"ரோஹித் என்ன செய்யப் போகிறார் என்பதில் கவனம் செலுத்தாதீர்கள்" - விராட் கோலி!

Updated: 09 October 2019 15:59 IST

டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் ஷர்மா என்ன செய்யப் போகிறார் என்பதில் "கவனம் செலுத்துவதை நிறுத்துங்கள்" என பத்திரிகையாளர்களைக் கேட்டுகொண்டார் கோலி.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் ஷர்மா பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறார். இந்திய கேப்டன் விராட் கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு ஒரு இடைவெளி கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக உணர்ந்து, டெஸ்ட் போட்டிகளில் அவர் என்ன செய்யப் போகிறார் என்பதில் "கவனம் செலுத்துவதை நிறுத்துங்கள்" என பத்திரிகையாளர்களைக் கேட்டுகொண்டார். விசாகப்பட்டினத்தில் நடந்த டெஸ்டின் போது ரோஹித் ஷர்மா தனது அனுபவத்தை முன்னணியில் பயன்படுத்தினார் என்றும், அன்றிலிருந்து அவர் தனிப்பட்ட முறையில் சிறந்த இடத்தில் இருக்கிறார் என்றும் விராட் கோலி கருதினார்.

"அவருக்கு கொஞ்சம் ஓய்வு கொடுங்கள். அவர் சிறப்பாக செயல்பட்டார் என்பது உங்களுக்குத் தெரியும், அவர் தனது பேட்டிங்கை ரசிக்கட்டும், அவர் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் விளையாடுவதை ரசித்து விளையாடட்டும். ரோஹித் டெஸ்ட் போட்டிகளில் என்ன செய்ய போகிறார் என்பதில் கவனம் செலுத்தாதீர்கள்," என்று போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் கோலி கூறினார்.

"அவர் ஒரு சிறந்த இடத்தில் இருப்பதாக நான் நினைக்கிறேன், அவர் நன்றாக விளையாடுகிறார். முதல் ஆட்டத்தில் அவர் நிதானமாக இருந்தார், இது மிகவும் அருமையாக இருந்தது. பல ஆண்டுகளாக அவர் குவித்த அனுபவம் முன்னுக்கு வந்தது," என்று அவர் கூறினார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடர் வெற்றியில் இருந்து 120 புள்ளிகளைப் பெற்றது. ஆனால் முதல் பதிப்பிற்குப் பிறகு ஒவ்வொரு அணிக்கும் ஒரு டெஸ்ட் வெற்றிக்கு இரட்டிப்பு புள்ளிகள் வழங்கப்பட வேண்டும் என்று விராட் கோலி பரிந்துரைத்தார்.

"புள்ளிகள் அட்டவணையை உருவாக்க நீங்கள் என்னிடம் கேட்டிருந்தால், வெளிநாட்டு டெஸ்ட் வெற்றிக்கு நான் இருமடங்கு புள்ளிகளைக் கொடுக்க பரிந்துரைப்பேன். இது முதல் பதிப்பிற்குப் பிறகு நான் நிச்சயமாக பார்க்க விரும்புகிறேன்" என்று கோலி கூறினார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டெஸ்ட் புனேவில் வியாழக்கிழமை தொடங்குகிறது, இறுதிப் போட்டி அக்டோபர் 19 முதல் ராஞ்சியில் நடைபெறும்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை தவறவிட்ட விராட் கோலி, முன்னேறும் ஸ்மித்!
டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை தவறவிட்ட விராட் கோலி, முன்னேறும் ஸ்மித்!
“ரன்கள் குவிக்கத் தொடங்கினால் பிரித்வி ஷா மிகவும் ஆபத்தானவர்” - விராட் கோலி!
“ரன்கள் குவிக்கத் தொடங்கினால் பிரித்வி ஷா மிகவும் ஆபத்தானவர்” - விராட் கோலி!
ஆசியா லெவன்-வேர்ல்ட் லெவன்: விராட் கோலியுடன் 6 இந்திய வீரர்கள் தேர்வு?
ஆசியா லெவன்-வேர்ல்ட் லெவன்: விராட் கோலியுடன் 6 இந்திய வீரர்கள் தேர்வு?
“சூழ்நிலைக்கு ஏற்ற மாற்றங்களை இந்திய அணி செய்யவில்லை” - க்ரேக் மெக்மில்லன்
“சூழ்நிலைக்கு ஏற்ற மாற்றங்களை இந்திய அணி செய்யவில்லை” - க்ரேக் மெக்மில்லன்
“அணி தேர்வு அர்த்தமற்றது” - நியூசிலாந்துடனான தோல்விக்கு பின் கபில் தேவ்!
“அணி தேர்வு அர்த்தமற்றது” - நியூசிலாந்துடனான தோல்விக்கு பின் கபில் தேவ்!
Advertisement