பெயரில் எழுத்துப்பிழை... கடுமையாக விமர்சிக்கப்படும் சி.ஏ.சி!

Updated: 17 August 2019 18:11 IST

பிசிசிஐயின் ட்விட்டர் பக்கத்தில் பயிற்சியாளரின் பெயரில் எழுத்துப்பிழையுடன் பதிவிட்டது ரசிகர்களை பொங்கியெழச் செய்துள்ளது.

"Hassen, Who?": Fans Troll Cricketing Advisory Committee After Spelling Gaffe
ரவி சாஸ்திரியை மீண்டும் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்ததற்கு ரசிகர்கள் பிசிசிஐ மற்றும் சிஏசியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். © BCCI/Twitter

ரவி சாஸ்திரியை மீண்டும் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்ததற்கு ரசிகர்கள் பிசிசிஐ மற்றும் சிஏசியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். சிஏசியின் தேர்வில் மட்டும் ரசிகர்கள் கோவப்படவில்லை. பிசிசிஐயின் ட்விட்டர் பக்கத்தில் பயிற்சியாளரின் பெயரில் எழுத்துப்பிழையுடன் பதிவிட்டது ரசிகர்களை பொங்கியெழச் செய்துள்ளது. முன்னாள் நியூசிலாந்து பயிற்சியாளர் மைக் ஹெஸனும் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார். சிஏசி தலைவரான கபில் தேவ், ஹெஸனும் சாஸ்திரிக்கு நெருங்கி வந்தார், ஆனால் இடண்டாவது இடத்தை பிடித்தார் என்று கூறியிருந்தார். இருந்தாலும், அந்த கடிதத்தில், மைக் ஹெசனின் பெயரின் எழுத்துப்பிழையுடன் பதிவிட்டது.

ஏற்கெனவே ரவி சாஸ்திரியின் தேர்வுக்கு அதிருப்தி தெரிவித்த ரசிகர்கள், இதற்கு பின்னர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

தலைமை பயிற்சியாளர் பதவிக்கு சாஸ்திரியை தவிர ராபின் சிங், லால்சந்த் ராஜ்புட், நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெஸன் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் டாம் மூடி ஆகியோர் விண்ணப்பித்திருந்தனர்.

 உலகக் கோப்பையின் போதே ரவி சாஸ்திரியின் பதவி காலம் முடிவடைந்தது. மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்துக்காக பதிவி காலம் நீட்டிக்கப்பட்டது.

2021 டி20 உலகக் கோப்பை வரையில் ரவி சாஸ்திரியை நியமித்துள்ளனர். இந்திய அணிக்காக சாஸ்திரி நியமிக்கப்பட்டிருப்பது இது 4வது முறையாகும். 2007ம் ஆண்டும் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் கிரிக்கெட் மேலாளராக இருந்தார், 2014-2016 அணியின் இயக்குநராக இருந்தார் மற்றும் 2017-2019 தலைமைப் பயிற்சியாளராக இருந்தார்.

"மூன்றாவது இடத்தில் டாம் மூடி, இரண்டாவது இடத்தில் மைக் ஹெஸன் இருந்தனர். எல்லோரும் எதிர்பார்ப்பது போல் ரவி சாஸ்திரி தான் முதலிடத்தில் உள்ளார்... ஆனால், இது மிகவும் நெருக்கமான போட்டியாக இருந்தது," செய்தியாளர் சந்திப்பில் கபில் தேவ் கூறினார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
உலகத்தின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானம்... படத்தை வெளியிட்ட பிசிசிஐ!
உலகத்தின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானம்... படத்தை வெளியிட்ட பிசிசிஐ!
ஐபிஎல் போட்டிகளின் முழு அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ!
ஐபிஎல் போட்டிகளின் முழு அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ!
“ஒரு புலி இன்னொரு புலியை சந்தித்தால்...” - தோனி ரசிகரின் வைரல் கமெண்ட்!
“ஒரு புலி இன்னொரு புலியை சந்தித்தால்...” - தோனி ரசிகரின் வைரல் கமெண்ட்!
நியூசிலாந்து டெஸ்ட்டில் இடம்பெறுவாரா இஷாந்த் ஷர்மா?
நியூசிலாந்து டெஸ்ட்டில் இடம்பெறுவாரா இஷாந்த் ஷர்மா?
"சவுரவ் கங்குலி டெஸ்ட் கிரிக்கெட்டை இறக்க விட மாட்டார்" - சோயிப் அக்தர்
"சவுரவ் கங்குலி டெஸ்ட் கிரிக்கெட்டை இறக்க விட மாட்டார்" - சோயிப் அக்தர்
Advertisement