2023 உலகக் கோப்பை வாய்ப்பை இழக்குமா இந்தியா? - ஐசிசி அச்சம்

Updated: 01 February 2019 11:36 IST

2023ம் ஆண்டு உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பை, வரி வரம்பு பிரச்சனைகள் காரணமாக இந்தியா  இழக்கும் அபாயம் உள்ளதாக ஐசிசி அச்சப்படுகிறது

World Cup 2023 Not In Danger Of Being Moved Out Of India: ICC
"இந்தியாவில் தான் 2023 உலகக் கோப்பை போட்டி நடக்கும். அதற்குள் வரிவிலக்கை பெறுவோம்" டேவிட் ரிச்சர்ட்சன். © AFP

2023ம் ஆண்டு உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பை, வரி வரம்பு பிரச்சனைகள் காரணமாக இந்தியா  இழக்கும் அபாயம் உள்ளதாக ஐசிசி அச்சப்படுகிறது. ஐசிசி சிஇஓ டேவிட் ரிச்சர்ட்ஸன் "இந்தியாவிடமிருந்து உலகக் கோப்பை தொடரை பறிக்கும் எண்ணம் ஏதுமில்லை. வரி பிரச்னைக்கு தீர்வுகான இன்னும் போதிய காலம் இருப்பதாக கருதுகிறோம். 

வரி விலக்கு என்பதும் முக்கியத்துவம் வாய்ந்தததுதான். ஏனென்றால் அதுதான் மேற்கிந்திய தீவுகள் போன்ற நாடுகளில் போட்டிகளை நடத்த இந்த நிதி உதவியாக இருக்கும்" என்று கோகோ கோலாவுடன் 5 ஆண்டு ஒப்பந்தத்தை நீடிக்கும் நிகழ்ச்சியில் கூறினார்.

இந்திய அரசு ஐசிசிக்கு 2016ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை நடத்தியதற்கு வரிவிலக்கு தர மறுக்கிறது. இல்லையென்றால் பிசிசிஐ 161 கோடி இழப்பை கட்ட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது தவறினால் 2023 உலகக் கோப்பை நடத்தும் தகுதியை இழக்கும் என்று கூறப்பட்டது.

"இந்தியாவில் தான் 2023 உலகக் கோப்பை போட்டி நடக்கும். அதற்குள் வரிவிலக்கை பெறுவோம்" என்று டேவிட் ரிச்சர்ட்சன் தெரிவுத்துள்ளார்.

2020ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டி அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. 2011லிருந்து க்ரூப் போட்டிகளில் இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதாமல் இருப்பது இதுவே முதல்முறை.

"தரவரிசை அடிப்படையில் அட்டவணை தயாரித்ததாக கூறப்படுகிறது. அரையிறுதி வரை இந்தியா பாகிஸ்தான் போட்டிகளுக்கு வாய்பில்லை என்று கூறப்படுகிறது.

இந்த தொடரின் அரையிறுதி அல்லது இறுதி போட்டியில் இந்தியா பாகிஸ்தான் மோத வேண்டும் என்ற உலகின் விருப்பம் தான் ஐசிசியின் விருப்பமும்" என்றார் ரிச்சர்ட்சன்.

Comments
ஹைலைட்ஸ்
  • இந்தியா, 2023 உலகக் கோப்பை நடத்தும் வாய்ப்பை இழக்கும் அபாயம்: ஐசிசி
  • இந்தியாவில் தான் 2023 உலகக் கோப்பை போட்டி நடக்கும்: ரிச்சர்ட்சன்
  • வரி பிரச்னைக்கு தீர்வுகான இன்னும் போதிய காலம் இருக்கிறது: ஐஐசி சிஇஓ
தொடர்புடைய கட்டுரைகள்
புக்கியுடனான ஷாகிப் அல் ஹசனின் வாட்ஸ்-அப் உரையாடலை வெளியிட்ட ஐசிசி!
புக்கியுடனான ஷாகிப் அல் ஹசனின் வாட்ஸ்-அப் உரையாடலை வெளியிட்ட ஐசிசி!
பவுண்டரி விதிகளை மாற்றியது ஐசிசி - வரவேற்கும் சச்சின் டெண்டுல்கர்!
பவுண்டரி விதிகளை மாற்றியது ஐசிசி - வரவேற்கும் சச்சின் டெண்டுல்கர்!
"கோலி எல்லாவற்றையும் மாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது" - சவுரவ் கங்குலி!
"கோலி எல்லாவற்றையும் மாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது" - சவுரவ் கங்குலி!
T20I Rankings: தரவரிசையில் ரோஹித், கோலி, தவான் முன்னேற்றம்
T20I Rankings: தரவரிசையில் ரோஹித், கோலி, தவான் முன்னேற்றம்
"சுல்தான் ஆஃப் ஸ்விங்"-உடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த சச்சின்!
"சுல்தான் ஆஃப் ஸ்விங்"-உடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த சச்சின்!
Advertisement