பவுலிங்கை கலாய்த்த ஐசிசிக்கு சச்சின் அளித்த வித்தியாசமான பதில்!

Updated: 16 May 2019 17:24 IST

2013ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று, இப்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆலோசகராக இருக்கிறார்.

Sachin Tendulkar Comes Up With A Cheeky Reply After ICC Trolls Him 
சில சமயங்களில் தன்னை கிண்டல் செய்பவர்களுக்கு சிறப்பான பதிலும் அளிக்கக் கூடியவராக இருக்கிறார் சச்சின். © AFP

எந்த சூழலிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர் சச்சின் டெண்டுல்கர். தன்னுடைய ரசிகர்களுக்காக எப்போதும் சிறப்பாக ஆடி அவர்களை மகிழ்விக்கக் கூடியவர். சில சமயங்களில் தன்னை கிண்டல் செய்பவர்களுக்கு சிறப்பான பதிலும் அளிக்கக் கூடியவராக இருக்கிறார். டெண்டுல்கர் மற்றும் வினோத் கம்பிலி இருவரும் வலைப்பயிற்சியில் ஈடுப்பட்டனர். அதை சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில்" கம்பிலியுடன் ஆடுவது மகிழ்ச்சியளிக்கிறது. நானும் அவரும் எப்போதும் ஒரே அணியில் ஆடுகிறோம். இது பலருக்கு தெரியாது. இந்த பயிற்சி சிறு வயதை நினைவுப் படுத்துகிறது" என்று பதிவிட்டார்.

இந்த பயிற்சியின் போது, லெக் ஸ்பின் பந்து இரண்டை வீசினார் சச்சின். அவர் பந்து வீசும்போது, பவுலிங் கோட்டை தாண்டி கால் வெளியே இருந்தது. அந்த பந்து நோபால் என அம்பயர் ஸ்டீவ் பக்னர் சொன்னதை சுட்டிக்காட்டி, ஐசிசி சச்சினை கிண்டலடிக்கும் விதமாக, "உங்கள் முன் காலை பாருங்கள்" என்று பதிவிட்டது.

ஐசிசிக்கு பதிலளிக்கும் விதமாக சச்சின், " இந்த முறையாவது நான் பேட்டிங் செய்யாமல், பவுலிங் செய்கிறேன். அம்பயரின் முடிவே இறுதியானது" என்று பதிவிட்டுள்ளார். ஸ்டீவ் பக்னர் இதற்கு முன் சச்சின் பேட்டிங் செய்யும் போது பல முறை தவறாக முடிவை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சின் டெண்டுல்கர், 24 வருடங்கள் கிரிக்கெட்டில் சிறந்து விளங்குகிறார். இதுவரை அவர் 34,357 ரன்கள் எடுத்து சாதனைப் படைத்துள்ளார். இதனால், அவர் "கிரிக்கெட்டின் கடவுள்" என்று அழைக்கப்படுகிறார்.

2013ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று, இப்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆலோசகராக இருக்கிறார்.

அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டிலும் ஆடி 30,000க்கும் அதிகமான ரன்கள் எடுத்துள்ளார் சச்சின்.

சர்வதேச கிரிக்கெட்டில் 1989ம் ஆண்டு தன்னுடைய 16 வயதில் ஆடத் தொடங்கினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 15,921 ரன்களும், ஒருநாள் போட்டியில் 18,426 ரன்களும் எடுத்துள்ளார்.

அதிகபடியாக 51 டெஸ்ட் சதங்களும், 49 ஒருநாள் போட்டி சதங்களும் அடித்துள்ளார். மேலும், சர்வதேச போட்டியில் 100 சதங்கள் அடித்த ஒரே வீரர் சச்சின் டெண்டுல்கர்.

ஒருநால் போட்டியில் இரண்டு சதங்கள் அடித்த முதல் வீரரும் சச்சின் டெண்டுல்கர் தான்.

Comments
ஹைலைட்ஸ்
  • டெண்டுல்கர் மற்றும் வினோத் கம்பிலி இருவரும் வலைப்பயிற்சியில் ஈடுப்பட்டனர்
  • சச்சின் பந்து வீசும்போது, பவுலிங் கோட்டை தாண்டி கால் வெளியே இருந்தது
  • 2013ம் ஆண்டு அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்
தொடர்புடைய கட்டுரைகள்
“சச்சினா, ரோகித்தா..?”- ஐசிசி ட்வீட்டுக்கு டெண்டுல்கரின் பதிலடி!
“சச்சினா, ரோகித்தா..?”- ஐசிசி ட்வீட்டுக்கு டெண்டுல்கரின் பதிலடி!
உலகக் கோப்பையில் அறிமுகமான சச்சினின் புதிய இன்னிங்ஸ்!
உலகக் கோப்பையில் அறிமுகமான சச்சினின் புதிய இன்னிங்ஸ்!
சச்சின் மீதான புகாரை தள்ளுபடி செய்தது பிசிசிஐ!
சச்சின் மீதான புகாரை தள்ளுபடி செய்தது பிசிசிஐ!
"பயிற்சி ஆட்ட தோல்வி குறித்து கவலை வேண்டாம்" - சச்சின் டெண்டுல்கர்
"பயிற்சி ஆட்ட தோல்வி குறித்து கவலை வேண்டாம்" - சச்சின் டெண்டுல்கர்
"உலகக் கோப்பையில் தோனி 5வது இடத்தில் ஆட வேண்டும்" - சச்சின் டெண்டுல்கர்
"உலகக் கோப்பையில் தோனி 5வது இடத்தில் ஆட வேண்டும்" - சச்சின் டெண்டுல்கர்
Advertisement