"ரன்கள் குவிக்காத நேரத்தில் விரக்தியடைவேன்" - ரிஷப் பன்ட்

Updated: 07 August 2019 17:05 IST

147 ரன்களை இலக்காக கொண்டு இந்திய அணி ஆடத் தொடங்கியது. இடது கை மேட்ஸ்மேனான பன்ட் 42 பந்தில் 65 ரன்கள் குவித்தார்.

Rishabh Pant Says He Gets Frustrated When Not Scoring Runs
இடது கை மேட்ஸ்மேனான பன்ட் 42 பந்தில் 65 ரன்கள் குவித்தார். இதில் 4 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும். © AFP

இளம் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷப் பன்ட் குறைந்த காலத்திலேயே சிறப்பாக செயல்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 42 பந்துகளுக்கு 65 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். முதல் இரண்டு போட்டிகளில் குறைந்த ரன்கள் எடுத்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. எப்போதெல்லாம் அணிக்காக சிறப்பாக ஆட முடிவதில்லையோ, அவரின் திட்டங்கள் செயல்படாமல் போகும்போதோ தான் விரக்தியடைவதாக பன்ட் கூறினார். மூன்றாவது டி20 போட்டியில் பன்ட்டின் சிறப்பான ஆட்டமும், கோலியின் செயல்பாடும் இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து, இந்தத் தொடரை 3-0 என்று கைப்பற்ற உதவியது.

147 ரன்களை இலக்காக கொண்டு இந்திய அணி ஆடத் தொடங்கியது. இடது கை மேட்ஸ்மேனான பன்ட் 42 பந்தில் 65 ரன்கள் குவித்தார். இதில் 4 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும்.

பிசிசிஐ டி.விக்காக ரோஹித் ஷர்மாவிடம் பேசிய பன்ட், "என்னுடைய இன்னிங்ஸை கண்டு மகிழ்ச்சியடைகிறேன். என்னால் அதிக ரன்கள் எடுக்க முடியவில்லை அதனால் நான் விரக்தியடந்தேன். ஆனாலும் நான் தொடர்ந்து போராடினேன், இன்று அதற்கான முடிவு கிடைத்துள்ளது". என்றார்.

விராட் கோலியுடனான 106 ரன்கள் பார்ட்னர்ஷிப் குறித்து பேசிய 21 வயதான பன்ட், "நானும் விராட் பைய்யாவும் ஆடும்போது, நீண்ட பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால், கடைசி 7-8 ஓவர்களில் சில தடுமாற்றம் ஏற்பட்டது" என்றார்.

டெல்லி அணியில் சேர்க்கப்பட்ட போது பன்ட்டின் பால் தேர்வு குறித்து பலரும் விமர்சித்தனர்.

உலகக் கோப்பை அரையிறுதியின் போதும், நியூசிலாந்து அணிக்கு எதிராக தீவிரமாக ஆட வந்த பன்ட் மிட்செல் சாண்ட்னரின் பந்தில் அவுட்டாகி வெளியேறினார். 240 ரன்களை நோக்கி ஆடிவரும் போது 6 அல்லது 7 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார் பன்ட்.

"ரன்கள் எடுக்காத பல நேரத்தில் நான் விரக்தியடைந்துள்ளேன். பின்னர், சிறப்பாக செயல்பட வேறு என்ன செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். நிறைய முறை சரியானவற்றை தேர்வு செய்தும், அதில் என்னால் சிறப்பாக செயல்பட முடியாமல் போனது. கிரிக்கெட்டில் இப்படி நடப்பதும் ஒரு பகுதி என்று எடுத்துக்கொண்டேன்," என்றார் பன்ட்.

"ஆனால் நான் எப்போதும் செய்ய முயற்சிப்பது எனது அடிப்படைகளில் கவனம் செலுத்துவதும், என் உள்ளுணர்வுகளை நம்புவதும், செயல்முறையைப் பின்பற்றுவதுமாகும்" என்றார்.

இந்திய அணியின் எதிர்காலம் என்று பன்ட்டை குறிப்பிட்டுள்ளார் கோலி. இவர் ஒரு போதும் அழுத்தத்தால் சிக்கிக் கொள்வது இல்லை.

"சில நேரம் அழுத்தம் இருக்கும். சில நேரம் விளையாட்டை ரசிப்பேன். ஒட்டுமொத்த அணியும், சீனியர் வீரர்களும் என் மீது அதிகபடியான நம்பிக்கை வைத்திருப்பது எனக்கு மிகப் பெரிய நம்பிக்கை அளிக்கிறது. ஒரிரு போட்டிகளில் தோற்றாலும் அணியினர் எப்போதும் உடனிருப்பது எனக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது. அணியினரின் ஆதரவு ஒரு பெரிய நம்பிக்கையாக உள்ளது," என்றார் பன்ட்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ரிஷப் பன்ட்டை விமர்சித்தவர்களுக்கு பதிலளித்த விராட் கோலி!
ரிஷப் பன்ட்டை விமர்சித்தவர்களுக்கு பதிலளித்த விராட் கோலி!
சையத் முஷ்டாக் அலி டிராஃபியில் இணைந்தார் பன்ட்... இந்திய அணியில் கே.எஸ்.பரத்!
சையத் முஷ்டாக் அலி டிராஃபியில் இணைந்தார் பன்ட்... இந்திய அணியில் கே.எஸ்.பரத்!
"பன்ட்டை விட சிறப்பாக விளையாடுகிறீர்கள்" - இடது கை பேட்டிங் செய்த அஸ்வின்!
"பன்ட்டை விட சிறப்பாக விளையாடுகிறீர்கள்" - இடது கை பேட்டிங் செய்த அஸ்வின்!
"பன்ட்டுக்கு, ஸ்டம்புக்கு பின்னால் தெளிவும் நேர்த்தியும் தேவை" குமார் சங்கக்காரா
"பன்ட்டுக்கு, ஸ்டம்புக்கு பின்னால் தெளிவும் நேர்த்தியும் தேவை" குமார் சங்கக்காரா
ரிஷப் பன்ட்டின் விக்கெட் கீப்பிங்கை விமர்சித்து ரசிகர்கள் பதிவிட்ட மீம்ஸ்!
ரிஷப் பன்ட்டின் விக்கெட் கீப்பிங்கை விமர்சித்து ரசிகர்கள் பதிவிட்ட மீம்ஸ்!
Advertisement