ஆஸ்திரேலிய பிக்பேஷ்: ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடி

Updated: 10 December 2018 17:11 IST

சிட்னி தண்டர்ஸ் அணிக்காக ஆடிவரும் ஹர்மன்ப்ரீத் கவுர் நேற்று பிரிஸ்பென் ஹீட் அணிக்கு எதிராக  ஆடிய போட்டியில் 26 பந்தில் 56 ரன்கள் குவித்தார்

Harmanpreet Kaur Takes The Women
ஹர்மன்ப்ரீத் சிட்னி தண்டர்ஸ் அணிக்கும், ஸ்ம்ரிதி மந்தனா ஹோபர்ட் ஹரிகென்ஸ் அமிக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். © ICC/Twitter

இந்திய பெண்கள் அணியின் டி20 கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பெண்கள் பிக்பேஷ் லீக்கில் அதிரடியாக ஆடி வருகிறார். சிட்னி தண்டர்ஸ் அணிக்காக ஆடிவரும் ஹர்மன்ப்ரீத் கவுர் நேற்று பிரிஸ்பென் ஹீட் அணிக்கு எதிராக  ஆடிய போட்டியில் 26 பந்தில் 56 ரன்கள் குவித்தார். ஆறு பவுண்டரிகள் மூன்று சிக்ஸர்கள் விளாசினார் கவுர். இதனால் இந்த ஆட்டத்தை சிட்னி தண்டர்ஸ் 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

ஹர்மன்ப்ரீத் சிட்னி தண்டர்ஸ் அணிக்கும், ஸ்ம்ரிதி மந்தனா ஹோபர்ட் ஹரிகென்ஸ் அமிக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ஹர்மன்ப்ரீத் தான் பெண்கள் பிக்பேஷ் லிக்கின் இரண்டாவது சீஸனின் அதிகபட்ச ரன் குவித்தவர். 12 ஆட்டங்களில் 59.2 என்ற சராசரியுடன் 296 ரன்கள் குவித்தார், மேலும் அந்த தொடருக்காக தொடர்நாயகி விருதையும் வென்றார். அப்போது ஸ்ம்ரிதி பிரிஸ்பென் ஹீட் அணிக்காக ஆடி வந்தார்.

இதற்கு முன்பாக இந்தியாவின் முன்னணி வீராங்கனை மிதாலி ராஜுக்கும் ஹர்மன்ப்ரீத் கவுருக்கும் இடையே சர்ச்சை வலுத்தது. பெண்கள் டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக மிதாலி ராஜுக்கு  ஓய்வு வழங்கப்பட்டது. அந்த அணியை மாற்ற வேண்டாம் என்ற கருத்தின் அடிப்படையில்தான் மிதாலி அணியில் சேர்க்கவில்லை. மிதாலி சேர்க்கப்படாமல் போனதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை'' என்று  ஹர்மன்ப்ரீத் கவுர் கூறினார். மேலும் இந்த விஷயத்தில் பயிற்சியாளர் ரமேஷ் பவாருக்கு ஆதரவளித்ததும் குறிப்பிடத்தக்கது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
100 டி20 போட்டிகளில் இடம்பெற்ற முதல் இந்தியரானார் ஹர்மன்பிரீத் கவுர்!
100 டி20 போட்டிகளில் இடம்பெற்ற முதல் இந்தியரானார் ஹர்மன்பிரீத் கவுர்!
"கிரிக்கெட் ஆட சச்சின்தான் காரணம்" - பெண்கள் அணி வீராங்கனை ஷஃபாலி
"கிரிக்கெட் ஆட சச்சின்தான் காரணம்" - பெண்கள் அணி வீராங்கனை ஷஃபாலி
பெண்கள் டி20 சேலஞ்சுக்கு மிதாலி,மந்தனா, கவுர் கேப்டன்!
பெண்கள் டி20 சேலஞ்சுக்கு மிதாலி,மந்தனா, கவுர் கேப்டன்!
மே 6ல் துவங்குகிறது பெண்கள் டி20 லீக் தொடர்!
மே 6ல் துவங்குகிறது பெண்கள் டி20 லீக் தொடர்!
இங்கிலாந்து டி20 தொடர்: பெண்கள் அணிக்கு ஸ்மிருதி மந்தனா கேப்டன்!
இங்கிலாந்து டி20 தொடர்: பெண்கள் அணிக்கு ஸ்மிருதி மந்தனா கேப்டன்!
Advertisement