கனடாவை தாக்கிய கிறிஸ் கெயில் புயல்...! - காண்க

Updated: 31 July 2019 14:04 IST

சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் கெயில் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chris Gayle Slams 122 Runs Off 54 Balls In Global T20 Canada League, Takes Twitter By Storm. Watch
இதில் 7 பவுண்டரியும் 12 சிக்ஸர்களும் அடங்கும். © Twitter

கனடாவில் குளோபல் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பல நாட்டை சேர்ந்த வீரர்கள் விளையாடி வருகின்றனர். இந்தியாவின் யுவராஜ் சிங்கும் இதில் அடங்கும். டி20 தொடர் என்றாலே நம் நினைவுக்கு வருபவர் கெயில். அவரும் இந்த தொடரில் விளையாடி வருகிறார்.

வான்கவுவர் நைட்ஸ் – மாண்ட்ரேல் டைகர்ஸ் இடையே நட்ந்ந்த போட்டியில் கெயில் ருத்ரதாண்டவ ஆட்டம் ஆடினார். 54 பந்துகளில் 122 ரன்கள் குவித்து அட்டகாசப்படுத்தினார் கிறிஸ் கெயில். இதில் 7 பவுண்டரியும் 12 சிக்ஸர்களும் அடங்கும். கெயிலின் இந்த ஆட்டத்தால் வான்கவுவர் நைட்ஸ் அணி 20 ஓவர்களில் 276/3 ரன்கள் குவித்தது.

கெயிலை தவிர வான்கவுவர் நைட்ஸ் அணிக்கு தோபைஸ் விஸ்சி 19 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். வான் டெர் தஸ்ஸன் 26 பந்துகளில் 56 ரன்கள் குவித்தார்.

கெயிலின் இந்த ஆட்டத்திற்கு ட்விட்டரில் பலர் தங்களது பாராட்டுகளை பதிவிட்டனர்.

Here are some of the tweets:

இது குறித்து கேயில் கூறுகையில்,'எனக்கு வியர்வை வரவே இல்லை. சதமடித்து அணியை 200 மேல் கொண்டு செல்ல மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு 200 ரன்கள் அடிக்க வேண்டும் என ஆசை. ஆனால் அது நடக்க வில்லை. சிறப்பாக பந்துவீச்சு செய்து இந்த போட்டியை வெல்வோம் என எண்ணுகிறோம்' என்றார்.

ஆனால் மழையால் இந்த ஆட்டம் தடைப்பட்டது. வான்கவுவர் நைட்ஸ் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் கெயில் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
ஹைலைட்ஸ்
  • 54 பந்துகளில் 122 ரன்கள் குவித்து அட்டகாசப்படுத்தினார் கிறிஸ் கெயில்
  • இந்த ஆட்டத்தால் வான்கவுவர் நைட்ஸ் அணி 20 ஓவர்களில் 276/3 ரன்கள் குவித்தது
  • தோபைஸ் விஸ்சி 19 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார்
தொடர்புடைய கட்டுரைகள்
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
"ஓய்வு குறித்து நான் எதுவும் அறிவிக்கவில்லை" - கிறிஸ் கெயில்!
"ஓய்வு குறித்து நான் எதுவும் அறிவிக்கவில்லை" - கிறிஸ் கெயில்!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம்பெற கெயிலுக்கு அழைப்பு!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம்பெற கெயிலுக்கு அழைப்பு!
முதல் ஒருநாள் போட்டி மழையால் தடை... மைதானத்தில் நடனமாடிய கோலி!
முதல் ஒருநாள் போட்டி மழையால் தடை... மைதானத்தில் நடனமாடிய கோலி!
கெயிலின் சாதனையை முறியடிப்பாரா ரோஹித் ஷர்மா?
கெயிலின் சாதனையை முறியடிப்பாரா ரோஹித் ஷர்மா?
Advertisement