"கிரிக்கெட் வீரர்களில் தோனி எப்போதும் சிறந்தவர்" - ரவி சாஸ்திரி

Updated: 09 October 2019 13:40 IST

இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, உலகக் கோப்பைக்குப் பிறகு விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனை சந்திக்கவில்லை, ஆனால் "அவர் தான் முடிவு செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Ravi Shastri Speaks On MS Dhoni
உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா வெளியேறிய பிறகு, தோனி, ஒரு போட்டியை கூட விளையாடவில்லை. © AFP

உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா வெளியேறிய பிறகு, தோனி, ஒரு போட்டியை கூட விளையாடவில்லை. கிரிக்கெட்டிலிருந்து இரண்டு மாதங்கள் ஓய்வு பெற்ற பிறகு தோனி, மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்களில் இடம்பெறவில்லை. பல ரசிகர்களும் விமர்சகர்களும் எம்.எஸ்.தோனியின் எதிர்காலத் திட்டங்களை அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர், அவர் எப்போது வேண்டுமானாலும் கிரிக்கெட்டுக்கு மீண்டும் வருவார். இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, உலகக் கோப்பைக்குப் பிறகு விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனை சந்திக்கவில்லை, ஆனால் "அவர் தான் முடிவு செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.

எம்.எஸ். தோனியின் வருகையைப் பற்றி அணிக்கு திறந்த மனது இருக்கிறதா என்று கேட்டதற்கு, தி இந்துக்கு அளித்த பேட்டியில், ரவி சாஸ்திரி "அவர் எங்கள் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக விளங்குகிறார், பட்டியலில் மிக உயர்ந்தவர்,"  என்று கூறினார்.

"அவர் திரும்பி வர விரும்புகிறாரா என்பதை அவர் தான் தீர்மானிக்க வேண்டும். உலகக் கோப்பைக்குப் பிறகு நான் அவரைச் சந்திக்கவில்லை. அவர் முதலில் விளையாடுவதைத் தொடங்க வேண்டும், மேலும் விஷயங்கள் எப்படிப் போகின்றன என்பதைப் பார்ப்போம்" என்று அவர் கூறினார்.

50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை தலைப்பு வெற்றிகளுக்கு அழைத்துச் சென்ற 38 வயதான விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் தற்போது களத்துக்கு வெளியில் இருந்து தனது நேரத்தை அனுபவித்து வருகிறார்.

அவர் சமீபத்தில் மும்பையில் நடந்த டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டர் பேஸுடன் ஒரு தொண்டு கால்பந்து போட்டியில் பங்கேற்றார்.

உலகக் கோப்பைக்கு பிறகு தோனி, ராணுவத்தில் பணியாற்ற இரண்டு மாதங்கள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அதனால், மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்துக்கும் அவர் தயாராகவில்லை.

தனது இராணுவப் பணியை முடித்தபின், தோனி தனது சொந்த ஊரான ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ சர்வதேச மைதான வளாகத்தில் பில்லியர்ட்ஸ் விளையாடினார்.

அதற்கு முன்னர், தோனி தான் புதிதாக வாங்கிய ஜீப் கிராண்ட் செரோகி ட்ராக்ஹாக்கை ஓட்டிய படங்களும் வைரலாகின.

Comments
ஹைலைட்ஸ்
  • உலகக் கோப்பைக்கு பிறகு, தோனி, ஒரு போட்டியை கூட விளையாடவில்லை
  • மேற்கிந்திய தீவுகள், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இடம்பெறவில்லை
  • உலகக் கோப்பைக்குப் பிறகு ரவி சாஸ்திரி தோனியை சந்திக்கவில்லை
தொடர்புடைய கட்டுரைகள்
IPL 2020: "காட்டின் ராணி" சாக்‌ஷி தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சிஎஸ்கே!
IPL 2020: "காட்டின் ராணி" சாக்‌ஷி தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சிஎஸ்கே!
இந்தியா vs பங்களாதேஷ்: MS Dhoni-யின் சாதனையை முறியடித்த Virat Kohli....!
இந்தியா vs பங்களாதேஷ்: MS Dhoni-யின் சாதனையை முறியடித்த Virat Kohli....!
"அணியில் இணைகிறாரா தோனி?" - வைரலாகும் பயிற்சி வீடியோ
"அணியில் இணைகிறாரா தோனி?" - வைரலாகும் பயிற்சி வீடியோ
"தோனியின் அறிவுரை தான் எனக்கு இப்போதும் உதவுகிறது" - தீபக் சஹார்
"தோனியின் அறிவுரை தான் எனக்கு இப்போதும் உதவுகிறது" - தீபக் சஹார்
நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் தோனி: தகவல்!
நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் தோனி: தகவல்!
Advertisement