டிவி ஷோ சர்ச்சை: ராகுல், பாண்ட்யாவுக்கு தலா 20 லட்சம் அபராதம்!

Updated: 20 April 2019 16:44 IST

இந்திய வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே.எல் ராகுல் டிவி நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து தவறான விஷயங்களை முன் வைத்ததற்காக பிசிசிஐ ஓம்பட்ஸ்மன் கமிட்டி தலா 20 லட்ச ரூபாய் அபராதத்தை இருவருக்கும் விதித்துள்ளது.

Hardik Panyda, KL Rahul Fined Rs 20 Lakh For TV Chat Show Comments
ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே.எல் ராகுல் இருவருக்கும் தலா 20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. © Instagram

இந்திய வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே.எல் ராகுல் டிவி நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து தவறான விஷயங்களை முன் வைத்ததற்காக பிசிசிஐ ஓம்பட்ஸ்மன் கமிட்டி தலா 20 லட்ச ரூபாய் அபராதத்தை இருவருக்கும் விதித்துள்ளது. இந்த தகவலை பிசிசிஐ தனது இணையத்தில் வெளியிட்டுள்ளது. இவர்கள் இருவரும் ஏற்கெனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

2019 உலகக் கோப்பையில் ஆடவுள்ள இரண்டு வீரர்களுக்கும் தலா 20 லட்ச ரூபாய் அபராதத்தை விதித்தனர். இதில் தலா ஒரு லட்ச ரூபாயை பார மிலிட்டரி குடும்பங்களுக்கு வழங்க உத்தரவிட்டனர்.

இதில், தலா பத்து லட்ச ரூபாயை பிசிசிஐ ஏற்படுத்தியுள்ள பார்வையற்றோர் கிரிக்கெட் அசோஷியேஷனுக்கு வழங்க வேண்டும் என ஓம்பட்ஸ்மன் தலைவர் ஜெயின் கூறியுள்ளார்.

19.4.2019லிருந்து நான்கு மாதத்துக்குள் இந்த அபராதம் கட்டப்பட்டிருக்க வேண்டும். 

முன்னதாக ராகுல் , பாண்ட்யா வழக்கை ஓம்பட்ஸ்மனை விசாரிக்க உத்தரவிட்டனர். இருவரும் ஏற்படுத்திய சர்ச்சை தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இருவரும் வாழ்நாளின் கடுமையான பக்கங்களை சந்தித்து மீண்டுள்ளனர்.

Comments
ஹைலைட்ஸ்
  • டிவி நிகழ்ச்சியில் தவறாக பேசிய ராகுல்,பாண்ட்யாவுக்கு தலா 20லட்சம் அபராதம்
  • இந்த தகவலை பிசிசிஐ தனது இணையத்தில் வெளியிட்டுள்ளது
  • ராகுல்,பாண்ட்யா இருவரின் மேல் வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது
தொடர்புடைய கட்டுரைகள்
ஹர்திக் பாண்ட்யாவை கலாய்த்த க்ருணால் பாண்ட்யா!
ஹர்திக் பாண்ட்யாவை கலாய்த்த க்ருணால் பாண்ட்யா!
தென்னாப்பிரிக்க தொடருக்கு முன் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுப்பட்ட க்ருணால் பாண்ட்யா !
தென்னாப்பிரிக்க தொடருக்கு முன் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுப்பட்ட க்ருணால் பாண்ட்யா !
"ஹர்திக் பாண்ட்யாவின் வளர்ச்சியில் எந்த ஆச்சரியமும் இல்லை" - கீரன் பொல்லார்ட்!
"ஹர்திக் பாண்ட்யாவின் வளர்ச்சியில் எந்த ஆச்சரியமும் இல்லை" - கீரன் பொல்லார்ட்!
ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹர்திக் பாண்ட்யா!
ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹர்திக் பாண்ட்யா!
பேபி சிட்டராக மாறிய ஹர்திக் பாண்ட்யா! #Video
பேபி சிட்டராக மாறிய ஹர்திக் பாண்ட்யா! #Video
Advertisement