"பிசிசிஐ-யை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்" - சவுரவ் கங்குலி

Updated: 07 August 2019 13:05 IST

குப்தா அளித்துள்ள புகாரில் ட்ராவிட் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராகவும், இந்தியா சிமெண்ட்ஸின் துணைத்தலைவராகவும் இருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

BCCI
ட்ராவிட்டுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதற்காக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார் கங்குலி. © AFP

இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பிசிசிஐ நிர்வாகத்தை கடுமையாக சாடியுள்ளார். ட்ராவிட்டுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதற்காக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில் ''புது பேஷனாக இந்திய அணி உள்ளது. கருத்து முரண்பாடு. செய்தி வெளிச்சத்திலேயே உள்ளது. கடவுள்தான் இந்திய கிரிக்கெட்டுக்கு உதவ வேண்டும். ட்ராவிட்டுக்கு பிசிசிஐயிடமிருந்து நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார். 

தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருக்கும் ராகுல் ட்ராவிட்க்கு பிசிசிஐ நோட்டிஸ் அனுப்பியுள்ளது. மத்திய பிரதேச கிரிக்கெட் அசோஷியேசனின் உறுப்பினர் குப்தா அளித்த புகாரின் பேரில் ட்ராவிட்டுக்கு நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளதாக ஓம்பட்ஸ்மேன் தலைவர் ஜெயின் தெரிவித்துள்ளார். 

குப்தா அளித்துள்ள புகாரில் ட்ராவிட் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராகவும், இந்தியா சிமெண்ட்ஸின் துணைத்தலைவராகவும் இருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனை பிசிசிஐ ஓம்பட்ஸ்மன் தலைவர் ஜெயின், ட்ராவிட் மீது அளிக்கப்பட்டுள்ள புகாருக்கு 2 வாரத்துக்குள் விளக்கமளிக்குமாறு நோட்டிஸ் அனுப்புயுள்ளதாக தெரிவித்தார்.

ஆகஸ்ட் 16ம் தேதி ஆஜராகி தனது விளக்கத்தை ட்ராவிட் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதே குப்தாதான் சச்சின் மற்றும் லட்சுமணினின்  இரட்டை பதவி விஷயத்தை வழக்காக தொடர்ந்தது. அதில் இருவரும் ஆலோசனைக்குழுவிலும், ஐபிஎல் அணிகளுக்கும் பணியாற்றுவதாக குற்றம் சாட்டினார்.

டெண்டுல்கர் தான் மும்பை அணியிடமிருந்து ஒரு ரூபாய் கூட வாங்குவதில்லை என்றும், இனி ஆலோசனைக்குழுவில் இடம்பெற போவதில்லை என்றும் அறிவித்தார். இதே நிலைப்பாட்டையே லட்சுமணனும் அளித்தார்.

இன்னோரு உறுப்பினர் அந்த சமயத்தில் கங்குலி மீதும் இதே குற்றசாட்டை வழக்காக பதிவு செய்தார். 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
பிங்க் பால் டெஸ்ட்டின் போது ரசிகர்களுடன் கங்குலி வெளியிட்ட புகைப்படம்!
பிங்க் பால் டெஸ்ட்டின் போது ரசிகர்களுடன் கங்குலி வெளியிட்ட புகைப்படம்!
"ஆஸ்திரேலியாவிலும் பிங்க் பால் டெஸ்ட் வேண்டும்" - மைக்கேல் வாகன்
"ஆஸ்திரேலியாவிலும் பிங்க் பால் டெஸ்ட் வேண்டும்" - மைக்கேல் வாகன்
பிங்க் பால், பிங்க் ஸ்வீட்ஸ், பிங்க் லைட்ஸ்... வாவ் ஈடன் கார்டன்ஸ் - வீடியோ பகிர்ந்த கங்குலி!
பிங்க் பால், பிங்க் ஸ்வீட்ஸ், பிங்க் லைட்ஸ்... வாவ் ஈடன் கார்டன்ஸ் - வீடியோ பகிர்ந்த கங்குலி!
India vs Bangladesh: பிங்க் பால் டெஸ்ட் மூலம் தொடரை கைப்பற்றுமா இந்தியா!
India vs Bangladesh: பிங்க் பால் டெஸ்ட் மூலம் தொடரை கைப்பற்றுமா இந்தியா!
"ஈடன் கார்டனில் பகல்-இரவு டெஸ்ட்டுக்கு கூட்டம் நிரம்பியிருக்கும்" - சவுரவ் கங்குலி!
"ஈடன் கார்டனில் பகல்-இரவு டெஸ்ட்டுக்கு கூட்டம் நிரம்பியிருக்கும்" - சவுரவ் கங்குலி!
Advertisement