"ராகுல் டிராவிட் சொன்ன அடிப்படை மந்திரம் இதுதான்" - சுப்மன் கில்

Updated: 22 August 2019 19:16 IST

சுப்மன் கில், நாட்டின் மிகவும் நம்பிக்கைக்குரிய இளம் திறமைகளில் ஒருவர், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சொன்ன மந்திரத்தை இப்போது வெளிப்படுத்தியுள்ளார்.

Shubman Gill Reveals The Basic Mantra Given By Rahul Dravid
ராகுல் டிராவிட், அண்டர்-19 போட்டிகளிலிருந்தே கில்லை வழிநடத்தி வருகிறார். © Instagram

சுப்மன் கில், நாட்டின் மிகவும் நம்பிக்கைக்குரிய இளம் திறமைகளில் ஒருவர், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சொன்ன மந்திரத்தை இப்போது வெளிப்படுத்தியுள்ளார். இந்த நிலைமைக்கு கொண்டு வந்த "அடிப்படை விளையாட்டை" எப்போதும் விடக் கூடாது என்பது தான் அந்த மந்திரம். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், அண்டர்-19 போட்டிகளிலிருந்தே கில்லை வழிநடத்தி வருகிறார். சமீபத்தில் முடிவடைந்த மேற்கிந்திய தீவுகள் ஏ சுற்றுப்பயணத்தில் இந்தியா ஏ-க்காக பஞ்சாப் பேட்ஸ்மேன் கில் சிறந்த விரராக இருந்தார்.20வது பிறந்தநாளைக்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் நிலையில் இரட்டை சதமடித்த இளம் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதே மேற்கிந்திய தீவுகள் ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடரில் இந்தியா ஏ அணிக்காக கில் அதிக ரன்கள் குவித்தார். மூன்று அரைசதங்கள் உட்பட 218 ரன்கள் குவித்தார்.

டிராவிட் குறித்து பேசிய சுப்மன் கில், "ராகுல் சார் எனக்கு அண்டர் 19 நாட்களிலிருந்தே பயிற்சியளித்து வருகிறார். பின்னஎ இந்திய ஏ அணியிலும் பயிற்சியளிக்கிறார். அவர் சொன்ன அடிப்படை ஆலோசனை உள்ளது, அதை நான் எப்போதும் நினைவில் வைத்திருக்கிறேன். உனக்கு வெற்றி பெற்று கொடுத்த அடிப்படை விளையாட்டை எப்போதும் விட கூடாது என்று அவர் கூறியிருந்தார்."

"என்னுடைய விளையாட்டை நான் மாற்றினால், அது உண்மையானதாக இருக்காது என்றும், வெற்றி பெற்று தராது என்று ராகுல் சார் கூறுவார். சிறந்தவர்கள் முன்வைக்கும் சவாலை நாம் எதிர்கொள்ளும் போது அவரது கவனம் எப்போதும் மன அலங்காரம் மீதுதான் இருக்கும்," என்றார் கில்.

"மிக வேகமாக விக்கெட்டுகள் வீழ்ந்தபோதும் அது என்னைக்கும் ஹனுமன் விஹாரிக்கும் போட்டியை காப்பாற்ற வேண்டும் என்று தோன்றவில்லை. போக்கை எவ்வாறு மாற்றுவது என்பதுதான் நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம்," என்று கில் கூறினார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
இந்தியா vs நியூசிலாந்து: டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் யார்யாருக்கு இடம்!
இந்தியா vs நியூசிலாந்து: டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் யார்யாருக்கு இடம்!
Ranji Trophy: களத்தில் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் சும்பன் கில்!
Ranji Trophy: களத்தில் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் சும்பன் கில்!
விராட் கோலியின் 10 வருட சாதனையை கடந்த சுப்மன் கில்
விராட் கோலியின் 10 வருட சாதனையை கடந்த சுப்மன் கில்
டெஸ்ட் தொடரில் இணைந்த சுப்மன் கில்லுக்கு வாழ்த்து தெரிவித்த அஸ்வின்!
டெஸ்ட் தொடரில் இணைந்த சுப்மன் கில்லுக்கு வாழ்த்து தெரிவித்த அஸ்வின்!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!
Advertisement