விரைவில் ஓய்வை அறிவித்துவிடுங்கள் தோனி: ஒரு ரசிகனின் வேண்டுகோள்!

Updated: 09 July 2019 09:31 IST

தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு, ஐசிசி அவருக்கென ஒரு சிறப்பான காணோளியை வெளியிட்டிருந்தது. அதில் "தோனி என்பது வெறும் பெயரல்ல, உலகின் பல கோடி மக்களின் நம்பிக்கை''.என கூறியிருந்தது.

Happy Birthday MS Dhoni: Please announce the retirement Dhoni:  A Fan
HBD Mahendra Singh Dhoni: 38வது பிறந்தநாளை கொண்டாடும் தோனி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு நேற்று பிறந்தநாள். அவருடைய பிறந்தநாளை, தோனி மட்டுமின்றி அவருடையே மொத்த ரசிகர்கள் பட்டாளமே கோலாகமாக கொண்டாடியது. ஸிவா தோனியுடன் ஆட்டம், சாக்ஷி மற்றும் ஹர்திக் என ஒரு பெரிய பட்டாளத்துடன் தன் பிறந்தநாள் கொண்ட்டாத்தை துவங்கினார் தோனி. இந்த கொண்டாட்டம் மொத்த இந்திய அணியுடனும் தொடர்ந்தது. 

வழக்கமாக, தோனிக்கு பிறந்தநாள் என்றால் 'சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் மூன்று கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஸ்டம்பிங்களை செய்த விக்கெட் கீப்பர், ஒருநாள் போட்டிகளில் 9 முறை சிக்ஸ் அடித்து ஆட்டத்தை முடித்த ஒரு 'சிறந்த பினிசர்'(Best Finisher), சர்வதேச போட்டிகளில் கேப்டனான அதிக சிக்ஸ் அடித்த வீரர், கடந்த 140 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவை 'வொய்ட் வாஷ்' செய்த ஒரே கேப்டன், ஒருநாள் பேட்ஸ்மென்கள் தரவரிசை பட்டியலில் மிக விரைவில் முதலிடத்தை பிடித்த வீரர் (சர்வதேச போட்டிகளில் விளையாடத் துவங்கி சுமார் 1.5 வருடங்களிலேயே ரிக்கி பான்டிங்கை முந்தி தரவரிசையில் முதலிடத்தை பிடித்தார்), கேப்டனாக அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர் (332 போட்டிகள்)' என அவருடைய சாதனைகளை அடுக்குவார்கள். ஆனால், இந்த முறை...?

'நான் இறக்கும்போது, கடைசியாக நான் பார்க்க விரும்புவது 2011 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் தோனி அடித்த அந்த சிக்ஸ்' என கூறுகிறார் கவாஸ்கர் (Sunil Gavaskar).

'தோனிதான் இந்தியாவின் தலைசிறந்த கேப்டன்' என மகுடம் சூட்டுகிறார், இந்தியா கண்ட ஒரு தலை சிறந்த கேப்டன் கங்குலி (Ganguly).

'தோனி ஒரு தரமான கிரிக்கெட் வீரர். அவரது புள்ளி விவரங்கள் அதை நிருபிக்கும்' - மைக்கேல் கிளார்க் (Michael Clarke).

'எம்.எஸ். அடுத்த கில்கிரிஸ்ட் அல்ல. அவர் முதல் தோனி' - ஆடம் கில்கிரிஸ்ட் (Adam Gilchrist).

'தோனிதான் எனது நாயகன்' - கபில் தேவ் (Kapil Dev).

என்றும் ரசிகர்களால் கேப்டன் கூள் (Captian Cool) என அழைக்கப்படும் வீரர்

சிறந்த பினிசர், தலைசிறந்த கேப்டன், நல்ல பேட்ஸ்மென், சிறந்த விக்கெட் கீப்பர், அனைத்திற்கும் மேலாக கபில் தேவ் உட்பட பலருக்கு இவர்தான் 'நாயகன்'. 

kq6mopng

இவ்வாறெல்லாம் போற்றப்பட்ட தோனியின் இந்த பிறந்தநாள் கதையே வேறு. இந்த முறை, தோனியின் பிறந்தநாளிற்கு 'எப்போது உங்கள் ஓய்வை அறிவிக்கப் போகிறீர்கள் தோனி?' (When Dhoni is going to retire?) என்ற கேள்வியை பரிசாக அளித்துள்ளோம். இதுவரை இவரின் சாதனை பட்டியலிட்டுக் கொன்டிருந்த நாம், தற்போது 'விரைவில் ஓய்வு பெற்றுவிடுங்கள் தோனி' என கூறிக்கொண்டுள்ளோம். இணையத்தில், தோனியின் பெயரை தேடினாலே, 'தோனி எப்போது ஓய்வு பெறப்போகிறார்?" என்ற கேள்விதான் முன் வந்து நிற்கிறது. இந்த ஆண்டு நடைபெற்றுக்கொண்டிருக்கும் உலகக்கோப்பையை இந்தியா வெல்வதை விட, நமது ஆர்வம் தோனி ஓய்வு பெற வேண்டும் என்பதில்தான் நிலைநின்று கொண்டிருக்கிறது. ஏனென்றால், தோனி மிகவும் மெதுவாக விளையாடுகிறார். ஆம், ஆப்கானுடனான போட்டியில் இவர் மெதுவாகத்தான் விளையாடினார். ஆனால், இங்கிலாந்துடனான போட்டியில், 31 பந்துகளில் 42 ரன்களை மட்டுமே குவித்திருந்தார். ஆனால், 'இந்த மெதுவான ரன் குவிப்பினால், இந்திய அணி இங்கிலாந்திடம் தோல்வியடைந்துவிட்டது. இந்த தோல்விக்கு தோனி என்ற ஒரே மனிதர்தான் காரணம். அதனால், உடனே உங்கள் ஓய்வை அறிவித்து விடுங்கள்' என இணையத்தில் அனைத்து பகுதிகளிலிருந்தும் செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது.

"ஆமாம் தோனி, அவர்கள் கூறுவது சரிதான். நீங்கள் விரைவில் ஓய்வை அறிவித்து விடுங்கள். அப்படி ஓய்வை அறிவித்துவிட்டால் உங்களுக்கு இந்த பிரச்னையெல்லாம் இருக்காது. நீங்கள் உடலையும், மனதையும் வருத்திக்கொண்டு, இந்தியாவிற்காகவும் ரசிகர்களாகிய எங்களுக்காகவும் விளையாட வேண்டிய தேவை இருக்காது.

ujjg6p0g

முதலில், உங்களை விமர்சிக்க பெரிதும் காரணமாக இருந்த உலகக்கோப்பையின் இங்கிலாந்து அணியிடனான போட்டி. இந்த போட்டியில் இந்திய அணி 31 ரன்களில் தோல்வியடைகிறது. இறுதி வரை போராடி, நீங்கள் 31 பந்துகளில் 42 ரன்களை சேர்த்திருந்தீர்கள். உங்களில் இந்த மெதுவான ஆட்டத்தினால்தான் இந்த தோல்வி நேர்ந்தது என்றார்கள். இது ஒன்றும் மெதுவான ஆட்டமல்ல, அது வேறு கதை. இந்த போட்டியில்,உங்கள் விரல்களில் அடிபட்டு ரத்தம் வந்துகொண்டிருந்த போதும்கூட நீங்கள் இந்திய அணிக்காக போராடிக்கொண்டிருந்தீர்கள். ஆனால், உங்களை விமர்சிப்பவர்களின் கண்களுக்கு அதெல்லாம் தென்படவில்லை. ஒருவேளை, நீங்கள் ஓய்வு பெற்றிருந்தால் இந்த நிலை இருந்திருக்காது. கையில் அடிபட்ட நேரத்திலும் கடுமையாக போராடி விமர்சனத்திற்கு ஆளாக வேண்டிய நிலை இருந்திருக்காது.

இவ்வாறு, நீங்கள் உடலை வருத்திக்கொண்டு விளையாடுவது முதல்முறையல்ல. நீங்கள் இந்தியாவிற்காக விளையாடத் துவங்கிய காலத்திலேயே தொடங்கியதுதான். அது 12 ஏப்ரல் 2006, சர்வதேசப் போட்டிகளில் விளையாடத் துவங்கி 2 வருடங்கள் கூட பூர்த்தியாகவில்லை. இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில், 224 ரன்கள் குவித்திருந்தது இந்திய அணி. ஒருவேளை நீங்கள் அப்போதே ஓய்வை அறிவித்திருந்தால், முதுகுவலியுடன் அந்த ஐஸ் பேக்கை முதுகில் கட்டிக்கொண்டு, 96 ரன்கள் குவித்திருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது.

qugr3qd

இந்த மாதிரி, உங்கள் சர்வதேச கிரிக்கெட் பயணம் துவங்கியதிலிந்து, தற்போது வரை, உங்கள் உடலை வருத்திக்கொண்டு விளையாட வேண்டிய தேவை இருந்திருக்காது.

ஒருவேளை 2007-ல் நீங்கள் சில தோல்விகளை சந்திப்பதற்கு முன்பே ஓய்வை அறிவித்திருந்தால், உங்களின் வீடு சேதமடைந்திருக்காது.

ஒருவேளை, நீங்கள் முன்பே உங்களின் ஓய்வை அறிவித்திருந்தால், இந்தியா ஒவ்வொரு முறை தோல்வியை சந்திக்கும்போதும், விமர்சனங்களை உங்களின் தலையில் தூக்கி சுமந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.

ஐசிசி (ICC) குறிப்பிட்டதுபோல, இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றிய ஒரு பெயராக நீங்கள் இருந்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

87c9dec8

இதுமட்டுமல்ல, ஒருவேளை நீங்கள் ஓய்வு பெற்றிருந்தால் இன்னும் உங்களுக்கு பல சலுகைகள் கிடைத்திருக்கும். ஸ்டம்ப்களுக்கு பின் நின்று மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் (Lightning Speed Stumping) செய்ய வேண்டி இருந்திருக்காது. அணியில் அனைவரும் தோல்வி அடைந்தாலும், ஒற்றை ஆளாக நிற்று போராட வேண்டிய நிலையில் இருந்திருக்க மாட்டீர்கள். அனைவரும் ஆட்டமிழந்த பிறகும், தோனி இருக்கிறார் என தொலைக்காட்சியை பார்க்க வைத்திருக்க மாட்டீர்கள். 

உங்கள் கிரிக்கெட் வாழ்க்கை துவங்கியதிலிருந்து, பல சோதனைகள், பல விமர்சனங்கள். இவை அனைத்தையும் கடந்து ஏன் விளையாடுகிறீர்கள் தோனி?"

தோனி தன் வாழ்வில் சந்தித்த சவால்களில் இது வெறும் சொற்பமான விகிதம்தான். ரான்சியில் பிறந்து, கரக்பூர் ரயில் நிலையத்தின் நடைமேடைகளில் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருந்த ஒருவர், இந்திய அணிக்காக ஸ்டம்புகளுக்கு நடுவில் ஒடும் வரை பயணிக்க காரணம் என்ன, ஒரு சாதாரன டிக்கெட் கலெக்டராக துவங்கி, இந்தியாவின் கேப்டனாக மாறும்வரை அவர் பயணிக்க எது உத்வேகம் அளித்தது. அனைத்தும் ஒன்றுதான், தீராக்காதல், இந்த விளையாட்டின்மீது அவர் வைத்திருந்த தீராக்காதல்!

இந்த பன்பை நிச்சயமாக தோனியிடமிருந்து கற்றுக்கொண்டே ஆக வேண்டும்.

தோனி விளையாடத் தொடங்கிய காலத்திலிருந்தே, அவர்மீதான விமர்சனங்களும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அந்த விமர்சனங்களுக்காக அவர் ஓய்வை அறிவித்திருக்க வேண்டுமென்றால், அவர் விளையாடிய முதல் சில போட்டிகளிலேயே ஓய்வை அறிவித்திருக்க வேண்டும். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. 'I have other Ideas!' என்று அவர் கூறியதுபோல, தோனிக்கு எப்போதும் வேறு வழிகள் இருந்தன. ஒவ்வொரு முறை இவரின்மீது விமர்சனங்கள் வைக்கப்படும்போதும், களத்தில் தன் திறனால் பதிலளித்தார். முதல் முறை வைக்கப்பட்ட விமர்சனத்திற்கு சதமடித்து பதிலளித்தது போல, தற்போதைய விமர்சனத்திற்கு அரைசதம் அடித்து பதிலளித்தது போல, ஒவ்வொரு முறையும் இதை செய்ய அவர் தவறியதில்லை.

தோனியின் இந்த பன்பை நிச்சயமாக கற்றுக்கொள்ள வேண்டும்.

e6qaupj8

ஐசிசி தோனிக்கென ஒரு சிறப்பான காணோளியை வெளியிடுகிறது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பது இதுதான்,"தோனி என்பது வெறும் பெயரல்ல, உலகின் பல கோடி மக்களின் நம்பிக்கை''. இந்த பிறந்தநாளில் அந்த பல கோடி மக்களின் ஒருமித்த வேண்டுகோள் என்னவாக இருக்குமென்றால், "கொஞ்சம் உங்களுக்காகவும் விளையாடுங்கள் தோனி!" என்பதுதான்.

மீண்டும் கூறுகிறேன், விரைவில் ஓய்வை அறிவித்துவிடுங்கள் தோனி, கிரிக்கெட்டிற்கு அல்ல, உங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு!

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"கோலி சிறந்த கேப்டனாக ரோஹித் மற்றும் தோனி தான் காரணம்" - கவுதம் கம்பீர்!
"கோலி சிறந்த கேப்டனாக ரோஹித் மற்றும் தோனி தான் காரணம்" - கவுதம் கம்பீர்!
"அவரை வெளியேற்றுவதற்கு முன், தோனியே விலகினால் நல்லது" - சுனில் கவாஸ்கர்
"அவரை வெளியேற்றுவதற்கு முன், தோனியே விலகினால் நல்லது" - சுனில் கவாஸ்கர்
"தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு, கோலி முடிவெடுக்க வேண்டும்": கங்குலி!
"தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு, கோலி முடிவெடுக்க வேண்டும்": கங்குலி!
"பாடம் கற்றுக்கொண்டேன்" - தோனி ஓய்வு வதந்திக்கு பின் கோலி!
"பாடம் கற்றுக்கொண்டேன்" - தோனி ஓய்வு வதந்திக்கு பின் கோலி!
#12YearsOfCaptainDhoni - இந்திய ட்ரண்டாக மாறிய தோனி!
#12YearsOfCaptainDhoni - இந்திய ட்ரண்டாக மாறிய தோனி!
Advertisement