"இதில் ஒரு நொடி காதலை கவனியுங்கள்" - தோனி - சாக்‌ஷி குறித்து ஷெல்டன் காட்ரெல்!

Updated: 29 July 2019 12:33 IST

ஷெல்டன் காட்ரெல் தனது ட்விட்டர் பக்கத்தில், தோனியின் வீடியோ ஒன்றுடன், உருக்கமான செய்தியை பதிவிட்டுள்ளார். அதில், "நாட்டு மீதும், மனைவி மீதும் அவரின் அன்பு உத்வேகம் அளிப்பதாக உள்ளது." என்றார்.

Sheldon Cottrell Shares Video Of MS Dhoni, Says "Gives To His Country Beyond Duty"
ராணுவத்தில் பயிற்சி பெற வேண்டி தோனி 2 மாதங்கள் கிரிக்கெட்டில் இருந்து விலகியுள்ளார். © AFP

உலகக் கோப்பையிலிருந்து இந்திய அணி வெளியேறிய பிறகு தோனி தான் சில நாட்களுக்கு தலைப்பு செய்தியாக இருந்தார். இந்த உலகக் கோப்பைக்கு பிறகு தோனி, ஓய்வு அறிவித்து விடுவார் போன்ற விஷயங்கள் வலம்வந்தன. ஆனால், தோனி இதற்கு மௌனமே பதிலாய் அளித்ததால், இந்த பேச்சு தொடரவில்லை. மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயண அணியில் தோனி இடம்பெறுவார் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், அணியில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. தோனியின் ஓய்வு குறித்து எம் எஸ் கே பிரசாத் இடம் கேட்ட போது, ராணுவத்தில் பயிற்சி பெற வேண்டி தோனி 2 மாதங்கள் ஓய்வு அறிவித்துள்ளார் என்று கூறினார்.  டேலிவ் லயட் முதல் கவுதம் கம்பீர் வரை அனைவரும் தோனியின் முடிவு குறித்து பேசினர். இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷெல்டன் காட்ரெல் இதுகுறித்து பேசியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தனது ட்விட்டர் பக்கத்தில், தோனியின் வீடியோ ஒன்றுடன், உருக்கமான செய்தியை பதிவிட்டுள்ளார். அதில், "நாட்டு மீதும், மனைவி மீதும் அவரின் அன்பு உத்வேகம் அளிப்பதாக உள்ளது." என்றார்.

அவருடைய முதல் ட்விட்டில், "தோனி கிரிக்கெட் மைதானத்தில் உத்வேகம் அளிப்பவராக இருப்பார்"ஆனால், "நாட்டுப்பற்றுடனும்" இருக்கிறார்.

அவருடைய இரண்டாவது ட்விட்டில் காட்ரெல், கடந்த வருடம் எடுக்கப்பட்ட தோனியின் வீடியோவை பதிவிட்டிருந்தார். அதில், தான் கவுரவ லெப்டினன்ட் கலோனல் என்பதால் ராணுவ உடை அணிந்து அந்த விருது விழாவில் பங்கேற்றார் தோனி. அதை பகிர்ந்த ஷெல்டன் காட்ரெல், அந்த வீடியோவில் ஒரு நொடி வரும் காதலை கவனித்து சுட்டிக் காட்டி இருக்கிறார்.

இந்திய அணியின் முன்னாள் தோனி கேப்டன் பாராசூட் ரெஜிமெட்டில்  இணைந்தார். காஷ்மீரில் நடக்கும் பயிற்சியில், தோனி இடம்பெற்றுள்ளார். இந்தப் பயிற்சி ஜூலை 31ம் முதல் ஆகஸ்ட் 15ம் வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கலோனலாக உள்ள கிரிக்கெட் வீரர் தோனி வரும் 31-ம் தேதி முதல் ரோந்து செல்கிறார். ஆகஸ்ட் 15-ம் தேதி வரை காஷ்மீர் பகுதியில் தோனி இருக்கும் ராணுவ குழு ரோந்து பணியை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராணுவப்படையுடன் தங்கியிருந்து பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளிலும் தோனி ஈடுபட உள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை, ராணுவ தளபதி, பிபின் ரவாத் என்டிடிவியிடம், ராணுவத்தில் அவரின் கடமையை செய்ய நன்கு ஆயுத்தமாகியுள்ளார் தோனி. மற்ற வீரர்கள் போலவே, பாதுகாவலராக தோனி தன்னுடைய பதவியில் சிறப்பாக செயல்படுவார் என்றார்.

"ஒரு இந்திய குடிமகனுக்கு ராணுவ உடை அளிக்கப்படும் போது, அதற்கான வேலையில் சிறந்த விளங்க வேண்டிய அவசியம் உள்ளது. தோனி தன்னுடைய முதற்கட்ட பயிற்சியை முடித்து, அவருக்கு கொடுத்திருக்கும் பணியை சரியாக முடிப்பார் என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும்" என்றார்.

"தோனி இன்னும் நிறைய பேரை பாதுகாப்பார். ஏனெனில், அவருடன் இன்னும் 106 வீரர்கள் இந்த பணியை செய்யவுள்ளனர். ஏற்கெனவே உள்ள ராணுவ படையினர் சிறப்பான பணியை செய்து வருகின்றனர். அவர்களுடன் சேர்ந்து தோனி பணியாற்றவுள்ளார்."

"நாம் அவரை பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை, அவர் மக்களை பாதுகாத்து அவருக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக முடிப்பார்," என்று ராணுவ தளபதி கூறினார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"தோனிக்கு மாற்று வீரரை இந்தியா கண்டறிந்துள்ளது" - சோயிப் அக்தர்
"தோனிக்கு மாற்று வீரரை இந்தியா கண்டறிந்துள்ளது" - சோயிப் அக்தர்
எம்.எஸ்.தோனியின் பைக் சேகரிப்பு
எம்.எஸ்.தோனியின் பைக் சேகரிப்பு 'ஸ்னீக் பீக்' வீடியோவை பகிர்ந்த சாக்ஷி!
MS Dhoni-ஐ ஒப்பந்தப் பட்டியலில் இருந்து BCCI நீக்கியுள்ளது!!
MS Dhoni-ஐ ஒப்பந்தப் பட்டியலில் இருந்து BCCI நீக்கியுள்ளது!!
இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இன்னொரு சாதனை படைத்த கோலி!
இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இன்னொரு சாதனை படைத்த கோலி!
"தோனி ஒருநாள் போட்டிகளிலிருந்து விரைவில் ஓய்வு எடுக்கக்கூடும்" - ரவி சாஸ்திரி!
"தோனி ஒருநாள் போட்டிகளிலிருந்து விரைவில் ஓய்வு எடுக்கக்கூடும்" - ரவி சாஸ்திரி!
Advertisement