"ஓய்வு குறித்து நான் எதுவும் அறிவிக்கவில்லை" - கிறிஸ் கெயில்!

Updated: 15 August 2019 17:43 IST

கிறிஸ் கெயில், 301 ஜெர்ஸிக்கு சொந்தகாரர், மூன்றாவது ஒருநாள் போட்டியை முடித்தவுடம் விராட் கோலி மற்றும் சில வீரர்களுடன் ஹை ஃபைவ் கொடுத்து, பேட் மீது ஹெல்மெட் வைத்து கொண்டு ட்ரெஸிங் ரூம் சென்றார்.

Chris Gayle Dismisses Retirement Speculations, Says, "I Didnt Announce Anything"
39 வயதான கெயில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தன்னுடைய 301வது போட்டியை ஆடினார். © AFP

கிறிஸ் கெயில், 301 ஜெர்ஸிக்கு சொந்தகாரர், மூன்றாவது ஒருநாள் போட்டியை முடித்தவுடம் விராட் கோலி மற்றும் சில வீரர்களுடன் ஹை ஃபைவ் கொடுத்து, பேட் மீது ஹெல்மெட் வைத்து கொண்டு ட்ரெஸிங் ரூம் சென்றார். இதன்பின் பலரும் அவரின் ஓய்வு குறித்து பேசத் தொடங்கினர். சில ரசிகர்கள், கிறிஸ் கெயில் தன்னுடைய கடைசி ஒருநாள் போட்டியை சிறப்பாக ஆடி முடித்தார் என்றும் அவருக்காக மனதை உருக்கும் மெசேஜ்கள் அனுப்பவும் செய்தனர். இந்நிலையில், கிறிஸ் கெயில் சிறிய வீடியோ ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டார். அதில், "நான் எதையும் அறிவிக்கவில்லை... எந்த ஓய்வு குறித்தும்" என்றார்.

அடுத்த அறிவிப்பு வரும் வரை காத்திருக்குமாறு அவர் கூறினார்.

உலகக் கோப்பைக்கு பிறகு கிறிஸ் கெயில் ஓய்வு பெறுகிறார் என்ற பேச்சு எழுத் தொடங்கியது. அவர் மார்க்யூ தொரருக்கு பிறகு ஓய்வு பெறுவார் என்று சொல்லப்பட்டது.

பிறகு அவர் முடிவை மாற்றி கொண்டு இந்தியாவுடனான் தொடரில் இடம் பெறுவதாக கூறினார். அதன்பின்னர் தன்னால் முடிந்த வரை போட்டிகளில் இடம்பெற போவதாக கூறினார்.

39 வயதான கெயில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தன்னுடைய 301வது போட்டியை ஆடினார். அவர் இந்தப் போட்டியில் 72 ரன்கள் எடுத்தும், இந்திய அணி இந்தத் தொடரில் 2-0 என்று தொடரை கைபற்றியது. 

ஒருநாள் போட்டியில் 37.83. சராசரியுடன் கெயில் 10,480 ரன்கள் குவித்துள்ளார்.

அடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது. அதில், கெயில் இடம்பெறவில்லை.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகினார் கிறிஸ் கெயில்!
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகினார் கிறிஸ் கெயில்!
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
"ஓய்வு குறித்து நான் எதுவும் அறிவிக்கவில்லை" - கிறிஸ் கெயில்!
"ஓய்வு குறித்து நான் எதுவும் அறிவிக்கவில்லை" - கிறிஸ் கெயில்!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம்பெற கெயிலுக்கு அழைப்பு!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம்பெற கெயிலுக்கு அழைப்பு!
முதல் ஒருநாள் போட்டி மழையால் தடை... மைதானத்தில் நடனமாடிய கோலி!
முதல் ஒருநாள் போட்டி மழையால் தடை... மைதானத்தில் நடனமாடிய கோலி!
Advertisement