டெல்லி விளையாட்டு மைதானத்துக்கு அருண் ஜெட்லி பெயர்... ஸ்டாண்டுக்கு கோலி பெயர்!

Updated: 13 September 2019 12:03 IST

ஜெட்லி 1999 முதல் 2013 வரை டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தவர். அதே சமயம் ஒரு ஸ்டாண்டின் பெயர் தற்போதைய இந்திய கேப்டன் கோலியின் பெயரால் அழைக்கப்படவுள்ளது.

டெல்லி  மற்றும் மாவட்ட கிரிக்கெட் வாரியம் ஃபெரோஷா கோட்லா மைதானத்தின் பெயரை அருண் ஜெட்லி என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி மறைந்த அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளது. ஜெட்லி 1999 முதல் 2013 வரை டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தவர். அதே சமயம் ஒரு ஸ்டாண்டின் பெயர் தற்போதைய இந்திய கேப்டன் கோலியின் பெயரால் அழைக்கப்படவுள்ளது. எனினும் மைதானம் பெரோஷா கோட்லா என்றே அழைக்கப்படும் என்று டிடிசிஏ தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வில் பேசிய கோலி டி.டி.சி.ஏ, அவரது குழு உறுப்பினர்கள் மற்றும் அவரது குழந்தை பருவ பயிற்சியாளருக்கு நன்றி தெரிவித்தார். குடும்பத்தாருக்கு நன்றி தெரிவித்த கோலி, 2001ம் ஆண்டு ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை தன்னுடைய சகோதரருடன் காண சென்ற நிகழ்வை பகிர்ந்தார்.

"இன்று நான் வீட்டிலிருந்து கிளம்பும்போது, நான் என் குடும்பத்தினரிடம் ஒரு கதை சொன்னேன்... 2001ம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியை காண டிக்கெட் எடுத்து, வீரர்களிடம் ஆட்டோகிராஃப் வாங்கியது இன்றும் நினைவிருக்கிறது. ஆனால், இன்று அதே மைதானத்தில் எனது பெயரில் ஒரு பெவிலியன் இருப்பது மிக பெரிய மரியாதை," என்றார் கோலி.

இதற்கு முன்பு, டி.டி.சி.ஏ தலைவர் ரஜத் ஷர்மா, உலகிலேயே கோலி தான் சிறந்த வீரர் என்று கூறியிருந்தார்.

டிடிசிஏ தலைவர் ரஜத் ஷர்மா பேசும்போது ''அருண் ஜெட்லி டெல்லியின் பல வீரர்களின் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருந்துள்ளார். கோலி, சேவாக், கம்பீர், நெஹ்ரா, பன்ட் ஆகியோரின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளார். கோட்லா மைதானத்தை புணரமைத்த பெருமையும் ஜெட்லியை தான் சேரும்" என்றார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
டாஸின் போது தென்னாப்பிரிக்காவின் Proxy கேப்டன்... கோலியின் வினோத ரியாக்‌ஷன்!
டாஸின் போது தென்னாப்பிரிக்காவின் Proxy கேப்டன்... கோலியின் வினோத ரியாக்‌ஷன்!
3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் போட டு பிளெசிஸ் வர மாட்டார்... ஏன்?
3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் போட டு பிளெசிஸ் வர மாட்டார்... ஏன்?
இந்தியா vs தென்னாப்பிரிக்கா மூன்றாவது டெஸ்ட்: எங்கு, எப்போது பார்க்கலாம்?
இந்தியா vs தென்னாப்பிரிக்கா மூன்றாவது டெஸ்ட்: எங்கு, எப்போது பார்க்கலாம்?
"கோலி எல்லாவற்றையும் மாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது" - சவுரவ் கங்குலி!
"கோலி எல்லாவற்றையும் மாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது" - சவுரவ் கங்குலி!
"விராட் கோலி உலகின் மிகச் சிறந்த கேப்டன்" - பாராட்டிய சோயிப் அக்தர்!
"விராட் கோலி உலகின் மிகச் சிறந்த கேப்டன்" - பாராட்டிய சோயிப் அக்தர்!
Advertisement