"எந்த நேரமும் திரும்பி வருவேன்" - சிகிச்சைக்கு பின் ஹர்திக் பாண்ட்யா

Updated: 05 October 2019 12:11 IST

"சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி. எந்த நேரத்திலும் திரும்பி வருவேன்! அதுவரை என்னை மிஸ் செய்யுங்கள்" என்று பதிவிட்டார் ஹர்திக் பாண்ட்யா.

Hardik Pandya Promises "To Be Back In No Time" After Undergoing Back Surgery
25 வயதான  ஹர்திக் பாண்ட்யா, 11டெஸ்ட், 54 ஒருநாள் மற்றும் 40 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். © AFP

இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா, நீண்ட நாட்களாக இருந்த முதுகு வலிக்கு சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இந்த சிகிச்சை அவரை பல நாட்கள் கிரிக்கெட்டிலிருந்து விலக் செய்துள்ளது. ஹர்திக் பாண்ட்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய புகைப்படத்தை பதிவிட்டு, "சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி. எந்த நேரத்திலும் திரும்பி வருவேன்! அதுவரை என்னை மிஸ் செய்யுங்கள்" என்று பதிவிட்டார். 2018ம் ஆண்டு இந்தியாவின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலும், 2019 உலகக் கோப்பையிலும் அவருக்கு சிகிச்சையளித்த அதே மருத்துவரால் முதுகெலும்பைப் பரிசோதிக்க புதன்கிழமை ஹர்திக் பாண்ட்யா யுனைடெட் கிங்டம் புறப்பட்டார்.

ஹார்டிக் பாண்ட்யா கடைசியாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இடம்பெற்றார். அங்கு அவர் முதுகில் ஏற்பட்ட காயம் அதிகரித்தது.

நவம்பர் 3ம் தேதி தொடங்கி இந்தியாவில் நடைபெறவுள்ள பங்களாதேஷுக்கு எதிரான டி20 தொடரை ஹார்டிக் பாண்ட்யா தவறவிடுவார்.

25 வயதான  ஹர்திக் பாண்ட்யா, 11டெஸ்ட், 54 ஒருநாள் மற்றும் 40 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் உலக டி20 போட்டியில் இந்திய அணியின் ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பார்.

இந்தியா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முத டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. டீன் எல்கர் மற்றும் குயின்டன் டி காக் சதங்கள் தென்னாப்பிரிக்கா இந்தியாவை எதிர்த்து வெள்ளிக்கிழமை போராடி எட்டு விக்கெட்டுக்கு 385 ரன்களை எட்டியது.

விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்டின் மூன்றாம் நாளில் இந்திய பந்துவீச்சு தாக்குதலைத் தடுக்க டி காக் 111 ரன்கள் எடுத்து, 160 ரன்கள் எடுத்த எல்கருடன் 164 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

ஆஃப்-ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் 66 டெஸ்ட் போட்டிகளில் தனது 27 வது ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

3ம் நாள் ஸ்டம்பில், தென்னாப்பிரிக்கா இன்னும் 117 ரன்கள் வித்தியாசத்தில் பின்தங்கியிருந்தது, இந்தியா முதல் இன்னிங்ஸ்ல் 7 விக்கெட் இழப்புக்கு 502 ரன்கள் எடுத்தது.

Comments
ஹைலைட்ஸ்
  • ஹர்திக் பாண்ட்யாவுக்கு முதுகு வலி சிகிச்சை நடந்தது
  • சிகிச்சைக்கு பின் ஹர்திக் பாண்ட்யா புகைப்படம் பதிவிட்டார்
  • எந்த நேரத்திலும் திரும்பி வருவதாக ஹர்திக் பாண்ட்யா உறுதியளித்துள்ளார்
தொடர்புடைய கட்டுரைகள்
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்  தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா நீக்கம்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா நீக்கம்!
புதிய தேர்வுக்குழு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அணியை தேர்வு செய்யவுள்ளது - கங்குலி!
புதிய தேர்வுக்குழு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அணியை தேர்வு செய்யவுள்ளது - கங்குலி!
வருங்கால மனைவி நடாசாவுடன் அபிமான படத்தை பகிர்ந்த ஹர்திக் பாண்ட்யா!
வருங்கால மனைவி நடாசாவுடன் அபிமான படத்தை பகிர்ந்த ஹர்திக் பாண்ட்யா!
"இந்த அற்புதமான உணர்வைத் தவறவிட்டேன்" - பயிற்சியின் போது ஹர்திக் பாண்ட்யா!
"இந்த அற்புதமான உணர்வைத் தவறவிட்டேன்" - பயிற்சியின் போது ஹர்திக் பாண்ட்யா!
"என்ன நடக்கும் என்று அப்போது எங்களுக்கு தெரியவில்லை" - ஹர்திக் பாண்ட்யா!
"என்ன நடக்கும் என்று அப்போது எங்களுக்கு தெரியவில்லை" - ஹர்திக் பாண்ட்யா!
Advertisement