Listen to the latest songs, only on JioSaavn.com
 

நாட்டுக்கு செல்வதற்காக crowd funding மூலம் பணம் திரட்டும் முன்னாள் நியூசிலாந்து வீரர்!

Updated: 26 March 2020 17:25 IST

நியூசிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இயன் ஓ பிரைன் இங்கிலாந்தில் உள்ள தனது குடும்பத்தினரிடம் செல்ல எதிர்பார்க்கிறார், அதற்காக அவர் ட்விட்டரில் கூட்ட கிரவுட் ஃபண்டிங் (crowd funding) திட்டத்தைத் தொடங்கினார்.

Former New Zealand Fast Bowler Iain OBrien Resorts To Crowdfunding To Raise Money
யாருடனும் வீடியோ அழைப்பு மூலம் கிரிக்கெட் குறித்து பேச தயாராக இருப்பதாக ஐயன் ஓ பிரையன் ட்விட் செய்துள்ளார். © Twitter

நியூசிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இயன் ஓ பிரைன் இங்கிலாந்தில் உள்ள தனது குடும்பத்தினரிடம் செல்ல எதிர்பார்க்கிறார், அதற்காக அவர் ட்விட்டரில் கூட்ட கிரவுட் ஃபண்டிங் (crowd funding) திட்டத்தைத் தொடங்கினார். நியூசிலாந்திற்காக 22 டெஸ்ட், 10 ஒருநாள் மற்றும் நான்கு டி 20 போட்டிகளில் விளையாடிய ஓ'பிரைன், யாருடனும் வீடியோ கால் மூலம் கிரிக்கெட் குறித்துப் பேசத் தயாராக இருப்பதாக ட்விட் செய்துள்ளார். அவர் இப்போது தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசிக்கிறார்.

“சரி, எனவே இந்த விமானத்தில் மீண்டும் நான் இங்கிலாந்துக்குச் செல்ல பணத்தைத் திரட்ட முயற்சிக்கிறேன். என்னிடம் ஒரு யோசனை உள்ளது. யாராவது 20 நிமிட ஸ்கைப் / வீடியோ அழைப்பை விரும்பினால், கிரிக்கெட், அரசியல், மனநலம், சச்சின் போன்ற எல்லாவற்றையும் பற்றிப் பேசுங்கள். நீங்கள் அதைச் செய்ய விரும்பினால், எனக்கு இரண்டு டாலர் அல்லது பவுண்ட் கொடுக்க முடியும் என்றால், எனக்கு நேரடியாக மெசேஜ் செய்யுங்கள்,” என்று அவர் ட்விட் செய்தார்.

உலகெங்கிலும் 20,000க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்ற கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பு தொடங்கியதிலிருந்தே ஓ'பிரைன் இங்கிலாந்துக்குத் திரும்புவதற்கான வழியைத் தேடி வருகிறார். வைரஸ் பரவலால் ஏற்பட்ட உலகளாவிய நெருக்கடியின் பிறகு, உலகெங்கிலும் உள்ள நாடுகளில் பயணத்திற்கு எண்ணற்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

 “எனக்குப் பெரிய விஷயம் என்னவென்றால், என் மனைவிக்கு நுரையீரல் பிரச்னை உள்ளது, அங்கு அவருக்கு எந்தவிதமான மார்பு நோய்த்தொற்று ஏற்பட்டாலும், அது அவரது வாழ்க்கையில் உள்ள நேரத்தைக் குறைத்துவிடும்” என்று பிரைன் கூறினார்.

“இந்த வைரஸ் அவளைக் கொல்லக்கூடும். அவளுக்கு இரண்டு குழந்தைகள் மற்றும் அவளுடைய அம்மாவுக்கு 80 வயதாகிறது, இந்த நேரத்தில் அவளுக்கு இந்த சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த மன அழுத்தத்தில் சிலவற்றை அவளிடமிருந்து குறைக்க நான் ஆர்வமாக இருப்பேன், ஆனால் நான் இப்போது அவளுக்கு அழுத்தத்தை அதிகமாக்குகிறேன் என்று நினைக்கிறேன்.” என்று அவர் கூறினார்.

Comments
ஹைலைட்ஸ்
  • ஐயன் ஓ பிரைன் கிரவுட் ஃபண்டிங் மூலம் பணம் திரட்ட எதிர்பார்க்கிறார்
  • குடும்பத்தினரிடம் திரும்பிச் செல்ல விமான டிக்கெட் முன்பதிவு செய்யவேண்டும்
  • வீடியோ காலில் கிரிக்கெட்டைப் பேசத் தயாராக இருப்பதாக பிரைன் ட்விட்செய்தார்
தொடர்புடைய கட்டுரைகள்
“நீங்கள் சரியாக மீசை வளர்க்கும் போது” - ஓய்வு குறித்து கேள்விக்கு நியூஸி.வீரரின் பதில்!
“நீங்கள் சரியாக மீசை வளர்க்கும் போது” - ஓய்வு குறித்து கேள்விக்கு நியூஸி.வீரரின் பதில்!
தன்னுடைய செல்லப் பிராணிக்கு கேட்ச்சிங் பயிற்சி வழங்கும் கேன் வில்லியம்சன்!
தன்னுடைய செல்லப் பிராணிக்கு கேட்ச்சிங் பயிற்சி வழங்கும் கேன் வில்லியம்சன்!
தொடக்க வீரராக சச்சின் டெண்டுல்கரின் முதல் நாக்... ட்விட் செய்த பிசிசிஐ! #OnThisDay
தொடக்க வீரராக சச்சின் டெண்டுல்கரின் முதல் நாக்... ட்விட் செய்த பிசிசிஐ! #OnThisDay
நாட்டுக்கு செல்வதற்காக crowd funding மூலம் பணம் திரட்டும் முன்னாள் நியூசிலாந்து வீரர்!
நாட்டுக்கு செல்வதற்காக crowd funding மூலம் பணம் திரட்டும் முன்னாள் நியூசிலாந்து வீரர்!
கொரோனா வைரஸ்: மனைவிக்காகக் கவலைப்படும் முன்னாள் நியூசிலாந்து வீரர்!
கொரோனா வைரஸ்: மனைவிக்காகக் கவலைப்படும் முன்னாள் நியூசிலாந்து வீரர்!
Advertisement