2வது டி20: "போட்டிக்கு முன்பு உந்துதல் கொடுத்த மஞ்ச்ரேகருக்கு நன்றி" - கோலி!

Updated: 20 September 2019 11:22 IST

டாஸ் போடப்பட்டபோது, சஞ்சய் மஞ்ச்ரேகர் குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டிகளில் விராட் கோலியின் "சிறந்த போட்டி"யை நினைவுப்படுத்தினார்.

Virat Kohli Credits Sanjay Manjrekar For Motivating Him During Mohali T20I Against South Africa
இரண்டாது டி20 போட்டியின் வெற்றிக்கு பின் பேசிய விராட் கோலி "சிறு உந்துதல்" கொடுத்த சஞ்சய் மஞ்ச்ரேகருக்கு நன்றி தெரிவித்தார். © AFP

விராட் கோலி, களத்தில் மிகவும் கடுமையான போட்டியாளர், அதை ஒருபோதும் தவறவிட்டதில்லை. விராட் கோலி தனது களத்திலுள்ள செயல்களால் அணியின் மன உறுதியையும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உயர்த்துகிறார். ஆனால், அவருக்கும் சில சமயங்களில் உந்துதல் தேவைப்படுகிறது. மொகாலியில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில், டாஸ் போடப்பட்டபோது, சஞ்சய் மஞ்ச்ரேகர் குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டிகளில் விராட் கோலியின் "சிறந்த போட்டி"யை நினைவுப்படுத்தினார். "எனக்கு சரியாக நினைவிருந்தால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக போட்டியில் உங்கள் மிகச்சிறந்த இன்னிங்ஸில் ஒன்றை நீங்கள் இங்கு விளையாடியுள்ளீர்கள், அதை அன்பாக நினைவில் கொள்ளுங்கள்," என்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2016ம் ஆண்டு உலக டி20 போட்டியைக் குறிப்பிட்டு, டாஸின் போது சஞ்சய் மஞ்ச்ரேகர் விராட் கோலியிடம் கேட்டிருந்தார்.

இரண்டாது டி20 போட்டியின் வெற்றிக்கு பின் பேசிய விராட் கோலி "சிறு உந்துதல்" கொடுத்த சஞ்சய் மஞ்ச்ரேகருக்கு நன்றி தெரிவித்தார்.

"நீங்கள் (சஞ்சய் மஞ்ச்ரேகர்) எனக்கு சிறந்த டி20 போட்டியை நினைவுப்படுத்தினீர்கள். அதிலிருந்து எனக்கு சிறு உந்துதல் கிடைத்தது. அப்படி விளையாடி, அணிக்காக வெற்றியை கொண்டு வந்தால், அது நல்ல உணர்வாக இருக்கும். அந்த இரவு(ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2016ம் ஆண்டு நடந்த போட்டி), களத்தில் எவ்வளவு ஃபிட்டாக இருக்க முடியும் என்று தெரிந்துகொண்டேன்," என்றார் கோலி.

"பிட்ச் மிகவும் நன்றாக இருந்தது மற்றும் பந்து வீச்சாளர்களிடமிருந்து ஒரு சிறந்த முயற்சியாக இருந்தது"

கேப்டன் கோலி, மொகாலியில் நடந்த போட்டியில் 72 ரன்கள் குவித்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அவர், தன்னுடைய உடல்வலிமையை காட்டி சிறப்பாக கேட்ச் ஒன்றை ஒற்றை கையில் பிடித்தார்.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள இந்தியா, பெங்களூருவின் எம் சின்னசாமி மைதானத்தில் தொடரின் கடைசி போட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஆடவுள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"தொடக்க வீரர் வாய்ப்பு கொடுத்த கோலி, ரவி சாஸ்திரிக்கு நன்றி" - ரோஹிர் ஷர்மா
"தொடக்க வீரர் வாய்ப்பு கொடுத்த கோலி, ரவி சாஸ்திரிக்கு நன்றி" - ரோஹிர் ஷர்மா
தோனி குறித்த கேள்விக்கு செய்தியாளர் சந்திப்பில் விராட் கோலி ஏன் சிரித்தார்?
தோனி குறித்த கேள்விக்கு செய்தியாளர் சந்திப்பில் விராட் கோலி ஏன் சிரித்தார்?
மூன்றாவது டெஸ்ட்டை வென்று 3-0 என்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
மூன்றாவது டெஸ்ட்டை வென்று 3-0 என்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
மூன்று டெஸ்ட் போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
மூன்று டெஸ்ட் போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
விராட் கோலியின் வினோத ரியாக்‌ஷன்...
விராட் கோலியின் வினோத ரியாக்‌ஷன்... 'கல்லி பாய்'உடன் ஒப்பிட்ட ரசிகர்கள்!
Advertisement