"ஒரு பீர் ஒரு லட்சம் டாலரா?" - ஆஸ்திரேலிய ஹோட்டலில் நடந்த அக்கப்போர்!

Updated: 06 September 2019 16:33 IST

ஒரு ஆஸ்திரேலிய கிரிக்கெட் எழுத்தாளர், மான்செஸ்டரில் ஒரு பீர் குடிக்க அவருக்கு தவறுதலாக அதிக பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Here Is The Huge Amount Australian Cricket Writer Mistakenly Paid For 1 Beer In Manchester
ஒரு பீருக்கு மான்செஸ்டரில் உள்ள மால்மைசன் ஹோட்டலில் 99,983 டாலர் பணம் செலுத்தினேன் - பீட்டர் லயோர் © Peter Lalor/Twitter

வீட்டை விட்டு வெளியில் எங்கு சென்று குடித்தாலும், விலையுயர்ந்ததாகவே உள்ளது. இருப்பினும், ஒரு மதுவுக்கு ஆறு இலக்கு பணத்தை செலுத்துவதை உங்கள் கனவில் கூட கற்பனை செய்திருக்க மாட்டீர்கள். ஒரு ஆஸ்திரேலிய கிரிக்கெட் எழுத்தாளர், மான்செஸ்டரில் ஒரு பீர் குடிக்க அவருக்கு தவறுதலாக அதிக பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கான எழுத்தாளராக இருக்கும் பீட்டர் லயோர், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ஒரு பீருக்கு 99,983 ஆஸ்திரேலியன் டாலர் பில் போட்டதாக கூறியுள்ளார். இதில், வருத்தமான விஷயம் என்னவென்றார், பணம் கொடுத்த பிறகு தான் அவர் இதை கவனித்துள்ளார்.

மான்செஸ்டரி நடக்கும் ஆஷஸ் தொடரில் உள்ள லயோர், தன் ட்விட்டர் பக்கத்தில், "வரலாற்றிலேயே அதிக விலைகொண்ட பீர்" என்று பதிவிட்டார்.

அவர் குடித்த பீரின் புகைப்படம் பகிர்ந்து, லயோர்: "இந்த பீரை பாருங்கள்? வரலாற்றில் அதிக விலை உடையது. மான்செஸ்டரில் உள்ள மால்மைசன் ஹோட்டலில் 99,983 டாலர் பணம் செலுத்தினேன். உண்மையாக." 

"இது நல்ல பீர். இதனுடைய ஒரிஜினல் வெர்ஷன் பல விருதுகளை பெற்றுள்ளது. முக்கியமாக சுப்ரீம் சாம்பியன் பீர் ஆஃப் பிரிட்டன் என்ற விருது பெற்றுள்ளது. எந்த பீரும் 100,000 டாலர் இருக்காது என்று நீங்கள் நினைத்தால், அதையே தான் நானும் ஏற்கிறேன்." என்றார்.

லயோர், பீருக்கான பில் வழங்கப்பட்டபோது தான் கண்ணாடி அணியவில்லை என்று கூறினார்.

பிபிசி தகவல்படி, ஹோட்டல் அதிகாரி: "என்ன நடந்தது என்ற விசாரணையை நடத்தி வருகிறோம். இது குறித்து நாங்கள் பீட்டரை தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டோம், மேலும் இந்த பிரச்னையை விரைந்து முடிக்க முயற்சி செய்து வருகிறோம்." என்றார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
Ashes 2019: கண்ணாடி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்மித் மற்றும் லீச்!
Ashes 2019: கண்ணாடி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்மித் மற்றும் லீச்!
Ashes 2019: ஸ்டீவ் ஸ்மித்தின் ஆஷஸ் சாதனைகள்!
Ashes 2019: ஸ்டீவ் ஸ்மித்தின் ஆஷஸ் சாதனைகள்!
"Sand paperஐ விட பேட் வலிமையானது" - ஸ்மித்தை பாராட்டிய இங்கிலாந்து ரசிகர்கள்!
"Sand paperஐ விட பேட் வலிமையானது" - ஸ்மித்தை பாராட்டிய இங்கிலாந்து ரசிகர்கள்!
உலகின் சிறந்த வீரருடன் ஸ்மித்... ஆஸி. வீரர்களை கலாய்த்த சோமர்செட் கிரிக்கெட்!
உலகின் சிறந்த வீரருடன் ஸ்மித்... ஆஸி. வீரர்களை கலாய்த்த சோமர்செட் கிரிக்கெட்!
"டிம் பெயினுக்கு பிறகு ஆஸ்திரேலியாவை ஸ்மித் வழிநடத்துவார்" - மார்க் டெய்லர்!
"டிம் பெயினுக்கு பிறகு ஆஸ்திரேலியாவை ஸ்மித் வழிநடத்துவார்" - மார்க் டெய்லர்!
Advertisement