கோலி அவுட், தோனி டவுட் - மேற்கிந்திய தொடருக்கான இந்திய அணியில் யார் இடம்பெறுவர்?

Updated: 18 July 2019 19:47 IST

இந்தியா அடுத்தமாதம் மேற்கிந்திய தீவுகளில் சுற்றுலா மேற்கொள்கிறது. அதற்கான அணி நாளை தேர்வு செய்யப்படுகிறது.

MS Dhoni
2019 உலகக் கோப்பை அரையிறுதி தோல்விக்கு பின் தோனி ஓய்வு பெறுவார் என்ற வதந்திகள் கிளம்பின. © AFP

தோனியின் எதிர்காலம் பற்றி இந்திய அணியின் தேர்வுக்குழு யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 2019 உலகக் கோப்பை அரையிறுதி தோல்விக்கு பின் தோனி ஓய்வு பெறுவார் என்ற வதந்திகள் கிளம்பின. எனினும் தோனியின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்தியா அடுத்தமாதம் மேற்கிந்திய தீவுகளில் சுற்றுலா மேற்கொள்கிறது. அதற்கான அணி நாளை தேர்வு செய்யப்படுகிறது. இதில் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

தோனியின் தேர்வு அல்லது நீக்கம் குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை. இந்நிலையில் இந்தியா டி20, ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் ஆகஸ்ட் 3ம் தேதி துவங்கி ஆடவுள்ளது. 

அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்குள் தோனிக்கு பதில் ரிஷப் பன்ட்டை தயார் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது பிசிசிஐ.

கடந்த ஆண்டு மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியா தொடர்களுக்கு தோனி அணியில் சேர்க்கப்பாடாதது போலவே இந்த ஆண்டும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பன்ட் உலகக் கோப்பையில் ஷிகர்தவான் காயமடைந்ததால் அழைக்கப்பட்டார். அதுமட்டுமின்றி இந்த தொடருக்கு கோலி இல்லை என்றால் அவரது இடத்தில் யாரை களமிரக்குவது என்ற சிக்கலில் உள்ளது இந்திய அணி.

இது தவிர கோலி - ரோஹித் மோதலால் ரோஹித்திடம் ஒருநாள், டி20 கேப்டன்ஸி வழங்கப்படலாம் என்ர பேச்சும் அடிபடுகிறது. 

கோலி, பும்ரா இருவரும் டெஸ்ட் தொடரில் இடம்பெறுவார்கள் என்று கூறப்பட்டுவருகிறது. ஒருநாள், டி20 தொடரில் மயன்க் அகர்வால், மணீஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஆகியோரது பெயர்கள் இடம்பெறாலாம் என்றும் , சும்பன் கில், ப்ரித்வி ஷா ஆகியயோரது பெயரும் பரிந்துரையில் உள்ளது. 

ராகுல், பாண்ட்யா, சஹால், குல்தீப் அணியில் வழக்கம் போல இடம்பெறுவார்கள் என்று தெரிகிறது. 

இந்தியா ஏ அணியில் ஆடிவரும் ராகுல், சஹார், இந்திய வீரர் தீபக் சஹால் பெயர்களும் பரிந்துரையில் உள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் பன்ட், சஹால் ஆகியோர் கீப்பராக இடம்பிடிக்கலாம். பன்ட் இதில் முன்னிலை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 3-6 வரை டி20 தொடரிலும், ஆகஸ்ட் 8-14 வரை ஒருநாள் தொடரிலும், ஆகஸ் 22 முதல் செப்டம்பர் 3 வரை டெஸ்ட் தொடரிலும் ஆடவுள்ளது இந்திய அணி.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"தோனிக்கு மாற்று வீரரை இந்தியா கண்டறிந்துள்ளது" - சோயிப் அக்தர்
"தோனிக்கு மாற்று வீரரை இந்தியா கண்டறிந்துள்ளது" - சோயிப் அக்தர்
எம்.எஸ்.தோனியின் பைக் சேகரிப்பு
எம்.எஸ்.தோனியின் பைக் சேகரிப்பு 'ஸ்னீக் பீக்' வீடியோவை பகிர்ந்த சாக்ஷி!
MS Dhoni-ஐ ஒப்பந்தப் பட்டியலில் இருந்து BCCI நீக்கியுள்ளது!!
MS Dhoni-ஐ ஒப்பந்தப் பட்டியலில் இருந்து BCCI நீக்கியுள்ளது!!
இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இன்னொரு சாதனை படைத்த கோலி!
இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இன்னொரு சாதனை படைத்த கோலி!
"தோனி ஒருநாள் போட்டிகளிலிருந்து விரைவில் ஓய்வு எடுக்கக்கூடும்" - ரவி சாஸ்திரி!
"தோனி ஒருநாள் போட்டிகளிலிருந்து விரைவில் ஓய்வு எடுக்கக்கூடும்" - ரவி சாஸ்திரி!
Advertisement