"கங்குலி, தோனியை விட விராட் கோலி தான் சிறந்தவர்" - கவுதம் கம்பீர்

Updated: 14 October 2019 11:11 IST

இந்தியாவின் முன்னாள் பேட்ஸ்மேன் கவுதம் கம்பீர் கோலியின் கேப்டன்ஸியைப் பாராட்டினார். மேலும் அவரது முன்னோடிகளிடமிருந்து அவரைத் தனித்து நிற்க வைப்பது எது என்பதை விளக்கினார்.

Gautam Gambhir Rates Virat Kohli As Better Test Captain Than Sourav Ganguly, MS Dhoni
கோலி தலைமையிலான இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 137 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. © AFP

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கோலி தலைமையிலான இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 137 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி முத்திரையிட்டதால், தென்னாப்பிரிக்கா 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால், உள்நாட்டில் தொடர்ந்து 11 டெஸ்ட் தொடர்கள் வென்ற அணியாக இந்தியா உள்ளது. விராட் கோலி ஆட்டமிழக்காமல் 254 ரன்கள் குவித்தார், இது அவரின் ஏழாவது இரட்டை சதம். இந்தியா 601/5 என்ற நிலையில் அறிவித்தது. இது நிபுணர்களிடமிருந்தும் ரசிகர்களிடமிருந்தும் பாராட்டுக்களைப் பெற்றது. வெற்றிக்கு பின்னர், இந்தியாவின் முன்னாள் பேட்ஸ்மேன் கவுதம் கம்பீர் கோலியின் கேப்டன்ஸியைப் பாராட்டினார். மேலும் அவரது முன்னோடிகளிடமிருந்து அவரைத் தனித்து நிற்க வைப்பது எது என்பதை விளக்கினார்.

"நீங்கள் தோற்க பயப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் ஒருபோதும் வெல்ல மாட்டீர்கள், அநேகமாக அது அவருக்குக் கிடைத்த மிகப் பெரிய பிளஸ், அவர் தோற்பதைப் பற்றி பயப்படவில்லை" என்று காம்பீர் போட்டிக்கு பிந்தைய நிகழ்ச்சியில் கூறினார்.

சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் மற்றும் எம்.எஸ். தோனி ஆகியோரை விட கோலியை ஒரு சிறந்த கேப்டனாக மதிப்பிடுவதாக கம்பீர் கூறினார். அவருடைய தலைமையில் தான் இந்தியா வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெறத் தொடங்கியது.

"நாம் சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் மற்றும் எம்.எஸ். தோனி பற்றி மட்டுமே பேசுகிறோம். ஆனால் விராட் உருவாக்கியது என்னவென்றால், இந்தியா வெளிநாடுகளிலும் வெற்றிபெறத் தொடங்கியது" என்று கம்பீர் கூறினார்.

"நிறைய கேப்டன்கள் எடுக்க முடியாத ஆபத்தான முடிவுகளை கோலி எடுத்துள்ளார். ஹார்டிக் பாண்ட்யா ஆல்ரவுண்டராக இருப்பதால், வெளிநாடு சென்று ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடிய ஒரே கேப்டன் விராட் மட்டுமே," என்றார் கம்பீர்.

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் இந்திய கேப்டனாக ஆன கோலி, தனது அணிக்கு முன்னேற்றம் காண "பசி" இருப்பதாக கூறினார்.

"கடந்த மூன்று-நான்கு ஆண்டுகளில் எங்களிடம் உள்ள வீரர்களின் குழுவைப் பெறுவது எங்களுக்கு அதிர்ஷ்டம். எல்லா வீரர்களுக்கும் ஆட்டத்தை சிறப்பாக முடிக்கும் பசியும் ஆர்வமும் மேம்பட்டு வருவதைக் காணும்போது ஆச்சரியமாக இருக்கிறது" என்று ஆட்டநாயகன் விருது பெற்ற கோலி கூறினார்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பைப் பொருத்தவரை, 4 வெற்றிகளுக்குப் பிறகு 200 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • 2வது டெஸ்ட் போட்டியில் 137 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது இந்தியா
  • விராட் கோலி ஆட்டமிழக்காமல் 254 ரன்கள் குவித்தார்
  • முன்னாள் பேட்ஸ்மேன் கவுதம் கம்பீர் கோலியின் கேப்டன்ஸியைப் பாராட்டினார்
தொடர்புடைய கட்டுரைகள்
"பிங்க் பந்து குறித்து கனவு காண்கிறேன்" - ரஹானே பதிவுக்கு பதிலளித்த கோலி, தவான்!
"பிங்க் பந்து குறித்து கனவு காண்கிறேன்" - ரஹானே பதிவுக்கு பதிலளித்த கோலி, தவான்!
கோலி மற்றும் ரஹானே கொல்கத்தாவுக்கு முதலில் வந்ததாக தகவல்!
கோலி மற்றும் ரஹானே கொல்கத்தாவுக்கு முதலில் வந்ததாக தகவல்!
"ஈடன் கார்டனில் பகல்-இரவு டெஸ்ட்டுக்கு கூட்டம் நிரம்பியிருக்கும்" - சவுரவ் கங்குலி!
"ஈடன் கார்டனில் பகல்-இரவு டெஸ்ட்டுக்கு கூட்டம் நிரம்பியிருக்கும்" - சவுரவ் கங்குலி!
இந்தியா vs பங்களாதேஷ்: MS Dhoni-யின் சாதனையை முறியடித்த Virat Kohli....!
இந்தியா vs பங்களாதேஷ்: MS Dhoni-யின் சாதனையை முறியடித்த Virat Kohli....!
India vs Bangladesh: பிசிசிஐ வெளியிட்ட விராட் கோலி, மயங்க் அகர்வாலின் உரையாடல்!
India vs Bangladesh: பிசிசிஐ வெளியிட்ட விராட் கோலி, மயங்க் அகர்வாலின் உரையாடல்!
Advertisement