தோனி ஸ்டைலில் ஹெலிகாப்டர் ஷாட்! இலங்கையை தெறிக்க விட்ட மேக்ஸ்வெல்!!

Updated: 29 October 2019 12:49 IST

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் 28 பந்துகளே சந்தித்த மேக்ஸ்வெல் 62 ரன்களை எடுத்தார். இந்தப் போட்டியில் 134 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

Glenn Maxwell Does A MS Dhoni In Australia vs Sri Lanka 1st T20I. Watch
சிக்ஸர் பறக்க விடும் க்ளென் மேக்ஸ்வெல். © Twitter

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் தோனி ஸ்டைலில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்தார். 28 பந்துகளில் அவர் 62 ரன்கள் குவிக்க 134 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருக்கிறது. 

இலங்கை கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஞாயிறன்று நடைபெற்ற முதல் 20 ஓவர் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. 

அணியின் அதிரடி வீரர் மேக்ஸ்வெல் 22 பந்துகளில் அரைச்சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 28 பந்துகளில் 62 ரன்களை எடுக்க 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 222 ரன்களை குவித்தது. 

இந்தப்போட்டியில் மேக்ஸ்வெல் தோனி ஸ்டைலில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்தார். பந்து சிக்ஸருக்கு பறக்க ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பினர். 
 
.

இதன்பின்னர் ஆட்டத்தை தொடங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்த ஆட்டம் பிரிஸ்பேனில் நாளை மறுதினம் 30-ம்தேதி நடைபெறுகிறது.  

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"கிரிக்கெட் மேதை" - விக்கெட் வீழ்வதை முன்னதாகவே கணித்த க்ளென் மேக்ஸ்வெல்
"கிரிக்கெட் மேதை" - விக்கெட் வீழ்வதை முன்னதாகவே கணித்த க்ளென் மேக்ஸ்வெல்
ஐபிஎல் ஏல நாளில் பிக் பாஷ் லீக்கில் அதிரடி காட்டிய க்ளென் மேக்ஸ்வெல்!
ஐபிஎல் ஏல நாளில் பிக் பாஷ் லீக்கில் அதிரடி காட்டிய க்ளென் மேக்ஸ்வெல்!
க்ளென் மேக்ஸ்வெல்லுக்கு அதிக விலை கொடுத்தது ஏன்? விளக்கிய அனில் கும்ப்ளே
க்ளென் மேக்ஸ்வெல்லுக்கு அதிக விலை கொடுத்தது ஏன்? விளக்கிய அனில் கும்ப்ளே
IPL Auction 2020: ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட பாட் கம்மின்ஸ்
IPL Auction 2020: ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட பாட் கம்மின்ஸ்
"மனநல ஆரோக்கிய சிக்கல்" கிரிக்கெட்டிலிருந்து தற்காலிக ஓய்வு பெற்ற மேக்ஸ்வெல்!
"மனநல ஆரோக்கிய சிக்கல்" கிரிக்கெட்டிலிருந்து தற்காலிக ஓய்வு பெற்ற மேக்ஸ்வெல்!
Advertisement