"ஆக்லாந்து ரசிகர்களால் இந்தியாவில் இருப்பதாக உணர்கிறேன்" - நாதன் மெக்குலம்

Updated: 09 February 2019 13:24 IST

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. இதன் மூலம் தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. 

2nd T20I: Nathan McCullum Amazed By Indian Fans In Auckland, Says They Make An Awesome Time For Kids
"குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான தருணம் இது. ஆக்லாந்தில் உள்ள இந்திய ரசிகர்கள் என்னை இந்தியாவில் இருப்பதாகவே உணர வைத்தனர்" என்றார் நாதன் மெக்குலம். © AFP

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. இதன் மூலம் தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.  இந்த வெற்றி குறித்து கூறியுள்ள நியூசிலாந்து முன்னாள் வீரர் நாதன் மெக்குலம் இந்திய அணியின் பந்துவீச்சை பாராட்டியுள்ளார். ஆக்லாந்தில் இருந்த அதிக அளவிலான இந்திய ரசிகர்கள் மைதானத்தை மகிழ்ச்சியாக வைத்துள்ளனர் என்றார்.

அவர் தனது ட்விட்டில் "குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான தருணம் இது. ஆக்லாந்தில் உள்ள இந்திய ரசிகர்கள் என்னை இந்தியாவில் இருப்பதாகவே உணர வைத்தனர்" என்றார்.

இந்த போட்டியில் கேப்டன் ரோஹித் ஷர்மா உலக அளவில் டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்த போட்டியில் ரோஹித் 29 பந்தில் அரைசதமடித்தார்.

கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டதால் ரோஹித் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.

முன்னதாக டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. ஆரம்பத்தில் தடுமாறினாலும் க்ராண்தோம் 50, டெய்லர் 42, வில்லியம்சன் 20 ரன்கள் குவிக்க 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் க்ருணால் பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும், கலீல் அகமது 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத்துவங்கிய இந்தியா, ரோஹித் ஷர்மாவின் அதிரடி அரைசதம், தவான் 30, பன்ட் 40 ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 18.5 ஓவர்களில் இலக்கை எட்டியது. நியூசிலாந்து தரப்பில் பெர்குசன், மிட்செல், சோதி தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இது நியூசிலாந்து மண்ணில் இந்தியாவின் முதல் டி20 வெற்றியாகும். 

இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. தொடரை நிர்ணயிக்கும் கடைசி டி20 போட்டி ஹாமில்டனில் 10ம் தேதி நடைபெறுகிறது.

Comments
ஹைலைட்ஸ்
  • இரண்டாவது டி20 போட்டியை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது
  • நியூசிலாந்து 20 ஓவர்களில் 158 ரன்கள் எடுத்தது
  • "ஆக்லாந்து ரசிகர்கள் என்னை இந்தியாவில் இருப்பதுபோல் உணர செய்தனர்"
தொடர்புடைய கட்டுரைகள்
"ஆக்லாந்து ரசிகர்களால் இந்தியாவில் இருப்பதாக உணர்கிறேன்" - நாதன் மெக்குலம்
"ஆக்லாந்து ரசிகர்களால் இந்தியாவில் இருப்பதாக உணர்கிறேன்" - நாதன் மெக்குலம்
டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்து ரோஹித் ஷர்மா உலக சாதனை!
டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்து ரோஹித் ஷர்மா உலக சாதனை!
நியூசி.,க்கு எதிரான டி20 போட்டி: சர்ச்சையை கிளப்பிய டிஆர்எஸ் முடிவு!
நியூசி.,க்கு எதிரான டி20 போட்டி: சர்ச்சையை கிளப்பிய டிஆர்எஸ் முடிவு!
2வது டி20 போட்டி: இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி! #Highlights
2வது டி20 போட்டி: இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி! #Highlights
Advertisement