"வாழ்க்கையை வாழுங்கள்": பும்ராவின் பந்துவீச்சை விமர்சித்தவர்களுக்கு கவாஸ்கரின் பதில்!

Updated: 03 September 2019 13:30 IST

வழக்கத்திற்கு மாறான நடவடிக்கை இருந்தபோதிலும், அவரது கோடு மற்றும் நீளம், வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து, பல பேட்ஸ்மேன்களுக்கு பழிக்குப்பழி என்பதை நிரூபித்துள்ளது.

Sunil Gavaskar Lashes Out At Those Criticising Jasprit Bumrah
டெஸ்ட் போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய மூன்றாவது வீரர் பும்ரா. © AFP

சர்வதேச போட்டிகளில், ஜஸ்ப்ரித் பும்ரா இந்தியாவின் மிகவும் ஆபத்தான மற்றும் நம்பகமான பந்து வீச்சாளராக உள்ளார். மற்ற பந்துவீச்சாளர்களிடம் இருந்து அவர் மாறுபட காரணம் அவரின் பந்துவீச்சு முறைதான். வழக்கத்திற்கு மாறான நடவடிக்கை இருந்தபோதிலும், அவரது கோடு மற்றும் நீளம், வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து, பல பேட்ஸ்மேன்களுக்கு பழிக்குப்பழி என்பதை நிரூபித்துள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா, கொத்து கொத்தாக விக்கெட்டுகள் வீழ்த்தினார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரண்டாவது நாளில் பும்ரா தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்திக் கொண்டிந்தார். இதனை தொடர்ந்து சுனில் கவாஸ்கர், பும்ராவின் பந்துவீச்சு முறையை விமர்சித்தவர்களை " வாழ்க்கையை வாழுங்கள்" என்று கடுமையாக பதிலளித்துள்ளார். உடன் கமெண்டரி செய்து கொண்டிருந்த இயன் பிஷப், சிலர் பும்ராவின் பந்துவீச்சு முறையற்றது என்று கூறுகிறார்கள் என்ற கேள்விக்கு கவாஸ்கர் இந்த பதிலளித்தார்.

சனிக்கிழமை, கமெண்டரி செய்து செய்து கொண்டிருந்த பிஷப், பும்ராவின் பந்துவீச்சு நடவடிக்கையின் சட்டபூர்வமான தன்மையை 'சிலர்' கேள்வி எழுப்பியதாக கூறினார்: "பும்ராவின் பந்துவீச்சை சட்டபூர்வமான தன்மையை சிலர் கேள்வி எழுப்புவதை என்னால் நம்ப முடியவில்லை.

"அவரின் பந்து வீச்சு தனித்துவமானது, ஆனால், விதிகளுக்கு உட்பட்டதுதான். அவரின் பந்துவீச்சை குறைக் கூறுபவர்கள், தங்களை கண்ணாடியில் பார்க்க வேண்டும், "பிஷப் கூறினார்.

"இதற்கு கமெண்டரியில் இருந்த கவாஸ்கர், தன்னுடைய நிராகரிப்பை தெரிவித்தார், "பும்ராவின் பந்துவீச்சு முறையை கேள்வி எழுப்பியவர்கள் யார்? பெயர் சொல்ல முடியுமா? என்று கவாஸ்கர் கேட்டார்.

"இதை உற்று நோக்கினால், ஒரு சில அடிகள் மற்றும் பின்னர் அவர் வேகத்தை சேகரித்து இறுதியாக பந்தை நேரான கையால் விடுவிப்பார். இதில் எங்கு கை மடங்குகிறது சொல்லுங்கள்? எல்லாம் சரியாக தான் உள்ளது.

"மக்கள் தங்களுடைய வாழ்க்கையை வாழ வேண்டும்," என்றார் கவாஸ்கர்.

பும்ரா இந்த இன்னிங்ஸில் 7/27 என்ற கணக்கில் விக்கெட் வீழ்த்தினார். இதில் மேற்கிந்திய தீவுகள் 117 ரன்கள் குவித்தது. 468 இலக்கை நோக்கி ஆடிய மேற்கிந்திய தீவுகள் 45 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்திருந்தது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"ஆண்டின் பெரிய ஜோக்" - பும்ராவை விமர்சித்த அப்துல் ரஸாக்கை சாடிய ரசிகர்கள்!
"ஆண்டின் பெரிய ஜோக்" - பும்ராவை விமர்சித்த அப்துல் ரஸாக்கை சாடிய ரசிகர்கள்!
உடைந்த ஸ்டம்புகளுடன் புகைப்படம் வெளியிட்ட ஜஸ்பிரீத் பும்ரா!
உடைந்த ஸ்டம்புகளுடன் புகைப்படம் வெளியிட்ட ஜஸ்பிரீத் பும்ரா!
பும்ரா வெளியிட்ட புகைப்படம்... பாலிவுட் நடிகருடன் ஒப்பிட்ட ஹர்பஜன் சிங்!
பும்ரா வெளியிட்ட புகைப்படம்... பாலிவுட் நடிகருடன் ஒப்பிட்ட ஹர்பஜன் சிங்!
"நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்" - பும்ராவின் ட்விட்டுக்கு பதிலளித்த ரசிகர்!
"நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்" - பும்ராவின் ட்விட்டுக்கு பதிலளித்த ரசிகர்!
"பும்ரா எங்கே?" என்ற ரசிகரின் கேள்விக்கு மும்பை இந்தியன்ஸின் பதில்!
"பும்ரா எங்கே?" என்ற ரசிகரின் கேள்விக்கு மும்பை இந்தியன்ஸின் பதில்!
Advertisement