Listen to the latest songs, only on JioSaavn.com
 

"பேராசையை குணப்படுத்த முடியாது" - மேட்ச் பிக்சிங் குறித்து பேசிய கவாஸ்கர்!

Updated: 24 September 2019 16:22 IST

தமிழ்நாடு பிரீமியர் லீக் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மேட்ச் பிக்சிங்கில் ஈடுப்பட்டனர் என்ற தகவல் வெளியான பிறகு, கவாஸ்கர் இதை கூறியுள்ளார்.

Sunil Gavaskar Speaks On Match-Fixing In Cricket, Says Greed Has No Cure
சுனில் கவாஸ்கர் கிரிக்கெட்டில் மேட்ச் பிக்சிங்கில் இருந்து முற்றிலும் விடுபடுவது கடினம் என்று கருதுகிறார். © Twitter

முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் கிரிக்கெட்டில் மேட்ச் பிக்சிங்கில் இருந்து முற்றிலும் விடுபடுவது கடினம் என்று கருதுகிறார். ஏனெனில் பேராசையால் தூண்டப்பட்ட ஒரு நபர் எப்போதும் இருப்பார், அதை குணப்படுத்த முடியாது என்றார். தமிழ்நாடு பிரீமியர் லீக் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மேட்ச் பிக்சிங்கில் ஈடுப்பட்டனர் என்ற தகவல் வெளியான பிறகு, கவாஸ்கர் இதை கூறியுள்ளார். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. "பேராசை என்பது எந்தவொரு கல்வியும், வழிகாட்டுதலும், ஊழல் எதிர்ப்பு நபர்களின் கருத்தரங்குகளும் உதவப் போவதில்லை. பேராசை என்பது மனிதனுக்குள் இருக்கும் ஒன்று," என்று கவாஸ்கர் 'கிரிக்பஸ்' இணையதளத்தில் கூறினார். 

பெங்களூருவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கவாஸ்கர் இதை கூறினார்.

"மிகச் சிறந்த சமூகங்கள், மிகவும் வளர்ந்த சமூகங்கள் இன்னும் குற்றவாளிகளைக் கொண்டுள்ளன. கிரிக்கெட்டிலும் இதுபோன்ற பேராசை கொண்ட மனிதர்கள் இருப்பார்கள். அந்த நபரை வேறு சிலரும் இதுபோன்ற விஷயங்களை செய்ய தூண்டுவார்கள். இப்படிப்பட்ட விஷயங்களை கட்டுப்படுடத்த முடியாது என்று நான் நினைக்கிறேன்," என்றார்.

தவறு செய்பவர்கள் இனி தப்பிக்க முடியாது என்று வலியுறுத்தினர் கவாஸ்கர்.

"சில நேரங்களில் சூழ்நிலைகள் ஒரு வீரரை 'நான் அதை விட்டு வெளியேற வேண்டும்' என்று தோன்றும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் நீங்கள் தப்ப முடியாது. அதை தொலைக்காட்சிகள் பதிவு செய்து விடுகின்றன. நீங்கள் ஏதோ தவறு செய்திருக்கிறீர்கள் என்று வெளிகாட்டி விடும்," என்றார்.

முன்னாள் வலது கை வீரர், டி.என்.பி.எல் போன்ற உள்நாட்டு லீக்குகளை ஆதரித்தார். அவர்கள் புதிய திறமைகளை வெளிக்கொண்டு வருவதாக கூறினர்.

"எடுத்துக்காட்டாக, கர்நாடக பிரீமியர் லீக், உட்புறங்களில் இருந்து வந்தவர்களின் எண்ணிக்கை அதிகம், இல்லையெனில் கர்நாடக வீரர்களில் மிகச் சிறந்தவர்களைப் பார்த்திருக்க முடியாது," என்று அவர் சுட்டிக்காட்டினார்.

"அதேபோல் தான் டிஎன்பிஎல் மற்றும் இந்தியாவில் நடக்கும் மற்ற போட்டிளும். இந்தப் போட்டிகள் நன்றாக உள்ளது. இது இந்திய கிரிக்கெட்டுக்கு அதிக திறமைகளை அளிக்கிறது. இது இல்லையெனில் பல வீரர்களின் திறமைகள் பயன்படுத்தப்படாமல் போயிருக்கும்," என்றார் கவாஸ்கர்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"கங்குலி பிசிசிஐ தலைவராக இருப்பதால் கோலி அவரை பாராட்டுகிறார்" - சுனில் கவாஸ்கர்
"கங்குலி பிசிசிஐ தலைவராக இருப்பதால் கோலி அவரை பாராட்டுகிறார்" - சுனில் கவாஸ்கர்
"பேராசையை குணப்படுத்த முடியாது" - மேட்ச் பிக்சிங் குறித்து பேசிய கவாஸ்கர்!
"பேராசையை குணப்படுத்த முடியாது" - மேட்ச் பிக்சிங் குறித்து பேசிய கவாஸ்கர்!
"4வது இடத்தில் யார் ஆட வேண்டும்?" - அமிதாப் பச்சனைப் போல் கேட்ட கவாஸ்கர்!
"4வது இடத்தில் யார் ஆட வேண்டும்?" - அமிதாப் பச்சனைப் போல் கேட்ட கவாஸ்கர்!
"அவரை வெளியேற்றுவதற்கு முன், தோனியே விலகினால் நல்லது" - சுனில் கவாஸ்கர்
"அவரை வெளியேற்றுவதற்கு முன், தோனியே விலகினால் நல்லது" - சுனில் கவாஸ்கர்
"வாழ்க்கையை வாழுங்கள்": பும்ராவின் பந்துவீச்சை விமர்சித்தவர்களுக்கு கவாஸ்கரின் பதில்!
"வாழ்க்கையை வாழுங்கள்": பும்ராவின் பந்துவீச்சை விமர்சித்தவர்களுக்கு கவாஸ்கரின் பதில்!
Advertisement