ஜிம்பாப்வே முன்னாள் கிரிக்கெட் இயக்குநருக்கு 10 ஆண்டுகள் தடை!

Updated: 07 March 2019 20:01 IST

மேற்கண்ட பிரிவுகளின் கீழ் புகார் பதிவு செய்யப்பட்ட இகோபே மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றவர்களுக்கு பாடமாக அமையும் என்று கூறப்படுகிறது.

Former Zimbabwe Cricket Director Enock Ikope Banned For 10 Years By ICC
முன்னாள் இயக்குநர் எனோக் இகோபே அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் 10 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளார். © ICC

ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் முன்னாள் இயக்குநர் எனோக் இகோபே அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் 10 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளார். இதனை ஐசிசி ஊழலுக்கு எதிரான விதிகளில் மூன்று விதிகளின் அடிப்படையில் வழங்கியுள்ளது. ஹச்எம்சிஏ சேர்மனாகவும் , ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் இயக்குநராகவும் இருந்தவர் இவர். ஐசிசியின்  ஊழல் விசாரணை கமிட்டியிடம் முழுமையான ஒத்துழைப்பை வழங்க சொல்லி ஐசிசி தெரிவித்துள்ளது. 

பின்வரும் ஐசிசி விதிமுறைகளின் படி அவருக்கு தடை வழங்கப்பட்டுள்ளது

ஆர்ட்டிகல் 2.4.6 - 2018 ஜனவரியில் கேட்கப்பட்ட ஆவணங்களை சமர்பிக்காதது மற்றும் விசாரணைக்கு செல்போனை வழங்காதது.

ஆர்ட்டிகல் 2.4.7 விசாரணையை தாமதப்படுத்தியது. பிப்ரவரி 2018ல் செல்போனை விசாரணைக்கு சம்ர்பிக்காதது.

ஆர்ட்டிகல் 2.4. 7 விசாரணைக்கு உரிய தகவல்களை ஆணையத்தில் சமர்பிக்காததது.

மேற்கண்ட பிரிவுகளின் கீழ் புகார் பதிவு செய்யப்பட்ட இகோபே மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றவர்களுக்கு பாடமாக அமையும் என்று கூறப்படுகிறது.

ஐசிசி பொது மேலாளர் அலெக்ஸ் மார்ஷல், "கிரீமரை நான் பாராட்டுகிறேன். கேப்டனாக அவரது செயல் வரவேற்கத்தக்கது". ஊழலுக்கு அணுகியதை ஆணையத்தில் தெரிவித்ததற்காக அவரை பாராட்டினார். இந்த விசாரணையில் ஒத்துழைப்பு தந்ததற்காக ஜிம்பாப்வே கிரிக்கெட்டையும் பாராட்டினார்.

Comments
ஹைலைட்ஸ்
  • விசாரணையில் ஒத்துழைப்பு தந்ததற்காக ஜிம்பாப்வே கிரிக்கெட்டை பாராட்டினார்
  • எனோக் இகோபே, 10 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளார்
  • ஐசிசி ஊழலுக்கு மூன்று விதிகளின் அடிப்படையில் தடை விதிக்கப்பட்டுள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
ட்ரை தொடருக்கு பின் ஓய்வு பெறுகிறார் ஜிம்பாப்வேயின் ஹாமில்டன் மசகாட்ஸா!
ட்ரை தொடருக்கு பின் ஓய்வு பெறுகிறார் ஜிம்பாப்வேயின் ஹாமில்டன் மசகாட்ஸா!
"ஒரு முடிவு பலரின் வாழ்க்கையை முடித்துவிட்டது" - ஜிம்பாப்வே வீரரின் உருக்கமான ட்விட்!
"ஒரு முடிவு பலரின் வாழ்க்கையை முடித்துவிட்டது" - ஜிம்பாப்வே வீரரின் உருக்கமான ட்விட்!
ஜிம்பாப்வே முன்னாள் கிரிக்கெட் இயக்குநருக்கு 10 ஆண்டுகள் தடை!
ஜிம்பாப்வே முன்னாள் கிரிக்கெட் இயக்குநருக்கு 10 ஆண்டுகள் தடை!
2013 ஆம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட்டில் வென்ற ஜிம்பாவே!
2013 ஆம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட்டில் வென்ற ஜிம்பாவே!
அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்து பாக்., வீரர் புதிய சாதனை
அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்து பாக்., வீரர் புதிய சாதனை
Advertisement