ஒருநாள் போட்டிகளின் தலைசிறந்த வீரர் கோலி - க்ளார்க் புகழாரம்!

Updated: 21 January 2019 20:57 IST

கோலி 219 ஒருநாள் போட்டிகளில் 59 சராசரியுடன் 10385 ரன்களை குவித்துள்ளார். இதில் 39 சதங்களும் அடங்கும். 

Virat Kohli Is The Greatest ODI Batsman Ever, Says Michael Clarke 
Virat Kohli: "விராட் கோலி, டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் போட்டியில் தலைசிறந்தவீரர்" மைக்கேல் க்ளார்க் © AFP

"இந்திய கேப்டன் விராட் கோலிதான் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்" என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் க்ளார்க் கூறியுள்ளார். இதுவரை ஒருநாள் போட்டிகளை ஆடிய சர்வதேச வீரர்களிலேயே விராட் கோலிதான் சிறந்தவர் என்று மைக்கேல் க்ளார்க் குறிப்பிட்டுள்ளார்.

கோலி 219 ஒருநாள் போட்டிகளில் 59 சராசரியுடன் 10385 ரன்களை குவித்துள்ளார். இதில் 39 சதங்களும் அடங்கும். 

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் கோலி, ஆஸ்திரேலியாவில் 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று 71 வருடங்களில் இல்லாத புதிய சாதனையை படைத்தார். 

கோலி தலைமையிலான அணிதான் முதல்முறையாக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ஒரு தொடரையும் இழக்காமல் திரும்பிய அணி என்பதும் குறிப்பிடத்தக்கது. 

கோலியின் தலைமையில் இந்தியா முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை வென்று சாதனை படைத்தது. அது மட்டுமின்றி டி20 தொடரையும் சமன் செய்து, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் தோற்காத அணியாக இருக்கிறது.

விராட் கோலியின் அக்ரோஷத்தை விமர்சிப்பவர்களால் அவரது ஆட்டத்தை குறை கூற முடியாது. அவர்தான் ஒருநாள் போட்டியின் தலைசிறந்தவீரர் என்று க்ளார்க் கூறியுள்ளார்.

அடுத்து கோலி தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடவுள்ளது. 

Comments
ஹைலைட்ஸ்
  • கோலி தலைமையிலான அணி ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரை வென்றது
  • ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் தோற்காத அணியாக இந்தியா உள்ளது
  • கோலி தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக புதனன்று ஆடவுள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் 2வது டி20 போட்டி: எங்கு, எப்போது காணலாம்?
இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் 2வது டி20 போட்டி: எங்கு, எப்போது காணலாம்?
சிறப்பான ஆட்டத்துக்கு பிறகு விராட் கோலியை பாராட்டிய கெவின் பீட்டர்சன்!
சிறப்பான ஆட்டத்துக்கு பிறகு விராட் கோலியை பாராட்டிய கெவின் பீட்டர்சன்!
கெஸ்ரிக் வில்லியம்ஸின் "நோட்புக்" கிண்டலுக்கு பதிலளித்த விராட் கோலி!
கெஸ்ரிக் வில்லியம்ஸின் "நோட்புக்" கிண்டலுக்கு பதிலளித்த விராட் கோலி!
ரிஷப் பன்ட்டை விமர்சித்தவர்களுக்கு பதிலளித்த விராட் கோலி!
ரிஷப் பன்ட்டை விமர்சித்தவர்களுக்கு பதிலளித்த விராட் கோலி!
"பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங்கில் எதிலும் உலகத்தரம் இல்லை" - அப்துல் ரஸாக்
"பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங்கில் எதிலும் உலகத்தரம் இல்லை" - அப்துல் ரஸாக்
Advertisement