"நிஜ வாழ்க்கையில் சதமடிக்க நான் பிரார்த்திக்கிறேன்" - கும்ளேவை வாழ்த்திய சேவாக்

Updated: 18 October 2019 10:30 IST

அனில் கும்ப்ளேவுக்கு சமூக ஊடகங்களில் கொடுக்கும் வாழ்த்துக்களில்,  முன்னாள் அணியின் வீரர் வீரேந்தர் சேவாக் ஒரு இனிமையான ட்விட் மூலம் பலரின் இதயங்களை வென்றார்.

Happy Birthday Anil Kumble: Virender Sehwag Leads Wishes On Anil Kumbles Birthday With An Apology
அணில் கும்ளே இன்று தன்னுடைய 49வது பிறந்தநாளை கொண்டாடினார். © Twitter

அணில் கும்ளே இன்று தன்னுடைய 49வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்தியாவின் முன்னாள் தலைமை பயிற்சியாளரும், கேப்டனுமான அனில் கும்ப்ளேவுக்கு சமூக ஊடகங்களில் கொடுக்கும் வாழ்த்துக்களில்,  முன்னாள் அணியின் வீரர் வீரேந்தர் சேவாக் ஒரு இனிமையான ட்விட் மூலம் பலரின் இதயங்களை வென்றார். "இந்தியாவின் மிகப் பெரிய போட்டி வெற்றியாளர்களில் ஒருவர் மற்றும் ஒரு அற்புதமான முன்மாதிரி. @anilkumble1074 பாய் உங்கள் இரண்டாம் சதத்தை இழக்க செய்ததற்கு மன்னிக்கவும். ஆனால், நிஜ வாழ்க்கையில் நீங்கள் ஒரு சதம் அடிக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். இன்னும் 51 மட்டுமே தேவை.. வாருங்கள் அனில் பாய்! பிறந்தநாள் வாழ்த்துக்கள்," என்று வீரேந்திர சேவாக் ட்விட்டரில் பதிவிட்டார்.

619 விக்கெட்டுகளுடன் இந்தியாவின் அனைத்து நேரத்திலும் முன்னணி விக்கெட் வீழ்த்தியவர் கும்ப்ளே, மிக நீண்ட வடிவத்தில் அவரது பெயருக்கு ஒரு சதம் உள்ளது. 2007ம் ஆண்டில் தி ஓவலில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் அவர் ஆட்டமிழக்காமல் 110 ரன்கள் எடுத்தார்.

முன்னாள் பந்து வீச்சாளர் சேவாகின் தனித்துவமான பிறந்தநாள் விருப்பத்தை ஒப்புக் கொண்டார்: "நன்றி விரு. நீங்கள் எப்போதும் சொல்வதில் ஒரு சாமர்த்தியம் இருக்கிறது."

சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், "மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர்.. இந்தியாவுக்கு மிகப்பெரிய போட்டியை வென்றவர் ... பிறந்தநாள் வாழ்த்துக்கள் @anilkumble1074 என்னுடைய பவுலிங் பார்ட்னர் மற்றும் குரு." என்று ட்விட் செய்தார்.

சமீபத்தில், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) உரிமையாளரான கிங்ஸ் லெவன் பஞ்சாபின் தலைமை பயிற்சியாளராக கும்ப்ளே நியமிக்கப்பட்டார். ஹர்பஜன் சிங்கிடம் சில உதவிகளை கேட்டுள்ளார் கும்ளே.

"நன்றி பாஜி. "உங்களிடமிருந்து இப்போது சில பஞ்சாபி பாடங்கள் தேவை," என்று ட்விட் செய்தார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
அனில் கும்ப்ளேவை எடுத்துக்காட்டாக பேசிய மோடி... நன்றி தெரிவித்த கும்ப்ளே!
அனில் கும்ப்ளேவை எடுத்துக்காட்டாக பேசிய மோடி... நன்றி தெரிவித்த கும்ப்ளே!
"நிஜ வாழ்க்கையில் சதமடிக்க நான் பிரார்த்திக்கிறேன்" - கும்ளேவை வாழ்த்திய சேவாக்
"நிஜ வாழ்க்கையில் சதமடிக்க நான் பிரார்த்திக்கிறேன்" - கும்ளேவை வாழ்த்திய சேவாக்
"கும்ப்ளேவை தேர்வுக்குழு தலைவராக்குங்கள்" - சேவாக்
"கும்ப்ளேவை தேர்வுக்குழு தலைவராக்குங்கள்" - சேவாக்
பயிற்சிக்கு தாமதமாக வந்தால் 10 ஆயிரம் அபராதம் விதிப்பார் தோனி - பாடி ஆப்டன்
பயிற்சிக்கு தாமதமாக வந்தால் 10 ஆயிரம் அபராதம் விதிப்பார் தோனி - பாடி ஆப்டன்
அனில் கும்ப்ளேவுடன் ஒரே விமானத்தில் சென்ற கிரிக்கெட் ரசிகர்… நெகிழ வைத்த அந்த செயல்!
அனில் கும்ப்ளேவுடன் ஒரே விமானத்தில் சென்ற கிரிக்கெட் ரசிகர்… நெகிழ வைத்த அந்த செயல்!
Advertisement