''என் குடும்பம் இவர்கள் இருக்குமிடத்தில் இருக்காது'' - பாண்ட்யா பற்றி ஹர்பஜன்!

Updated: 12 January 2019 17:58 IST

ஆஸ்திரேலிய தொடருக்கு மட்டுமின்றி நியூசிலாந்து தொடருக்கும் இவர்களுக்கான மாற்று வீரர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Don
ராகுல் மற்றும் பாண்ட்யா இருவரையும் சஸ்பெண்ட் செய்ததற்காக பிசிசிஐ முடிவை பாராட்டியுள்ளார் ஹர்பஜன் சிங். © AFP

டிவி நிகழ்ச்சியில் பெண்களை பற்றி சர்ச்சையான கருத்துகளை பகிர்ந்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ராகுல் மற்றும் பாண்ட்யா பற்றி ஹர்பஜன் சிங் மிகவும் கடுமையான கருத்தை கூறியுள்ளார். ''நான் என் மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் இடத்தில் இவர்களை அனுமதிக்கமாட்டேன். ஒரே பேருந்தில் இவர்களோடு என் குடும்பத்தினர் பயணிக்க வேண்டும் என்றால் அதனை செய்ய  மாட்டேன். பெண்களை பற்றிய இவர்களது பார்வை தவறு" என்று குறிபிட்டுள்ளார்.

மேலும், "இவர்கள் இப்படி பேசுவதை பார்த்தால் மக்களும், நண்பர்களும் என்ன நினைப்பார்கள். ஹர்பஜன், கும்ப்ளே, சச்சின் எல்லாருமே இப்படிப்பட்டவர்கள் தானா என்ற எண்ணம் தோன்றும். இதனை இவர்கள் செய்தது தவறு" என்று குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக பிசிசிஐ வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்டுள்ள தகவலில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் கிரிக்கெட் ஆடுவதிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை பாதி சுற்றுப்பயணத்தில் இருந்து நாடு திரும்ப சொல்லியுள்ளது பிசிசிஐ. ஒழுங்கு நடவடிக்கையின் பெயரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. தேர்வுக்குழு விரைவில் இவர்களுக்கான மாற்று வீரர்களை அறிவிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய தொடருக்கு மட்டுமின்றி நியூசிலாந்து தொடருக்கும் இவர்களுக்கான மாற்று வீரர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக பிசிசிஐயின் நிர்வாக குழு இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் இருவருக்கும் நோட்டிஸ் அனுப்பியிருந்தனர். டிவி நிகழ்ச்சியில் பெண்கள் குறித்த கருத்துக்களை முன் வைத்ததற்காக மன்னிப்பு கேட்க சொல்லி விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கருத்துகளுக்காக இருவரிடமும் 24 மணி நேரத்துக்குள் விளக்கம் கேட்டு பிசிசிஐ எச்சரிக்கை நோட்டிஸ் அனுப்பியிருந்தது. 

"பாண்ட்யா அளித்த  விளக்கத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை" என்று நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார். இதனால் இரு வீரர்களுக்கு இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஆட தடை விதிக்க பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் எதுல்ஜியின் முடிவும் வந்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

பிசிசிஐ இருவரையும் இப்போது சஸ்பெண்ட் செய்துள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
''அணிக்கு பாண்ட்யாவின் தேவை அதிகம்'' - தவான் ஆதரவு
''வெளியே செல்லவில்லை... போனை எடுக்கவில்லை'' வருத்ததில் வீட்டில் முடங்கிய பாண்ட்யா!
ஆஸி.க்கு எதிரான தொடரில் விளையாட தமிழக வீரர் விஜய் சங்கருக்கு அழைப்பு
ஆஸி.க்கு எதிரான தொடரில் விளையாட தமிழக வீரர் விஜய் சங்கருக்கு அழைப்பு
டிவி ஷோ சர்ச்சை : ராகுல், பாண்ட்யா சஸ்பெண்ட் பிசிசிஐ அதிரடி முடிவு
டிவி ஷோ சர்ச்சை : ராகுல், பாண்ட்யா சஸ்பெண்ட் பிசிசிஐ அதிரடி முடிவு
''என் குடும்பம் இவர்கள் இருக்குமிடத்தில் இருக்காது'' - பாண்ட்யா பற்றி ஹர்பஜன்!
Advertisement