200 போட்டிகளில் ஆடிய முதல் பெண் கிரிக்கெட்டர்: மிதாலி ராஜ் உலக சாதனை!

Updated: 01 February 2019 14:38 IST

36 வயதான மிதாலி ராஜ் 19 வருடங்கள் 219 நாட்களாக அணிக்காக ஆடி வருகிறார். 

Mithali Raj Becomes First Woman Cricketer To Play 200 ODIs
மிதாலி ராஜ் 25 ஜூன் 1999ல் இந்திய அணிக்கு அறிமுகமானார். அவர் அறிமுகமானதிலிருந்து இந்தியா 213 போட்டிகளில் ஆடியுள்ளது. © Twitter

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் இன்று நியூசிலாந்துக்கு எதிராக தனது 200வது போட்டியில் ஆடினார். இந்த போட்டியில் அவர் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதிக போட்டியில் ஆடிய சர்வதேச பெண் வீராங்கனை என்ற பெருமையை வைத்திருந்தார். இதற்கு முன் சார்லேட் எட்வர்ட்ஸ் 191 போட்டிகளில் ஆடியிருந்தார். சமீபத்தில் அதனை மிதாலி முறியடித்தார்.

இந்திய பெண்கள் அணி ஆடியுள்ள 263 ஒருநாள் போட்டிகளில் 200 போட்டிகளில் மிதாலிராஜ் ஆடியுள்ளார்.

மிதாலி ராஜ் 25 ஜூன் 1999ல் இந்திய அணிக்கு அறிமுகமானார். அவர் அறிமுகமானதிலிருந்து இந்தியா 213 போட்டிகளில் ஆடியுள்ளது. அதில் 13 போட்டிகளில் மட்டுமே மிதாலி ஆடவில்லை.

சர்வதேச அளவில் பெண்கள் கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்தவர் மிதாலி தான். அவர் 6622 ரன்கள் குவித்துள்ளார்.

36 வயதான மிதாலி 19 வருடங்கள் 219 நாட்களாக அணிக்காக ஆடி வருகிறார். 

இது ஒட்டுமொத்த அளவில் அதிக நாட்களாக கிரிக்கெட் ஆடியவர்கள் பட்டியலில் நான்காவது இடமாகும். சச்சின் டெண்டுல்கர், ஜெயசூர்யா, ஜாவேத் மியாந்தத் ஆகியோர் மிதாலிக்கு முன் உள்ளனர்.

அதிக ஒருநாள் போட்டிக்கு தலைமை தாங்கிய பெண் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் தான். 123 போட்டிகளுக்கு தலைமை தாங்கியுள்ளார்.

மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்து தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.

Comments
ஹைலைட்ஸ்
  • இந்திய பெண்கள் அணி 263 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளது
  • நியூசிலாந்துக்கு எதிராக போட்டியில் 9 ரன்கள் மட்டும் எடுத்து வெளியேறினார்
  • 36 வயதான மிதாலி 19 வருடங்கள் 219 நாட்களாக ஆடி வருகிறார்
தொடர்புடைய கட்டுரைகள்
விராட் கோலியை மிஞ்சி சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
விராட் கோலியை மிஞ்சி சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
"எனக்கு நன்றாக தமிழ் பேசத் தெரியும்" - விமர்சித்தவருக்கு பதிலளித்த மிதாலி ராஜ்!
"எனக்கு நன்றாக தமிழ் பேசத் தெரியும்" - விமர்சித்தவருக்கு பதிலளித்த மிதாலி ராஜ்!
சர்வதேச கிரிக்கெட்டில் 20 வருடங்கள் கடந்த முதல் பெண் வீரரானார் மிதாலி ராஜ்!
சர்வதேச கிரிக்கெட்டில் 20 வருடங்கள் கடந்த முதல் பெண் வீரரானார் மிதாலி ராஜ்!
"கிரிக்கெட் ஆட சச்சின்தான் காரணம்" - பெண்கள் அணி வீராங்கனை ஷஃபாலி
"கிரிக்கெட் ஆட சச்சின்தான் காரணம்" - பெண்கள் அணி வீராங்கனை ஷஃபாலி
சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் மிதாலி ராஜ்!
சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் மிதாலி ராஜ்!
Advertisement