிய பின்பு ஸ்ரீஷாந்த் தெரிவித்துள்ளார்.

"நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளித்து பிசிசிஐ என்ன கிரிக்கெட் களத்துக்குள் அனுமதிக்க வேண்டும். நான் யாருக்கும் தெரியாமல் எனக்கு பிடிக்கும் போதெல்லாம் பள்ளி கிரிக்கெட் க்ரண்வுண்டில் கிரிக்கெட் ஆடியிருக்கிறேன்" என்றார்.

ஸ்ரீஷாந்த் 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஐசிசி உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். 

"போட்டியில் கலந்து கொண்டு ஆட வயது ஒரு தடையில்லை" என்றார் அவர்.

ஸ்ரீஷாந்த் இந்திய அணிக்காக 27 டெஸ்ட், 53 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.

Comments
ஹைலைட்ஸ்
  • 2013 ஐபிஎல் தொடரில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டார்
  • ஶ்ரீஷாந்த் இந்திய அணிக்காக 27 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார்
  • 53 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார் ஶ்ரீஷாந்த்
தொடர்புடைய கட்டுரைகள்
"என்னால் பல நாட்கள் தூங்க முடியவில்லை" - திகார் நாட்கள் குறித்து ஶ்ரீசாந்த்!
"என்னால் பல நாட்கள் தூங்க முடியவில்லை" - திகார் நாட்கள் குறித்து ஶ்ரீசாந்த்!
2007 ஐசிசி டி20 உலகக் கோப்பை: தோனி தலைமையிலான இந்திய அணி வென்ற நாள் இன்று!
2007 ஐசிசி டி20 உலகக் கோப்பை: தோனி தலைமையிலான இந்திய அணி வென்ற நாள் இன்று!
கிரிக்கெட் வீரர் ஶ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து... காயமின்றி தப்பிய குடும்பத்தினர்!
கிரிக்கெட் வீரர் ஶ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து... காயமின்றி தப்பிய குடும்பத்தினர்!
பயஸ் ஆடும்போது என்னாலும் முடியும், அணிக்கு திரும்புவேன் ஸ்ரீஷாந்த் நம்பிக்கை
''பயஸ் ஆடும்போது என்னாலும் முடியும், அணிக்கு திரும்புவேன்'' ஸ்ரீஷாந்த் நம்பிக்கை
ஸ்ரீஷாந்த் மீதான ஆயுள் தடையை நீக்கி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்!
ஸ்ரீஷாந்த் மீதான ஆயுள் தடையை நீக்கி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்!
Advertisement