ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹர்திக் பாண்ட்யா!

Updated: 22 August 2019 16:35 IST

25 வயதான ஹர்திக் பாண்ட்யா கடைசியாக உலகக் கோப்பையில் இடம்பெற்றார். அதில் இந்திய அணி அரையிறுதியில் வெளியேறியது.

Hardik Pandya Rules The Catwalk In Break From Cricket. See Pictures
பாண்ட்யா இதுவரை 11 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். © Twitter

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் இடம்பெறாமல் ஓய்வு பெற்றுள்ளார். அவர் இப்போது ஃபேஷன் ஷோ ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.  அந்த நிகழ்வின் புகைப்படங்கள் பகிரப்பட்டது. அதில் ஹர்திக் பாண்ட்யா நடிகை லிசா ஹைடன் மற்றும் ஃபேஷன் வடிவமைப்பாளர் அமித் அகர்வாலுடன் நடந்து வருகிறார். " அழகான @HaydonLisa மற்றும் @hardikpandya7 பெரிய நிகழ்வை சிறப்பாக முடித்து வைத்தனர்  @RElanOfficial @iamitaggarwal," என்று பதிவிடப்பட்டது.

25 வயதான ஹர்திக் பாண்ட்யா கடைசியாக உலகக் கோப்பையில் இடம்பெற்றார். அதில் இந்திய அணி அரையிறுதியில் வெளியேறியது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வளிக்கப்பட்டது. மூன்று டி20 போட்டியையும் இந்தியா கைப்பற்றியது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியை 2-0 என்று வென்றுள்ளது. முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

பாண்ட்யா இதுவரை 11 டெஸ்ட் போட்டிகளில் ஆடி, 532 ரன்கள் எடுத்ததுடன் 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் இடம்பெற்றார். இதில் இந்தியா நான்காவது டெஸ்ட்டில் தோற்றது.

நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிகளில் பாண்ட்யா இடம்பெறவில்லை, அந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் தோற்றது. 

குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டியில் சிறப்பாக செயல்பட்டதால், இந்திய அணி, டெஸ்ட் போட்டிகளில் வெல்லும் முனைப்போடு ஆடவுள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
விஜய் சங்கரின் சட்டையில்லா புகைப்படத்தை ட்ரோல் செய்த ரசிகர்கள்!
விஜய் சங்கரின் சட்டையில்லா புகைப்படத்தை ட்ரோல் செய்த ரசிகர்கள்!
"நீங்கள் வந்தது மகிழ்ச்சி" - நீதா அம்பானிக்கு நன்றி தெரிவித்த ஹர்திக் பாண்ட்யா!
"நீங்கள் வந்தது மகிழ்ச்சி" - நீதா அம்பானிக்கு நன்றி தெரிவித்த ஹர்திக் பாண்ட்யா!
ஹர்திக் பாண்ட்யாவின் வாழ்த்துக்கு அமைதியாக பதிலளித்த ஜாகீர் கான்!
ஹர்திக் பாண்ட்யாவின் வாழ்த்துக்கு அமைதியாக பதிலளித்த ஜாகீர் கான்!
ஜாகீர் கான் பிறந்தநாளுக்கு ஹர்திக் பாண்ட்யாவின் சர்ச்சையான ட்விட்!
ஜாகீர் கான் பிறந்தநாளுக்கு ஹர்திக் பாண்ட்யாவின் சர்ச்சையான ட்விட்!
"எந்த நேரமும் திரும்பி வருவேன்" - சிகிச்சைக்கு பின் ஹர்திக் பாண்ட்யா
"எந்த நேரமும் திரும்பி வருவேன்" - சிகிச்சைக்கு பின் ஹர்திக் பாண்ட்யா
Advertisement