ஹர்திக் பாண்ட்யாவை கலாய்த்த க்ருணால் பாண்ட்யா!

Updated: 11 September 2019 16:53 IST

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் க்ருணால் பாண்ட்யா மற்றும் ஹர்திக் பாண்ட்யா இருவரும் ஆடவுள்ளனர்.

Hardik Pandya Pokes Fun At Brother Krunal Pandya After "Almost Knocking Head Off". Watch
உலகக் கோப்பைக்கு பிறகு ஹர்திக் பாண்ட்யாவுக்கு இது முதல் போட்டியாகும். © Twitter

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் வரும் செப்டம்பர் 15ம் தேதி தொடங்கவுள்ளது. இதில், க்ருணால் பாண்ட்யா மற்றும் ஹர்திக் பாண்ட்யா இருவரும் ஆடவுள்ளனர். பயிற்சி ஆட்டத்தில் ஈடுப்பட்ட சகோதரர்களில், ஹர்திக் பாண்ட்யா, க்ருணால் பாண்டியாவின் தலைக்கு அருகில் பந்தை ஓங்கி அடித்தது போன்ற வீடியோவை பகிர்ந்தார். பயிற்சியாட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை ஆடினார். "பயிற்சி ஆட்டத்தில் பாண்ட்யா vs பாண்ட்யா. நான் இந்த ரவுண்டை வென்றேன் அண்ணா @krunalpandya24. P.S: தலைக்கு அருகில் பந்து அடித்ததற்கு மன்னிக்கவும்," என்று ட்விட் செய்தார் ஹர்திக்.

இந்த வீடியோவுக்கு உடனே பதிலளித்த க்ருணால் பாண்ட்யா, தன்னுடைய வீடியோ ஒன்றை பகிர்ந்தார். அதில், 25 வயதான ஹர்திக் பாண்ட்யாவை ஏமாற்றுவதை காணலாம்.

"ஹாஹாஹா, இது அருமையாக உள்ளது. ஆனால், நீங்கள் ஏன் இந்த வீடியோவை பகிரவில்லை????? @hardikpandya7," என்று ட்விட் செய்தார்.

உலகக் கோப்பைக்கு பிறகு ஹர்திக் பாண்ட்யாவுக்கு இது முதல் போட்டியாகும். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று வடிவிலான போட்டிகளுக்கு ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதில், இந்தியா அனைத்து தொடர்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 டி20 போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது. தேர்வுக் குழுவினர் 15 பேர் கொண்ட அணியை ஆகஸ்ட் 29ம் தேதி அறிவித்தது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டிகளை வென்ற பிறகு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரை விராட் கோலி வழிநடத்தவுள்ளார்.

ராணுவத்தில் சேவை செய்ய தோனி இரண்டு மாதங்கள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் அவர், தென்னாப்பிரிக்கா தொடரில் இடம்பெறவில்லை.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி தர்மசாலாவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்  தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா நீக்கம்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா நீக்கம்!
புதிய தேர்வுக்குழு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அணியை தேர்வு செய்யவுள்ளது - கங்குலி!
புதிய தேர்வுக்குழு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அணியை தேர்வு செய்யவுள்ளது - கங்குலி!
வருங்கால மனைவி நடாசாவுடன் அபிமான படத்தை பகிர்ந்த ஹர்திக் பாண்ட்யா!
வருங்கால மனைவி நடாசாவுடன் அபிமான படத்தை பகிர்ந்த ஹர்திக் பாண்ட்யா!
"இந்த அற்புதமான உணர்வைத் தவறவிட்டேன்" - பயிற்சியின் போது ஹர்திக் பாண்ட்யா!
"இந்த அற்புதமான உணர்வைத் தவறவிட்டேன்" - பயிற்சியின் போது ஹர்திக் பாண்ட்யா!
"என்ன நடக்கும் என்று அப்போது எங்களுக்கு தெரியவில்லை" - ஹர்திக் பாண்ட்யா!
"என்ன நடக்கும் என்று அப்போது எங்களுக்கு தெரியவில்லை" - ஹர்திக் பாண்ட்யா!
Advertisement