கிரிக்கெட் வீரர் ஶ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து... காயமின்றி தப்பிய குடும்பத்தினர்!

Updated: 24 August 2019 13:41 IST

திரைப்பட ஷூட்டிங்கிற்காக மும்பையில் இருக்கிறார் ஶ்ரீசாந்த். ஆனால், வீட்டில் அவரின் மனைவி மற்றும் குழந்தைகள் இருந்துள்ளனர். இந்தச் சம்பவம் நள்ளிரவு 2 மணிக்கு நடந்துள்ளது.

Fire Breaks Out At Cricketer S Sreesanth
இந்தச் சம்பவம் ஏற்பட்ட போது ஶ்ரீசாந்த் திரைப்பட ஷூட்டிங்கிற்காக மும்பையில் இருந்தார். © AFP

இந்திய அணியின் முன்னாள் வீரர் ஶ்ரீசாந்த்தின் வீட்டில் தீப்பற்றியுள்ளது. அவரின் வீடு கொச்சியில் உள்ள எடப்பள்ளி என்ற ஊரில் இருக்கிறது. இந்த சம்பவத்தில் யாரும் பாதிப்பு இல்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. திரைப்பட ஷூட்டிங்கிற்காக மும்பையில் இருக்கிறார் ஶ்ரீசாந்த். ஆனால், வீட்டில் அவரின் மனைவி மற்றும் குழந்தைகள் இருந்துள்ளனர். இந்தச் சம்பவம் நள்ளிரவு 2 மணிக்கு நடந்துள்ளது. அவரின் வீட்டு பக்கத்தில் இருக்கும் நபர்கள் புகை மற்றும் நெருப்பை பார்த்தவுடன், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அங்கு வந்தவுடன் ஒரு கண்ணாடி வென்டிலேட்டரை உடைத்து வீட்டிற்குள் இருந்தவர்களை வெளியேற்றினர்.

ஶ்ரீசாந்த் சொன்ன தகவல்படி, தரைதளத்தில் உள்ள ட்ராயிங் ரூமில் தீப்பற்றியதாகவும், அவரின் மனைவி மற்றும் குழந்தைகள் முதல் தளத்தில் இருந்ததாகவும் தெரிகிறது.

சீலிங் ஃபேனில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் தான் தீப்பற்ற காரணமாக இருந்துள்ளது.

குடும்பத்தினர் அனைவரும் வீட்டிலிருந்து வெளியேறி ஶ்ரீசாந்த்தின் வருகைக்காக காத்திருந்தனர்.

27 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய ஶ்ரீசாந்த் 87 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இவர் இரண்டு உலகக் கோப்பையில் இடம்பெற்றுள்ளார். 2013 ஐபிஎல் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதால், பிசிசிஐ அவருக்கு வாழ்நாள் தடை விதித்தது.

முந்தைய வாரத்தில், அவரின் வாழ்நாள் தடை 7 வருடங்களாக குறைக்கப்பட்டதாக பிசிசிஐ ஓம்பட்ஸ்மேன் நீதிபது ஓய்வுப்பெற்ற டி.கே.ஜெயின் கூறினார். அவரின் தடை காலம் செப்டம்பர் 12, 2020 அன்று முடிவடைகிறது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
கிரிக்கெட் வீரர் ஶ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து... காயமின்றி தப்பிய குடும்பத்தினர்!
கிரிக்கெட் வீரர் ஶ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து... காயமின்றி தப்பிய குடும்பத்தினர்!
''பயஸ் ஆடும்போது என்னாலும் முடியும், அணிக்கு திரும்புவேன்'' ஸ்ரீஷாந்த் நம்பிக்கை
ஸ்ரீஷாந்த் மீதான ஆயுள் தடையை நீக்கி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்!
ஸ்ரீஷாந்த் மீதான ஆயுள் தடையை நீக்கி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்!
'அவர் குற்றம் செய்யவில்லை'' ஸ்ரீஷாந்தின் மனைவி பிசிசிஐக்கு உருக்கமான கடிதம்!
‘சச்சின் எனக்காக செய்த அந்த செயல்..!’- ஸ்ரீசாந்த் உருக்கம்
‘சச்சின் எனக்காக செய்த அந்த செயல்..!’- ஸ்ரீசாந்த் உருக்கம்
Advertisement