முதலிடத்தை தக்கவைத்து கொண்ட விராத் கோலி...!

Updated: 24 July 2019 13:07 IST

இந்தியாவின் சுழல் பந்துவீச்சாளர்களான ஜடேஜா மற்றும் அஷ்வின் ஆகியோர் முறையே ஆறாவது மற்றும் பத்தாவது இடத்தில் உள்ளனர்.

Virat Kohli Retains Number One Position In ICC Test Rankings
விராத் கோலி 922 புள்ளிகளில் உள்ளார் © AFP

டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையை ஐசிசி செவ்வாய்கிழமை வெளியிட்டது. இதில் அணிகள் பட்டியலில் இந்தியா அணி முதலிடத்திலும் நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திலும் உள்ளன. நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் உள்ளன.

பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 922 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்து கொண்டார் இந்தியா அணியின் கேப்டன் விராத் கோலி. 913 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனும் 881 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இந்தியா வீரர் புஜாராவும் உள்ளனர்.

பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ், இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன், மூன்றாவது இடத்தில் தென் ஆப்ரிக்காவின் ககிசோ ரபாடா உள்ளனர். இந்தியாவின் சுழல் பந்துவீச்சாளர்களான ஜடேஜா மற்றும் அஷ்வின் ஆகியோர் முறையே ஆறாவது மற்றும் பத்தாவது இடத்தில் உள்ளனர்.

ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டிஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர், பங்களாதேஷ் அணியின் ஷாகிப் அல் ஹாசன், இந்தியாவின் ஜடேஜா ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

இங்கிலாந்து – ஐயர்லாந்து டெஸ்ட், இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் தொடர் ஆகியவை விரைவில் துவங்கவுள்ளது. அதில் வீரர்கள் செயல்பாட்டை பொருத்தே இந்த பட்டியலில் மாற்றம் வரும். இங்கிலாந்து அணியின் சார்பாக பேட்ஸ்மேன்கள் பட்டியலில் ஜோ ரூட், ஜானி பெர்ஸ்டோ, ஜோஸ் பட்லர் ஆகியோர் முறையே 6, 26, 27 வது இடத்தில் உள்ளனர்.  

ஐயர்லாந்து அணிக்கு பேட்ஸ்மேன்கள் பட்டியலில் கெவின் ஓ பிரைன் 68வது இடத்திலும் கேரி வில்சன் 140வது இடத்திலும் உள்ளனர். பந்துவீச்சாளர்களில் தாம்சன் 64வது இடத்திலும் முர்தாக் 66வது இடத்திலும் உள்ளனர்.

Comments
ஹைலைட்ஸ்
  • அணிகள் பட்டியலில் இந்தியா அணி முதலிடத்தில் உள்ளது
  • பந்துவீச்சாளர்களில் முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ் உள்ளார்
  • ஆல்ரவுண்டர்களில் வெஸ்ட்இண்டிஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் முதலிடத்தில் உள்ளார்
தொடர்புடைய கட்டுரைகள்
ரிஷப் பன்ட்டை விமர்சித்தவர்களுக்கு பதிலளித்த விராட் கோலி!
ரிஷப் பன்ட்டை விமர்சித்தவர்களுக்கு பதிலளித்த விராட் கோலி!
"பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங்கில் எதிலும் உலகத்தரம் இல்லை" - அப்துல் ரஸாக்
"பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங்கில் எதிலும் உலகத்தரம் இல்லை" - அப்துல் ரஸாக்
கே.எல்.ராகும், சிவம் துபே இருவருடன் படத்தை பகிர்ந்த விராட் கோலி!
கே.எல்.ராகும், சிவம் துபே இருவருடன் படத்தை பகிர்ந்த விராட் கோலி!
"ஏழு ஆண்டுகள் கழித்து கேளுங்கள்" - விமர்சனத்துக்கு பதிலளித்த கோலி!
"ஏழு ஆண்டுகள் கழித்து கேளுங்கள்" - விமர்சனத்துக்கு பதிலளித்த கோலி!
"கோலி அல்லது காம்ப்லி?" - பிருத்வி ஷாவின் பேட்டில் இருக்கும் கையெழுத்து யாருடையது?
"கோலி அல்லது காம்ப்லி?" - பிருத்வி ஷாவின் பேட்டில் இருக்கும் கையெழுத்து யாருடையது?
Advertisement