வீரர்களின் வேலைப்பளு குறித்து பிசிசிஐ எதுவுமே சொல்லவில்லை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

Updated: 20 February 2019 12:34 IST

முன்னதாக தேர்வுக்குழு சேர்மன் பிரசாத் உலகக் கோப்பையை மனதில் கொண்டு ஐபிஎல் தொடரின் போது வீரர்களின் வேலைப்பளு கண்காணிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

KKR Say They Haven
தினேஷ் கார்த்திக், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக நிர்ணயிக்கப்பட்டுள்ளார் © BCCI/File Photo

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் தொடரின் 2012 மற்றும் 2014 சீசன்களை வென்ற அணி. 2019 சீசனை மார்ச் 24ம் தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் துவங்குகிறது. கொல்கத்தா அணியின் சிஇஓ மைசூர் வீரர்களின் வேலைப்பளு குறித்து பிசிசிஐ இன்னும் எதுவும் தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார். முன்னதாக தேர்வுக்குழு சேர்மன் பிரசாத் உலகக் கோப்பையை மனதில் கொண்டு ஐபிஎல் தொடரின் போது வீரர்களின் வேலைப்பளு கண்காணிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இன்னும் எந்த அறிவிப்பும் வரவில்லை என்று கூறிய மைசூர் சிஇஓ வெங்கி, இதற்கான வழிமுறைகளை எந்த பிரச்ச்னையுமின்றி நிறைவேற்றுவோம் என்றும் கூறியுள்ளார்.

இருந்தாலும் இது ஒரு இக்கட்டான சூழலில் தான் உடல் தகுதி குறித்து பயிற்சியாளர்கள், வீரர்களுக்கு எப்பவுமே சிறந்த அக்கறை இருக்கும். 

"மே 12ம் தேதியன்று இரண்டு அணிகள் தான் ஐபிஎல் ஃபைனலில் மோதவுள்ளன. அதற்காக சிறந்த வீரர்களுடன் ஆட வேண்டியது அவசியம்" என்றார்.

"ஐபிஎல் தொடர் மார்ச் 23ம் தேதி துவங்குகிறது. உலகக் கோப்பை மே 30ம் தேதி துவங்குகிறது. ஆனால் இந்தியா மோதும் முதல் போட்டி ஜூன் 6ம் தேதி தான் நடக்கிறது. அதனால் போட்டிகளுக்கிடையே போதிய இடைவெளி உள்ளது" என்று கூறினார்.

கடந்த நவம்பர் மாதம் பிசிசிஐ-யின் நிர்வாகக் கமிட்டி கூட்டத்தை நடத்தியது. இதில் கேப்டன் கோலி, ரஹானே, ரோஹித் ஷர்மா, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, தேர்வுக்குழு சேர்மன் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் கேப்டன் கோலி, "ஐபிஎல் தொடரில் புவனேஷ்வர் குமார், பும்ராஹ், ஷமி ஆகியோர் உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு ஆடுவதை தவிர்க்க வேண்டும்" என்று விருப்பம் தெரிவித்தார்.

பொதுத்தேர்தல் காரணமாக போட்டிகள் இந்தியா மற்றும் இந்தியாவுக்கு வெளியே என்ற அடிப்படையில் அமைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியானது.

இது குறித்து கருத்து தெரிவித்த மைசூர் "பெரும்பாலான போட்டிகளை கொல்கத்தாவில் நடத்த முயற்சி செய்வோம். மொத்த போட்டி தொடரும் இந்தியாவில் நடக்க வேண்டும் என்பதை விரும்புவதாகவும்,  இந்தியாவிற்குள்ளாகவே பொது மைதானங்களில் ஆடுவது சிக்கல் இருக்காது என்றும் கூறினார்.

இந்நிலையில் முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

 

மேலும் படிக்க - “ஐபிஎல் முதல் போட்டியில் கோலி - தோனி மோதல்!

Comments
ஹைலைட்ஸ்
  • ஐபிஎல் தொடரின் 2012 மற்றும் 2014 சீசன்களை வென்றது கேகேஆர்
  • வீரர்களின் வேலைப்பளு குறித்து பிசிசிஐ எதுவும் தெரிவிக்கவில்லை: கேகேஆர்
  • கேகேஆர், மார்ச் 24ம் தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் துவங்குகிறது
தொடர்புடைய கட்டுரைகள்
IPL 2020: வீரர்களின் பட்டியல் மற்றும் ஏலத்திற்கான அவர்களின் அடிப்படை விலை
IPL 2020: வீரர்களின் பட்டியல் மற்றும் ஏலத்திற்கான அவர்களின் அடிப்படை விலை
விதிமுறை மீறலுக்காக தடை செய்யப்படும் இந்திய வீரர் - பிசிசிஐ அறிவிப்பு
விதிமுறை மீறலுக்காக தடை செய்யப்படும் இந்திய வீரர் - பிசிசிஐ அறிவிப்பு
ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி: மும்பைக்கு நன்றி சொன்ன ஹைதராபாத் ரசிகர்கள்!
ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி: மும்பைக்கு நன்றி சொன்ன ஹைதராபாத் ரசிகர்கள்!
ஆர்சிபியிடம் தோற்ற சன் ரைசர்ஸை மீம்ஸ்களால் வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
ஆர்சிபியிடம் தோற்ற சன் ரைசர்ஸை மீம்ஸ்களால் வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
ஐபிஎல் 2019: விதி மீறல் காரணமாக ரோஹித் ஷர்மாவுக்கு அபராதம்!
ஐபிஎல் 2019: விதி மீறல் காரணமாக ரோஹித் ஷர்மாவுக்கு அபராதம்!
Advertisement